விடியலும் அஸ்தமனமாகிறது – உன் கோரப்பிடியில் வாசற் கதவைத் திறக்க தயக்கம் ஏதோ மனதில் கதை பேசும் காதலனும் தள்ளிச் செல்கிறான் - தொற்று என்று
பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேள்
உன் நாடகமும் தெருவில் கதை போடும்
உன்னால் சமூக மாற்றம் - பல
உதவும் கரங்களின் தோற்றம்
(சமூக) இடைவெளிகள் தூரம் சென்றாலும்
இன்னும் பின்னடைவு
வாழ்வில் மட்டுமல்ல வளர்ச்சியிலும்
தான் பெற்ற செல்ல மகள்
பூப்படைந்த வேலையில் - தாய்
பூரிக்க நேரமில்லை
நகர் சென்ற தந்தை
வீடு வந்து சேர்க்கையில்
கையில் ஒன்றுமில்லை
நடை போட இடமிருந்தும் - ஊரடங்கு
தடை போட உத்தரவு
மனதை மயக்கும் தென்றலும்
கவசமிட கட்டளை ‘எனக்கும் கொரோனா’ என்று
மேனிக்கிதமான காலை வெயில் கூட
சுடுகிறது – நாம் தரும் இன்னல் எண்ணி
ஓய்வில்லாமல் சப்தமிடும் அலைகள்
ஓய்வெடுக்க எண்ணுகிறது
தினம் தினம் மாற்றம் - நடை போடும்
கொடூர நாடகத்தால்
இதை எண்ணிப்பார்க்க உனக்கு நேரமில்லையோ?
பிறந்த இடத்தில் உன் பிடிப்பு இல்லாதப்போது
புகுந்த இடம் ‘மட்டும் எதற்கு’
கொரோனாவே கடந்து செல்வது
காலங்களை மட்டுமல்ல – எங்கள்
கண்ணீரையும் தான்!
விலகிவிடு எம்மை விட்டுவிடு
இனியாவது வாழவிடு
by Selvanayagam Thilani
Comments
Post a Comment