Skip to main content

Posts

Showing posts from September 30, 2021

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

51 | YS | இயற்கை

அன்னையின்றி அமையாத அவனியிலே... யாம் பெற்ற அருட்கொடையாம்  இயற்கையே..... முகிலினங்கள் ஒன்றோடொன்று முட்டிமோத  முத்துத்துளியாய் மழை பொழிய  வானை முத்தமிடும் மலையைத் தொட்டு;...... நிலத்துடன் காதல் கொண்டு  சிறு அருவியாய் பொழிய  மழைச்சாரல் மண்ணை முத்தமிட்;டதுவே...... சலசலவென புனல் பெருக்கெடுக்க  சிலுசிலுவென பூங்காற்று மேனியை சிலிர்க்கவைக்க  பட்சி இனங்கள் ஆனந்த கீதம் இசைக்க  பூக்கள் பூத்து குளுங்கி மணம் வீச பசுமையின் உறைவிடமாகிய வண்ண சோலையிலே தேனீக்கள் ரீங்காரம் செய்ததுவே...... மண் வாசனையோடு ஓர் பனித்துளி என் கையை நனைத்திட  கடலலைகள் தாலாட்டி ஆதவனை உறங்கவைக்க சுடரொளிக்கும் வெண்மதி  பால் வெண்ணிறமாய் வானிலே பவனிவந்து விண்ணை ஒழிர்வித்ததுவே  ஈசன் அருளிய அவனியிலே  இரு கண் கொண்டு காண இயலா  இயற்கையின் அற்புத காட்சியிது    உள்ளம் உடைந்து மனம் நொந்து  வருத்திடும் மானிடா..... ! இயற்கை கொடையை ..... ஒரே ஒரு தடவை எட்டி பார்த்தாலே போதும்  உன் உள்ளம் தெளிவடைந்து  உத்வேகம் பெற்றிடலாம்  புது ஜனனமும் அடைந்திடலாம் . அதனுடன் நீ ஒன்றித்து விட்டால் பிறப்பதும் உன்னில் இறப்பதும் உன்னில்    நிலையாய் வாழ்வதும் உன்னில்  ந

50 | CJ | சாமிக்கும் இங்கே சங்கடங்கள் நேர்ந்திடுச்சி

சாமிக்கும் இங்கே சங்கடங்கள் நேர்ந்திடுச்சி - பூட்டாத கதவுகளை பூட்டும்படி  ஆயிடிச்சு - மேகங்களை மறைச்சிருந்த வேண்டாத புகையெல்லாம் -  ஓடியே போயிடிச்சே - உலகம் தூய்மை ஆயிடிச்சு விண்ணுக்கு ராக்கெட் விடத்தெரிந்த மனிதனுக்கு மண்ணுக்கு மேலிங்கு மனுஷங்க சாவுறதை நிருத்த  தெரிய வில்லையே, நிலைமை இங்கு சரியில்லை ஏழை பணக்காரன் என்கின்ற பேதமெல்லாம் கொரோனாகிட்ட இல்ல - கும்பிட்டாலும் விடுவதில்லை இத்தாலி ஸ்பெயின் இங்கிலாந்து அமெரிக்காவும் தோத்துப்போச்சு தோள்கொடுத்துச்சு இந்தியா வீட்டை விட்டு வெளியிடத்தில் வீணாக சுற்றுவதை கொரோனா குறைத்துடிச்சு பாட்டுப்பாடி வீட்டுக்குள்ளே பக்குவமா வாழ்கிறதை பழக்க படுத்துச்சி நல்ல கெட்ட மனிதர்களை நாலு பேரு அறிந்திடவே கொரோனா உதவிடுச்சி கொடூரமாய் பிரிச்சு அத்தனை விமானங்களும் ஆங்காங்கு தரையிறங்கிடுச்சி மீண்டும் பறந்திடவே மிகு வேட்டை கொண்டுச்சி தூணிலும் துரும்பிலும் துயர் துடைக்கும் கடவுள் உண்டு என்று நாம் படித்ததுண்டு இப்போது நீ இங்கு கைப்பிடி அவர் காகித பைகளிலும் இருப்பதாக சொல்ல எவரும் அதை தொடுவதில்லை அன்றாடம் உழைத்து உழைத்து அயராது வியர்வை சிந்தும் ஏழைகளை மனதில் வைத்து இற

49 | CS | பொருளாதார கவிதை

நாம் வெற்றியடைவதை நம்மைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது என நம்ப வேண்டும். இதயம் இல்லா இணைய இயந்திரத்தில் நாம்  கண்டெடுக்கும் நல்ல இதயம் கொண்டது நட்பாக இருக்க வேண்டும் என நினைத்திட வேண்டும். வாழ்க்கையில் ஜெயிக்கவேண்டும்  என்றால் முதலில் நம்மை இழிவாக நினைப்பவர்களை நம்மிடம் என்றுமே குறை மட்டும் காண்பவர்களை நம் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கிட வேண்டும். நம் வேலைகளில் வேகத்தடைகள் இருக்கலாம் ஆனாலும் அதன் மேல் நாம் கொண்ட நம்பிக்கையில் சிறிதும் மனத்தடை  வரக்கூடாதென நினைத்திட வேண்டும். இவை அனைத்தையும் நாம் மறவாவிட்டால் நம் வாழ்க்கை நன்று மலரும். நாம் எப்படி நடக்கிறோம் என்பது முக்கியம் இல்லை. மெதுவாக மிதந்தாலும் சரி. வேகமாக விரைந்தாலும் சரி. ஆனால் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தன்னம்பிக்கை என்ற ஒன்றின் மீது  முன்னோக்கி இருந்தால் எமது நாட்டின் பொருளாதாரமும் வானோங்கி வளர்ச்சிப்பெறும். by  V. Pramila

48 | YJ | தொற்றுடன் வாழ்வை மீட்டுதல் பயனே

தொற்றுடன் வாழ்வை வென்றிட துடித்தேன்  என்னையும் காத்து வின்னையும் வெல்வேன் //  வீரத் தமிழன் என்றே உறைப்பேன்  விலைபோகா மனித இனத்தை காப்பேன் //  இணையத்தின் வழியே கற்றதன் பயனை  இணைகிறேன்  நானும் புதிய பாதையில் //  சமூக இடைவெளி தானூம் தொடர்வேன்  சுகாதார விதிமுறை ஏற்றே வாழ்வேன் //  காலத்தின் சோதனை என்பதை மாற்றி காலத்தால் அழியாத சாதனை படைப்பேன் //  ஏழையின் வாழ்வை மாற்றிடச் செய்வேன்  வறுமை இல்லாத உலகம் அமைக்க //  உழைப்பை மட்டும் மூலதனமாக கொண்டு  உயர்வே மனித எண்ணங்கள் தொடர //   நாட்டை காக்க நானும் இணைவேன்  மாற்றம் நமக்குள் தொடரும் வரைக்கும்//  by V. Vijayarani 109

47 | SS | அன்பிற்கினிய அரசாங்கமே! கேளுங்கள்.

என்னோடு வாழப்பழகும் உமது நாட்டின் அபிவிருத்திக்கு சில வழிகள். போதுமான போசாக்கில் பொல்லாப்பாம் வறுமையை வரம் அளித்தேனாம். அயலான நிலத்திலே ஐந்தாறு பயிரிட்டால் வளம்பெற வழியில்லையோ? வீதி தோறும் விதிகளால் நிரம்பியும், விபத்துகளால் விழுந்து போனீர்கள். என் ஒற்றை ஊரடங்கு விதியால் உதிரத்தை வீதி தானம் பெறலில்லையே... வீட்டில் தூங்கி கிடப்பதால் வீணாய் சண்டை போடும் வீணர்களாக்கினேனாம். நகரை விட்டு நகர்ந்து கிராமத்திலும் உங்கள் காவல்துறை கண்காணிப்பில்லையோ? கல்வியில் தடைசெய்து தொழில் வாய்ப்புகள் பறித்தேனென்றீர்கள். ஏழை மாணவர்களுக்கு எட்டா உம் இணைய கல்வி தீர்வாகிடுமோ? பரீட்சைகள் தள்ளி போயினவாம் பல நாள் படிப்பை பாழாக்கி விட்டேனாம். புத்தக பூச்சிகளாக கிடக்கும் பலரில் புது கண்டுபிடிப்புகள் அறியவில்லையோ? புது மரங்களால் நிரப்ப வேண்டிய சூழலை புகை கொண்டு மறைத்தீர். இயற்கை எனக்கும் அன்னை என அவள் புகார் போக்கினேனே... ஆறாய் > குளமாய் > அருவியாய் > கடலாய் நிரம்பிய நீரில் கொட்டி குவித்தீர் குப்பை கூளங்களை. இந் நடத்தை குறைய உம் நடமாட்டம் குறைத்தேன் என சிந்திக்கவில்லையா? இயற்கை அனர்த்தங்களில் அகப்பட்டோருக்கு

46 | SS | கண்ணுக்கு புழப்படா உயிரொன்று

கண்ணுக்கு புழப்படா உயிரொன்று உயிர்கள் பல பறிக்குது இரத்தங்கள் சிந்தாமல் வடுவது படியாமல் அகிம்சை யுத்தமொன்று நிகழுது நீர் வழி வந்ததோ ? நில வழி வந்ததோ ? மழை போலே வான்வழிதான் வந்ததோ ? எவ்வழி வந்தாலென்ன  உயிர்பழி வாங்கிட நம் நாட்டுக்குள்ளும் வந்தது தலை வலி வந்தாலும் உடல் சோர்வு வந்தாலும் காய்சலது வந்தாலும்  நம் நாட்டுக்குள்ளே நமக்குள்ளே தொற்றின் அறிகுறி காட்டுது உயிர் பயத்தை கூட்டுது பீசியார் கணக்கது தொற்றின் எண்ணிக்கையை கூட்டுது தொற்றது கூடவே உயிர் பழியும் கூடுது சற்றென சலனமாய் பதுங்கி கிடக்குது பதுங்கி பாயும் போது துடிக்கும் இதயமும் துடிப்பதை நிறுத்துது ஊரடங்கு போட்டாலும் நடமாட்டங்கள் வழமைதான் பொருள் விலை கூடவே  பசியென்ன குறையுமா? பஞ்சம் வருமுன்னே பட்டினி சாவும் நிகழுமோ ? நம் நாடு அடுத்த சோமாலியா என்று பெயர் வாங்குமோ? தடுப்பூசி வழங்கும் பேச்சி ஒரு புறம் அதன் பக்கவிளைவை சொல்லி பயமுறுத்தும் கூட்டமும் மறு புறம் எது என்ன நடந்தாலும் ஆர்பாட்டமும்  எதிர் புறம் ஏற்றுமதியில்லை இறக்குமதியில்லை. மதி கொண்டு சிக்கல் தீர்ப்பார் யாரென்று  நம் நாட்டில் தெரியவில்லை யாரெங்கு போனாலும் யாரென்ன செய்தாலும் கொ

45 | YS | கொரோனா

ஏன் அங்கிருந்து வந்தாய் எருது பூட்டிய எமனை ஏனோ நீ அழைத்து வந்தாய் அன்றோ ஆகாயத்தை நோக்கினேன்  அழகாய் எம்முடைய ஆயுளை அழித்தாய்  அறிதாய் கொலைகார கொரோனாவே எம்மை கொண்டழித்து போதவில்லையா? உனக்கு போகவே மணமில்லையா? அறிவில்லாத மனிதனை உனக்கு அணிவித்தானா மாலையை நீ அமைதியில்லா போராட்டத்தை ஆரம்பிக்க அவன் குரல் கேட்கிறது ஆனந்த குரல் கேட்கும் இடமெல்லாம் அழுகுரல் கேட்கிறதே . அழைத்து வந்த அன்னைக்கு கூட  அன்னம் அளித்திட வரம் வாய்க்கவில்லையடி இந்த வைரத்தில் அடர்ந்த காட்டுக்குள் அழிக்க முடியாத ஆரம்ப ரகலையில் நம் சேய் நாடே பல தாய் நாட்டில் தஞ்சம் அந்த ரகலையில் பல வித மழைகள் மண்ணுக்குள் மலர்களாகினர் பலர் தீகாட்டிட்குள் தீக்கிரையாகினர் நாம் மாளிகைகளில் வாழவில்லை இருந்தாலும்  மாளிகைகளில்  வாழ்ந்தோம் கஷ்ட்டங்களோடு வாழவில்லை இருந்தாலும் பிறரோடு  கருணையுடன் வாழ்ந்தோம்  கண்ணுக்கு கள்ளிதனம் அதிகரிக்க கொலைகார கொரோனாவை கோவையாக்கி கொண்டான். சாமிகளே சாமிகளே குல தெய்வ சாமிகளே கொடுமையான வைரசே கொண்டு குவிக்கும் வைத்தியமே கொண்டு வந்து சேர்திடு எம் குல தெய்வ சாமிகளே எட்டாத கடன் சாமானை எளிதாய் அதிகரிக்க ஏழாவது இடம் பிடித்து

44 | CS | கொரோனா.... வைரஸ்.... ஒழிய வேண்டும் !...

சுற்றித் திரிந்த இடமெல்லாம்       சுடுகாடாய் மாற்றிவிட்டாய் !  அண்ணன் தம்பி போல பழகியவரையெல்லாம்      எ திரியாக பார்க்க வைத்தாய் ! பசிக்கு உணவு தேடிய உடல்களையெல்லாம்       உனக்கு இறையாக்கி கொண்டாய் ! இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது என்று       சுற்;றித் திரிந்து கொண்டிருக்கிறாய் இங்கு !  உருவத்தில் நீ சிறியவனாக இருந்தாலும்       நீ மிகக் கொடியவன் என உணர்த்திவிட்டாய்  எம் மக்களை சாய்த்து....      உனை கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும் நீ யார் என் காட்டிவிட்டாய்....        உன் முகத்திரையை...  நீ சென்ற இடமெல்லாம் அழுகுரல் கேட்கிறதே !      நீ அடைக்களம் கேட்ட இடமெல்லாம் நிரம்பிப்போய் கிடக்கிறதே உன் தொற்றால் !..      எத்திசையிலும் உனை காண முடிகிறதே..!  உனக்கு என்னதான் வேண்டும் எங்களிடம்...! முன்னோர்கள் சொல்லி வைத்த தர்மங்களை     மதித்து நடந்திருந்தால் எங்களுக்கு ஏன் இந்த நிலைமை.. உனை சொல்லிக் குற்றமில்லை          எங்களைதான் சொல்ல வேண்டும் ...! விஞ்ஞானம் என்று சொல்லி கொண்டு         மெய்ஞானத்தை மறந்து ஆடிநோம்... அதற்கு பலனாகத்தான் அனுபவிக்கிறோம்         உனை வாங்கிக் கொண்டு...! என் நாடு >

43 | SS | காலநிலை மாற்றமும் எதிர்கால தோற்றமும்..!

எத்தனை எத்தனை  மாற்றங்கள் மண்ணுலகினிலே மாறிவரும் உலகிற்கேற்ப மானிடர்களும் மாறுவதே  சால சிறப்புடையது என்றிடலாம்...! அத்துனை மாற்றங்களையும்  ஏற்றுவரும் எம்மவர்களில் ஏனோ தெரியவில்லை - இந்த காலநிலை மாற்றங்கள் மாத்திரம் கோரத்தாண்டவம் ஆடுகின்றன...! இயற்கயை அல்லவா  இறைவனென எண்ணி வாழ்கின்றான்.. பிறகு ஏன் இந்த இறைவனால்  ஏற்படும் அனர்த்தங்களையும் பாதிப்புகளையும் ஏற்று தன்னை தயார்படுத்த தயங்குகிறான்..??? பள்ளிச் செல்லும் செல்வங்களும் பலம் கொண்ட மானிடர்களும் மட்டுமல்ல.. பறவைகளும் கூட - இந்த இயற்கை மாற்றங்களிற்கு தங்களை இயைபாக்கிக்கொள்ள வேண்டும்...! ஆக... எதிர்காலத்தில் ஒருபோதும்  இயற்கை அழிவுகளுக்கு நாங்கள் இடங்கொடுக்க போவதில்லை... மீறி அனர்த்தங்கள் ஏற்பட்டால் கல்வி எனும் புத்துணர்ச்சியால் துணிச்சலுடன் எழுந்து வீருநடை போட்டிடுவோம் என்பதிலும் ஐயமில்லை….!! by M. Sahana 69