Skip to main content

Posts

Showing posts with the label 11.Bandarawela

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

48 | YJ | தொற்றுடன் வாழ்வை மீட்டுதல் பயனே

தொற்றுடன் வாழ்வை வென்றிட துடித்தேன்  என்னையும் காத்து வின்னையும் வெல்வேன் //  வீரத் தமிழன் என்றே உறைப்பேன்  விலைபோகா மனித இனத்தை காப்பேன் //  இணையத்தின் வழியே கற்றதன் பயனை  இணைகிறேன்  நானும் புதிய பாதையில் //  சமூக இடைவெளி தானூம் தொடர்வேன்  சுகாதார விதிமுறை ஏற்றே வாழ்வேன் //  காலத்தின் சோதனை என்பதை மாற்றி காலத்தால் அழியாத சாதனை படைப்பேன் //  ஏழையின் வாழ்வை மாற்றிடச் செய்வேன்  வறுமை இல்லாத உலகம் அமைக்க //  உழைப்பை மட்டும் மூலதனமாக கொண்டு  உயர்வே மனித எண்ணங்கள் தொடர //   நாட்டை காக்க நானும் இணைவேன்  மாற்றம் நமக்குள் தொடரும் வரைக்கும்//  by V. Vijayarani 109

43 | SS | காலநிலை மாற்றமும் எதிர்கால தோற்றமும்..!

எத்தனை எத்தனை  மாற்றங்கள் மண்ணுலகினிலே மாறிவரும் உலகிற்கேற்ப மானிடர்களும் மாறுவதே  சால சிறப்புடையது என்றிடலாம்...! அத்துனை மாற்றங்களையும்  ஏற்றுவரும் எம்மவர்களில் ஏனோ தெரியவில்லை - இந்த காலநிலை மாற்றங்கள் மாத்திரம் கோரத்தாண்டவம் ஆடுகின்றன...! இயற்கயை அல்லவா  இறைவனென எண்ணி வாழ்கின்றான்.. பிறகு ஏன் இந்த இறைவனால்  ஏற்படும் அனர்த்தங்களையும் பாதிப்புகளையும் ஏற்று தன்னை தயார்படுத்த தயங்குகிறான்..??? பள்ளிச் செல்லும் செல்வங்களும் பலம் கொண்ட மானிடர்களும் மட்டுமல்ல.. பறவைகளும் கூட - இந்த இயற்கை மாற்றங்களிற்கு தங்களை இயைபாக்கிக்கொள்ள வேண்டும்...! ஆக... எதிர்காலத்தில் ஒருபோதும்  இயற்கை அழிவுகளுக்கு நாங்கள் இடங்கொடுக்க போவதில்லை... மீறி அனர்த்தங்கள் ஏற்பட்டால் கல்வி எனும் புத்துணர்ச்சியால் துணிச்சலுடன் எழுந்து வீருநடை போட்டிடுவோம் என்பதிலும் ஐயமில்லை….!! by M. Sahana 69

35 | CJ | கொரோனா தொற்று நிலைமையுடன் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைதல்

சாமிக்கு இங்கே சங்கடம் வந்திடுச்சி  உக்கிரம் தொற்றின் உச்சமே  உலகமே அழிய காரணமாயிற்றே  மாணவ சமுதாயம் கல்வி  மங்கி போயிற்றே.... மனித வர்க்கத்தை அழிக்க  வந்த கொடிய  நுண் தொற்றே.... கல்வியுமின்றி கடமையுமின்றி வாழ்ந்திடலாயிற்றே..... தெருவோரமாயிருந்த தொற்று  வீட்டிற்குள் நுளைந்து  விட்;;டதே..... வாழும் வாழ்க்கை கேள்வி  குறியாகி விட்டதே..... தூரமாக நீ இருந்தாலும்  அச்சத்தில் பல உயிர்  செல்கிறதே..... உலகமே கவலையில்  வாடுகிறதே ! ஏன்  இந்த சாபம் மனிதா!.... பூமியில் பல லட்சம்  உயிர்; விருந்தாகி  விட்ட பின்னும்  விரட்டி தொடர்தல் முறையில்லை..... பூமியை விட்டு விட்டு  புறப்படு மாற்று கிரகம்  அங்கேயும் மனிதருண்டா  ஆராய்ந்து சொல்லிவிடு குட் பாய் !... கொரோனாவே குவலயத்தை  வாழவிடு ...... by  C. Prashanthini M011