Skip to main content

Posts

Showing posts from September 27, 2021

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

28 | YS | ஒழியட்டும் வறுமை ஒளிரட்டும் நம் நாடு

வறுமையை ஒழிக்கவென வரம்பில்லா திட்டங்கள் பல ஒழிந்ததென்னவோ வறுமையில் வாடியவர் தான் வறுமை அல்ல . உழைப்பவன் உயர்கிறான் என்றோர் பழமொழி கேட்டேன் அன்று - அல்ல உழைப்பினை சுரண்டுபவனே உயர்கிறான் இன்று . ஒரு புறம் குப்பை கூடை நிறைய நிறைய உணவு மறு புறம் வயிறு நிறைய கூட ஒரு வேளை உணவில்லை இவற்றை அறியாமை என உதரித்தள்ளிட முடியாது சற்றும் அறிய விரும்பாத மனித மணங்களே காரணம் . உணவை வீணடிக்கும் ஒவ்வொரு கணமும் நினைவில் வரட்டும் உண்ண உணவின்றி தவிக்கும் எம்மவர் குமுறல் . புதியதொரு பூமி செய்வோம் அதிலாவது வறுமை எனும் சொல் அகராதியில் இருந்து அழியட்டும் கொரொனா நிலையுடன் இந்த கொடிய வறுமையும் ஒழியட்டும் மருந்தால் அல்ல நீங்கள் மனம் திறந்தால்...... by R Logini

27 | YS | கொரோனாவின் கொள்ளை

பெருமைக்காக தேடாத ஒன்று! பெற்றதால் பெருமை தேடித் தந்த ஒன்று!.. சுமை என்று நினைத்தவர்க்கு வாழ்வே சுமையாக.. சுகமென்று நினைத்தார்கு வாழ்வெங்கும் சுகமானதே! கல் உடைக்க கையுண்டே.. தடை தகர்க்க கல்வியுண்டே! உணர்ந்தால் வாழ்வே மாறும், உணர மறுத்தால் சமூகம் வீழும். கெட்டிக்காரனுக்கு எதுவும் பாரமில்லை பயின்றவனுக்கு எந்த இடமும் வெளிநாடு இல்லை. தொட்டதெல்லாம் தொல்பொருளாகும் தொன்று பாட தொகை உண்டாகும் கற்ற கல்வியினாலே by C. Sathyapriya F023

26 | YJ | தழைக்க ஏங்கும் செந்நெல்

உணவின் அருமை அறியாது உன்னதமான என்னை அன்று உதாசீனமாய் வீசி எறிந்தாயே சேற்றோடு போராடுபவனின் உழைக்கும் கரங்களால் பிரசவிக்கப்பட்ட செந்நெல் நான்- இன்று என் ஏளனப்பார்வைக்கு முன் நீ விழிகளும் உற்று நோக்கிட போராடும் சிறுமையை விஞ்சிய சிறுமை கொரோனா என்னும் பெயரால் காணாமல் போனது உன் தலைக்கனப் பெருமை அன்று நீ என்னை வீசினாய் இன்று எனக்காக ஏங்குகின்றாய் இத்தனை யுகங்களாக என்னை இரைத்து எறிந்தது போதும் நாளைய உலகை நீ காண இக்கனமே என்னை பூமித்தாயோடு இணையச்செய்வாய் நாளை உன் பசிப்பிணிக்கு நானே மருந்தாக உதிப்பேன். by S. Shakthi

25 | YS | சீரழிக்கும் கொரோனாவும் … கல்வி நிலையும்…

வகுப்பறை மறந்ததே ! கனவுகள் சிதைந்ததே ! எங்கள் கல்வி நம்பிக்கை கத்தி முனையில் தொக்கி நிக்கின்றதே ! கற்கும் மணம் தளர்வடைந்தது.  விடா முயற்சி உன் வருகையினால் சிறகடித்து ஓரிடம் ஒடிங்கிவிட்டது கோரோனாவே ! கற்பவரின் வாழ்வுக்கு கேள்விக்குறி சமமாக  பரவலடைந்த பாடசாலை கல்விக்கு முற்றுப்புள்ளி   பாலகரோ அரிச்சுவடி மறந்தனர் ! சுதந்திரக் கல்வி மணித்தியாலங்களாக சிறைப்பட்டு நிகல்நிலை கல்வி வாழ்வு கோலமாக வடித்தெடுக்கப்படுகின்றது. “கொடிய கால மாற்றம்  கல்விக்கு பாரிய ஏமாற்றம் “! தற்போதைய கல்வி மாணவரிடையே தொட்டிலில் உறங்கி சொப்பணம் காண்கின்றது .  நாம் ஒடுக்கப்பட்டுள்ளோம் ! அடியோடு மாற்றம் ! பண்புதரமான பயிற்சியில்  தொழிநுட்ப வசதியில் ஆளுமைகள் மேம்பட கல்வி இன்று எம் மத்தியில் அரசாங்கத்தின் முழு வகிபாகத்திற்குள் இலவச கல்வியை தொழிநுட்ப மாற்றதிற்குள் உற்புகுத்தியது சூழ்நிலை மாற்றக்களாக  வசதி வாய்ப்புக்கள் சம பங்கெடுப்பாக  மாணவர்களுக்கு கிடைத்த்தாள் நிகழ் நிலை கல்வியும் வெற்றிகரம்  குவிக்கும் ! எழுத்தறிவு வீத மகத்துவம் பாதிக்கப்பட்டது இளைஞர் > யுவதிகள் பாடசாலை கல்வியை வறுமை> பல்தரப்பட்ட சவாலினால் இடை நிறுத

24 | YJ | கொரோனாவால் சீர் குழைந்த கல்வி

நாளைய   சிட்டுக்களாய் பறக்க இருத்த  எம்மை சிறகுடைந்த  பறவைகளாய்  மாற்றி விட்டாய்  நீ உயர்  தரம்  படி  ஏரி  எம்  முதட்  கனவை தொட்டேனே ஆசையாய்  பூத்த எம்மை  வாடி  விட செய்தாயே வளர்த்து  வந்த இலட்சியத்தை அனு  அனுவாய் அளித்தாயே  ஆசானின்  முகம் மறந்து  அறிவின்  நிலை மறந்திருக்கும் நம்மவருக்கு   விடியலை  நீ கொடுக்க  மாட்டாயா நம் நாடு  செழிப்புரவே நாமும் பயின்றிடுவோம் கை  கூப்பி  கேட்க்கிறேன் எம்மவரை  விட்டு விடு By S. Pasmina