விரல்களால் பேனை தொட்டு விதி வசம் நாம் வாழும் - வாழ்வை எழுத எத்தனிக்கிறேன் - மானிடா நீயும் கேளீர் ! இயற்கை வளம்தனிலே இயல்பாய் வாழ்ந்த காலம் போய் எட்டிய தூரமெல்லாம் - ஏழடுக்கு கட்டிடம் காணுகின்ற காலமையா - இங்கு ! வெள்ளைக்காரன் வித்திட்டான் வெளிநாட்டில் உலாவியது ! உலகமே நடுங்கியது ! உயிரும் போனது ! நாகரீக போர்வைதனில் - இங்கு பொல்லாத பூசல்கள் கடல் தாண்டி வந்ததுவே கண்ணறியா வைரஸ் ! கொரோனா என்ற பெயரை கொடூரமாய் சூட்டினர் கொஞ்சி பேசாமல் கொஞ்சமாய் வாயை மூடினர் ! சிட்டாய் பறந்த மனிதன் சிறைப்பட்டான் வீட்டில் உற்றார் , உறவினர்கள் எல்லாம் உற்றுப்பார்க்கும் புள்ளிகளாய் - இங்கு! பசியோடும் பட்டினியோடும் போராடும் வாழ்வு இங்கு பகைவர்களாய் பலரையும் பார்க்கின்ற கணம் இது ! தாய் என்று ஓடவும் முடியவில்லை ! தாரம் என்று பார்க்கவும் இயலவில்லை! தன்னந்தனியே தனிமையிலே எரியுதய்யா சில உயிர்கள் ! தொடர்பாடல் சாதனங்களில் தொடர்ந்து வரும் கல்வி தொகையானோருக்கு இங்கில்லை தொடர்பு சாதனம் என்ற பள்ளி ! மலிவான பொருட்கள் கூட மலையேறி போனது விலைவாசியால் ! வருமானம் இல்லா சூழ்நிலையில் வறுமை கோட்டின் கீழ் பலகோடி மக்கள்