Skip to main content

Posts

Showing posts with the label Goal 16

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

57 | YS | சமூக ஒற்றுமை

சிதைந்து போன சிற்பங்களாக  பிறந்து சீர்படாத வாழ்வுடன் மெய்ப்படாத கனவுகளுடன்  என்றாவது மாறிவிடும் என்ற  குருட்டு நம்பிக்கையுடன் வாழ்ந்தது போதும்..... காத்திருந்த காலம் தாழ்த்தி  சுழன்று கொண்டிருக்கும் புவி மண்டலத்தில் கூடுகளாக வாழ்ந்துவிட்டு போகவா எண்ணம்??? மனிதனே மனிதனை உண்டு மனிதத்தை மண்ணுடன் புதைத்து விட்டு தனிமையிலேயே  உளன்று கொண்டிருந்தது இன்றுடன் போதும் !!!! சரித்திர பக்கத்தை சிறிது  சற்றே நோக்கி பார்த்தால் மானுட வலிமைக்கு கிடைத்த  வரங்களோ ஏராளம் பேச்சில் மட்டுமல்ல  எமது மூச்சிலும் வேண்டும்  ஒற்றுமை துப்பாக்கி ரவைகளுக்கும்  குண்டுகளுக்கும் பலிகொடுத்தது  போதும் !!!! எமது வாழ்வுக்காய் எமது கைகளைக்கோர்த்து  தலை நிமிர்ந்திட ஓங்கும் வையகம்..... சாக்கடையில் புரளும் பன்றியாய் வாழ்ந்தது போதும் இனியும் தாமதம் வேண்டும் என்று  எண்ணாதே இனம் , மதம் , சாதி என  துண்டு பட்டது போதும்  ஒன்று பட்டு எழுந்திடுவோம் எமது சமூகத்தின் ஒற்றுமைக்கு !!! by S. Nishanthi

54 | YS | கொரோனாவும் எம் நாடும்

வானரம் சூழ்ந்த வையகம் எங்கும்  பரவி வரும் கொடூரமான கொரோனா வாழ வேண்டிய மனிதரை வைகுண்டம் சென்றிட  வழியமைத்த கொரோனா    கூடுமா இன்னும் இல்லையேல் கூலியின் வயிற்றில் அடிக்குமா ...! அலை அலையாய் மனிதர் கூட்டத்தை கொன்று குவித்ததென்ன... அநாதை பினமாய் அள்ளி அள்ளி குவிப்பதென்ன ... கல கல வென கலகலப்பு ஒலித்து கொண்டிருந்த ஓராயிரம் வீடுகளில்  - இன்று கண்ணீரும் கம்பளையும் நிறைந்த காவியத்  தோற்றத்தை கண்டீரோ..... காடு மேடெல்லாம் ஓடித்திரிந்தவரின் கால்கள்  தரையில் பதித்து நின்றதென்ன... காணல் நீராய் போன எம் நாட்டு ஜனங்களின் கம்பீரமும் , கானகத்தையே சுற்றி வளைக்கும்  கனாக்களும் கடை தெருவிலே நின்ற  காட்சிகளை கண்குளிர கண்டீரோ கொலை கொலையாய் கொண்று தீர்த்து  கொடுங்கோலனாக மாறியதென்ன  கொரொனா என்ற கொடிய உயிரினம்  கூட்டம் கூட்டமாய் கூடி ஆடித் திரிந்த  குமரன் குமரியினம் இன்று  கூட்டுக்குள் முடங்கிக் கிடப்பதென்ன... கூலியாட்களின் குமுறல்களையும்  கூலிவீட்டு குழந்தைகளின் பசி அலறல்களையும்  கேட்கிறது அந்த காதின் வழி  கொடுங்கோலான கொரோனா என்ன...