Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

46 | SS | கண்ணுக்கு புழப்படா உயிரொன்று

கண்ணுக்கு புழப்படா உயிரொன்று

உயிர்கள் பல பறிக்குது

இரத்தங்கள் சிந்தாமல் வடுவது படியாமல்

அகிம்சை யுத்தமொன்று நிகழுது


நீர் வழி வந்ததோ ?

நில வழி வந்ததோ ?

மழை போலே வான்வழிதான் வந்ததோ ?

எவ்வழி வந்தாலென்ன 

உயிர்பழி வாங்கிட

நம் நாட்டுக்குள்ளும் வந்தது


தலை வலி வந்தாலும்

உடல் சோர்வு வந்தாலும் காய்சலது வந்தாலும் 

நம் நாட்டுக்குள்ளே

நமக்குள்ளே தொற்றின் அறிகுறி காட்டுது

உயிர் பயத்தை கூட்டுது


பீசியார் கணக்கது

தொற்றின் எண்ணிக்கையை கூட்டுது

தொற்றது கூடவே

உயிர் பழியும் கூடுது

சற்றென சலனமாய்

பதுங்கி கிடக்குது

பதுங்கி பாயும் போது

துடிக்கும் இதயமும்

துடிப்பதை நிறுத்துது


ஊரடங்கு போட்டாலும் நடமாட்டங்கள் வழமைதான்

பொருள் விலை கூடவே 

பசியென்ன குறையுமா?


பஞ்சம் வருமுன்னே

பட்டினி சாவும் நிகழுமோ ?

நம் நாடு அடுத்த சோமாலியா என்று பெயர் வாங்குமோ?


தடுப்பூசி வழங்கும் பேச்சி ஒரு புறம்

அதன் பக்கவிளைவை சொல்லி பயமுறுத்தும் கூட்டமும் மறு புறம்

எது என்ன நடந்தாலும்

ஆர்பாட்டமும் 

எதிர் புறம்


ஏற்றுமதியில்லை

இறக்குமதியில்லை.

மதி கொண்டு

சிக்கல் தீர்ப்பார் யாரென்று 

நம் நாட்டில் தெரியவில்லை


யாரெங்கு போனாலும்

யாரென்ன செய்தாலும்

கொரோனா 

காலம் இதில்

நரிகள் சில கொழுத்தன

பாமர மந்தைகள் பல மடிந்தன


இதுவும் கடந்து போகும் என்றதிலே

கொரோனா இருலும் நம் நாட்டை 

கடந்திடுமே  தொற்றது தொற்றாமலே நமை நாமே காத்திடுவோம்

கொரானா நம் நாட்டை நீங்கும்வரை 

காத்திருப்போம்

by S. Steeven


149


Comments

Post a Comment

Popular posts from this blog

02 | SS | பேரலைத்தொற்றும் பெரு வளர்ச்சியும்

தீ நுண்மியே பரிவட்ட நச்சு உயிரியே! தீயினால் சுட்ட புண்ணும் ஓர் நாள் ஆறிவிடுமே! தீர்க்கமுடியாதே என்னை என்று திமிராய் நீ ஆணவம் கொள்ளாதே! திட்டம் தீட்டி நாளை அழித்து விடுவோமே! திடம் கொண்டு இனி உன்னோடு பயணிப்போமே! நேர்மையாய் முகக்கவசத்தோடும் திரவகைசுத்திகரிப்போடும் நேர் உற்பத்தியை நேரில் உற்பத்தியாக்க ஊக்கமளிப்போமே! நேரில் உற்பத்தியால் தேசிய உற்பத்தியை அதிகரிப்போமே! நேசத்தோடு புதிய தொழில் வாய்ப்புகளை வழங்கிவிடுவோமே! நேரான வழியில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிவிடுவோமே! நேரத்தை வீணடிக்காது நிகழ்நிலை பயன்பாட்டுடன் வெற்றி பெறுவோமே! வினைத்திறனான வளங்களைக் கொண்டு உட்கட்டமைப்பு வசதிகளை விளைத்திறனான வகையில் உருவாக்கி விருட்சம் போல் நிகழ்நிலை வர்த்தக கைத்தொழில் தாபனங்களை விண்ணுயரம் வரை செயற்படுத்தி விடுவோமே! விழிப்புணர்வோடு வீதிச்சாலைகளை அமைத்து விசித்திரமான உன்னை விரட்டிடுவோமே! சமத்துவமாய் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்புகளோடு சட்டங்களையும் கொள்கைகளையும் சமமாய் வலுப்படுத்தி சமூகச் சூழல் பிரச்சினைகளை தீர்த்து விட சரியான முறையில் உற்பத்தியையும் நுகர்வையும் சன்மானத்தோடு முகாமைத்துவம் செய்திடுவோமே! ச...

47 | SS | அன்பிற்கினிய அரசாங்கமே! கேளுங்கள்.

என்னோடு வாழப்பழகும் உமது நாட்டின் அபிவிருத்திக்கு சில வழிகள். போதுமான போசாக்கில் பொல்லாப்பாம் வறுமையை வரம் அளித்தேனாம். அயலான நிலத்திலே ஐந்தாறு பயிரிட்டால் வளம்பெற வழியில்லையோ? வீதி தோறும் விதிகளால் நிரம்பியும், விபத்துகளால் விழுந்து போனீர்கள். என் ஒற்றை ஊரடங்கு விதியால் உதிரத்தை வீதி தானம் பெறலில்லையே... வீட்டில் தூங்கி கிடப்பதால் வீணாய் சண்டை போடும் வீணர்களாக்கினேனாம். நகரை விட்டு நகர்ந்து கிராமத்திலும் உங்கள் காவல்துறை கண்காணிப்பில்லையோ? கல்வியில் தடைசெய்து தொழில் வாய்ப்புகள் பறித்தேனென்றீர்கள். ஏழை மாணவர்களுக்கு எட்டா உம் இணைய கல்வி தீர்வாகிடுமோ? பரீட்சைகள் தள்ளி போயினவாம் பல நாள் படிப்பை பாழாக்கி விட்டேனாம். புத்தக பூச்சிகளாக கிடக்கும் பலரில் புது கண்டுபிடிப்புகள் அறியவில்லையோ? புது மரங்களால் நிரப்ப வேண்டிய சூழலை புகை கொண்டு மறைத்தீர். இயற்கை எனக்கும் அன்னை என அவள் புகார் போக்கினேனே... ஆறாய் > குளமாய் > அருவியாய் > கடலாய் நிரம்பிய நீரில் கொட்டி குவித்தீர் குப்பை கூளங்களை. இந் நடத்தை குறைய உம் நடமாட்டம் குறைத்தேன் என சிந்திக்கவில்லையா? இயற்கை அனர்த்தங்களில் அகப்பட்டோருக்கு...

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana