அழகே ! பேரழகே.. ! - இயற்கை அன்னையின்அரும்பெரும் கொடையே ! இறைவனே இயற்கை - இவ்வியற்கையே இறைவன் ! நாமெல்லாம் இவர்களின் குழந்தைகள் ! பச்சை வண்ண சூழலே ஓவியம் ..! - இருளில் மூழ்கிய இரவை வழியனுப்பி வெளிச்சத்தை பரப்பி... - சாந்தமான பல்வியல் தொடங்கி.... சங்கீதமாய் மலரும் காலைப் பொழுதினை என்னவென்று வர்ணிப்பது நதி என்னும் பெண் மகளின் சந்தோஷ புன்னகையை ! - இயற்கையின் கானம் ரீங்காரமிடும் வண்டுகளும் பூக்களை தழுவும் தேனீ கூட்டமும் இயற்கையின் வர்ணஜாலம்.. ! மண் வாசனை வீசும் அத்தருணம் - தென்றல் பூமி தாயை தழுவும் - அந்த நொடிகளை வர்ணிக்க கவிதைகள் போதவில்லை ! பறவைகளின் கீச்சொலியே - சங்கீத ஸ்வரங்களாக மாறும் ! பூமி தாயின் சுற்றுகையே - நம் பிறவியின் தத்ததுவம் சூழலை பிரகாசிக்க வைக்கும் மின்னல் - மனதை சிறை பிடிக்கும் இடி முழக்கம் ! மேகம் மழையாகப் பொழியும் பூமி தாய் மனம் குளிர்வாள்... இக்காட்சியே இயற்கையின் செய்யுள் இவையெல்லாம் காணும் வரம் - மானிடனாய் பிறந்து ஆறறிவு கொண்ட எமக்கு கிடைத்துள்ளது நம் உணர்வ...