Skip to main content

Posts

Showing posts from October 5, 2021

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

62 | CS | கொரோனா வைரஸ்

உயிரை எடுக்கத் துடிக்கிறாய்... உறவை இழக்க தவிக்கிறோம்... அலை அலையாய் வருந்துகிறோம்... கொலை கொலையாய் செய்கிறார்.. இறைவன் உடைய சாபமோ... கொடூர கொரோனா... கத்தியின்றி... ரத்தமின்றி..... யுத்தம் ஒன்று நிகழ்கிறது.... அது உலக மக்களை அச்சமடையச் செய்தது... தூரத்தில் நானிருந்தால் இலங்கையை துரத்தும் கொரோனா என்னை கவலையடையச் செய்தது.. கட்டாயம் வீட்டில் இருங்கள் என்றால் அடங்காமல் தெருவில் இருக்கின்றீர்கள்... செய்து வைத்த பாவமெல்லாம்.... வேட்டையாட வேண்டி இன்று கொன்றெடுத்துச் செல்கிறது... நம்மை கொரோனா எனும் பெயரினால் சாதி மதம் பார்த்து மனம் சஞ்சளித்துப் போன இங்கு சாவுக்கு பாரபட்சம் இல்லையென்று சரித்திரத்தில் காட்டிவிட்டது கொரோனா... கொரோனா என்ற அசுரனை அழித்து எம்மையும் எம் அகிலத்தையும் காப்பாற்றுவோம். by K Aananda kala

61 | YS | நேசி உன் சூழலை

ஓயாத ஓசையெழுப்பும் நதிகளின் கீதத்திற்கு  அழகாய் அசைந்தாடும் மரங்களும் தேனீ தன் கை கோர்த்து விளையாடிய களைப்பில்  உறங்கும் மலர்களை கண் கூச செய்து எழுப்பிடும்  கதிரவனும் - அற்புதம் நிறைந்த இப்பூமியின் மாயாஜாலக்காரர்கள் அறுசுவை உணவுக்காய் அரைகுறை வாழ்க்கை வாழும் மனிதன் - நாசம் செய்திட ஏதுமில்லை பருவம் மறந்து பெய்யும் மழை - அணலாய் எரிக்கும்  வெயில் - மாறிப்போன பருவம் பழையன மீட்க செய்திடுவோமே மீள் சுழற்சி வரையறையின்றிய பாவனையின் பயனாய்  பல தலைமுறையின் தாகம் தீர்த்திட இனி இல்லை  தண்ணீர் மரங்களற்ற பூமிதனை காண இச்சையில்லா  மேகம் பொழிந்ததுவே - பொருந்தாத மாதத்தில் போதும் விண்ணிற்கு ஏணியான கட்டிடஙகளும்  கண்மூடி ஆடிய ஆட்டத்தின் முடிவு விண்மூடி போனதே கடைக்கண் பார்வை வேண்டாம் - நெற்றிக்கண் கொண்டு செய்திடுவோமே  பச்சிளம் குழந்தையின் உள்ளம் போலே தூய்மை நிறைந்த உலகினை By R. Rushanthi