அரும் பெரும் வரலாறு கொண்டு ஆசியாவின் அமிர்தமாய் மின்னிக்கொண்டிருந்த தீவொன்று இயற்கை அன்னையின் இருப்பிடமாக ஈழம் எனும் பெயர் கொண்டு தன்னிறைவாய் தாளமிட்ட தீவொன்று மேற்குலக நாடுகள் மெய்சிலிர்த்துப் போகும் மேன்மை வளம் பூத்துக் குலுங்கிய தீவொன்று இப்பார் எனும் பெரும் புள்ளியை கொரானா எனும் சிறு புள்ளி அடக்கியாளும் காலம் தனில் வல்லரசு நாடுகள் வலுவிழந்து நிற்க உலகப் பொருளாதாரம் படுப்பாதாளம் நோக்கி செல்ல எம் ஈழமும் வறுமையின் வாசம் நுகர்ந்து கொண்டிருக்கிறது காலனின் பாசக்கயிறு கணத்து கொண்டு இருக்கிறது எம் தாய் ஈழத்தை கரம் தூக்கி நிமிர்ந்தெழ செய்ய சேயாய் நாம் கரம் நீட்ட வேண்டிய காலமிது விவசாயம் எனும் முதுகெலும்புக்கு போசாக்கு எனும் எழுச்சியூட்டுவோம் சமநிறைவு சமுதாயத்தை சாஸ்திரமாக்குவோம் வருங்கால தலைமுறையை வசந்தமாக்குவோம் தரமான வைத்தியத்தை நாடு முழுவதும் விஸ்தரிப்போம் கல்வி எனும் பேராயுதத்தை இளைய தலைமுறைக்கு இனபேதமின்றி ஒளிரச்செய்வோம் நியாயம் எனும் சொல்லுக்கு வலுவூட்டுவோம் எம் ஈழத்தாய் எழுந்து புன்னகையை உதிரவிட புதல்வர்களாய் எம் கடமையை கண்ணியத்துடன் செய்ய களம் காண்போம். by D. Devapragathi