அகிதம் செய்ய வந்ததோ - அகவல் நாட்டின் ஓசையானது அசத்தியம் இதை அழிக்க அரும்பாடு பட்டோம் ஆகண்டலம் படைத்தானோ - அங்கணன் காப்பானோ - அசகாய சூரனாலும் அழிக்க முடியாதெனும் மாயை அகாராத்திரம் அகதி வாழ்வு அழிக்க வந்த ஆட்கொல்லி அகோரம் கொரோனா - இவற்றை அகைக்கும் போதும் ஆழ்கின்றேன். இம்மலக்கத்தையழிக்க மானிடர் ஓன்றித்து மதிசாய்வோம் - உயவையெனும் பனி உதயனால்தான் தீரும் இத்தாவத்தில் தவிப்போருக்கு தாரதம்மியமின்றி தாரிப்போம் கொரோனாவின் கொடுமை கூற வல்லது இதையெண்ணி என் துகிலிகையும் துகைக்கின்றது. By S. Suren kumar M134