வாழ்வில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு நுண்ணாய்வு கல்வி ! கல்வி என்பது மூன்றெழுத்தில் தொடரும் - சொல் அல்ல வாழ்வின் முடிவு வரை வாழும் செல்வம் கல்வி ! எமது எதிர்காலம் சிறந்த வழிகாட்டலில் அமைய - நாம் பயணிக்கும் முதல் பள்ளி - கல்வியே ! பள்ளி பருவம் அழிவில்லா இன்பம் பிரியும் வழி பள்ளி மட்டுமே கல்வி - அல்ல பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனி - ஆற்றல் உண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் கடல் கடந்த உத்தியோகம் செய்தாலும் கல்வி அறிவு இன்றி எதுவும் இல்லை. கடலின் ஆழம் எதுவரை இருக்கின்றதோ அவ் ஆழத்தை விட கடல் கடந்த நூல் கல்வி தான் ! கண்களில் வண்ண மீன்கள் வரி வரி கோலம் - இட சின்னஞ் சிறு மழலையின் - இன்ப வாழ்வு இன்று புரியா புதிர் அன்று புகழைத் தரும் கல்வியே என்றும் பெரும் செல்வம் கண்ணின் நிலையான விம்பம் ! ஒவ்வொரு மனிதநேய ஆற்றலிலும் - ஒரு திறனாய்வு கல்வி - கல்வியே சிறந்த வழிகாட்டல் ! நல்ல புத்தகத்தை திரட்டி பார்க்கும் - திறனாய்வு கடல் போன்று அறிவை வளரச் செய்யும் புத்தகம் தோல்வி வெற்றி இவற்றை கடந்து - எதிர்கால சந்ததி வர்ண பூக்களாய் - மலர ! கல்...