Skip to main content

Posts

Showing posts with the label Goal 5

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

41 | CS | பெண்ணே புறப்படு

புதுமைப் பெண்ணே புறப்படு புதுயுக விடியலுக்காய் எம் முன்னே! புரட்சிகள் ஆயிரம் பூத்தாலும் புதுமைகள் ஏராளம் உதித்தாலும் உரிமைக்காய் குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் அடுப்பங்கரை அடியினிலே அவை அமர்ந்துபோய் விடுகின்றன! நாகரீகம் நகர்ந்தாலும் - நம் அடிமைத்தனம் அவிழ்த்து விடப்பட்டதா?? அத்தனை கனவுகளும் அரங்கேறி விட்டதா??? பாரதிப் பெண்ணாய் பாரினில் உதிக்க புறப்படு பெண்ணே ! புதுமையை நோக்கி ! by  P. Ajantha

39 | SS | எழுந்திடு

உள்ளொளி சுடர் மூட்டி உன் விழி தனில் ஏற்றி அறிவால் உயரும் கோபுரம் செய்-அதில் பெண்ணவள் கண்ட அவமானம் நெய் சாதிகள் சாஸ்திரங்கள் கற்பிதம் இயம்பும் சட்டங்களை விட்டொழித்து அதிகார கூண்டின் மேலேறி கர்ஜனை செய்! உன் விதி எழுது(ம்)கோலை மாற்றான் வசமிழக்காதே உன்னை நீயே துணிந்து எழுது! உன் தேவை மீதேறி பயணப்படு வழியில் மிடரும் கற்களின் மேல் புன்னகை அணி பயம் செதுக்கும் உருவில் உயிர் நிரப்பி உன் வீரியத்தை கொள்ளியிடாதே.. உன் இணைக்கும் மதிப்பளி அன்பால் அடைகாக்கும் போர்குண இறக்கைகள் இயற்கை உனக்களித்த செல்வம் தோழி! சட்டங்களை நீ கூவு சண்டாளனை கண்டால் ரௌத்திரம் பேசு படிப்பால் பாதை செய்-அதில் பண்பால் உன் குலம் நீவு பரந்த வெளியில் உன் சுதந்திரம் போற்று அடிமை செய்யும் களைகளின் முன் நீயே ஆயுதமாகு எப்போதும் முழக்கமிடு.. தேசத்தின் எழுச்சிதனை சிரம் ஏற்று சிறகடி..! By  Nivejiththa. A

34 | CJ |ஆண் , பெண் பால்நிலை சமூகத்தை அடைதல் மற்றும் பெண்களையும் பெண் பிள்ளைகளையும் வலுப்படுத்தல்.

பண்பு தரம் மாறாத பெண்ணுக்கு   ஆற்றல் மேலோங்கும் பிள்ளையாக தான்  வலுப்பெற்று உதித்தோம்!... உற்சாகத்திற்கு உறுதிப்படுத்தல் இல்லை நாங்கள் பெண்பிள்ளைகளாம்!... கூடை எற்றி கொழுந்து பறிக்கும் கீழ் மட்ட பாகுபாடு நீங்கி - எங்களுக்குள் திறன்மிக்க தீர்மானத்திற்கான பால்நிலை  சமவுரிமை அங்கீகாரம் தர வேண்டும்!.... சிறுக சிறுக சேர - குவிந்துள்ள வன்முறைகள் நீங்க - எங்கள் இரு கண்களாம் எண்ணும் எழுத்தும் சுடரொழி பரப்ப  புலமை வெளிப்படும் பரிசிலோடு புனர் ஜென்மம் அடைவோம்!.... by  P. Jinnuksha. F158

07 | SS | திறந்த சிறை

  கதவுகள் இல்லை  நான்கு பக்கங்களிலும் சுவர்கள் தான் (பெண்களுக்கு) - அவை  ஆண்களால் நிர்மாணிக்கப்பட்டதாலா ? வாசலில் அவர்கள் இடும்  கோலத்திற்கான புள்ளி -அதுவரை தான்  அவர்கள் படித்தாண்டி செல்ல வேண்டும் என்பதற்காக இடப்பட்ட முற்றுப்புள்ளியாம். கண்ணீரால் சிறகு நனைந்த  அந்தப் பறவைகள் வெயில் காய  வீதிக்கு வந்தார்கள். அது சுவர்கள் இல்லாத திறந்த சிறை.  உடல் அரிப்பில் கல்லில் உரசும் ஆடுகளை போல  சில ஆண் ஆடுகள்  சதைக்கு ஆசைப்படுபவனுக்கு   சீதையானாலும் விபச்சாரிதானே.  இன்னுமொன்று இப்போதெல்லாம் பெண்கள்  வரதட்சணை கொடுப்பதில்லை. வாக்கப்பட்டு போகிறவர்கள்  ஆண்கள் தானே அதனால் தான் பெண்களுக்கு மாத பத்திரிகை சம்பளச்சீட்டு ஆனது.  காலை சூரிய உதயமும் மாலை அஸ்தமனமும்  அறியாத அளவிற்கு அதிகாரி எனும் ஆண்மாமியார்களின்  கொடுமைகள் அதிகரிக்கின்றன. சிரிப்பு என்பது உதட்டில் அல்ல  உள்ளத்தில் ஒரு ஞாபகமாய் உள்ளது. by A. Prathap