Skip to main content

Posts

Showing posts from October 1, 2021

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

57 | YS | சமூக ஒற்றுமை

சிதைந்து போன சிற்பங்களாக  பிறந்து சீர்படாத வாழ்வுடன் மெய்ப்படாத கனவுகளுடன்  என்றாவது மாறிவிடும் என்ற  குருட்டு நம்பிக்கையுடன் வாழ்ந்தது போதும்..... காத்திருந்த காலம் தாழ்த்தி  சுழன்று கொண்டிருக்கும் புவி மண்டலத்தில் கூடுகளாக வாழ்ந்துவிட்டு போகவா எண்ணம்??? மனிதனே மனிதனை உண்டு மனிதத்தை மண்ணுடன் புதைத்து விட்டு தனிமையிலேயே  உளன்று கொண்டிருந்தது இன்றுடன் போதும் !!!! சரித்திர பக்கத்தை சிறிது  சற்றே நோக்கி பார்த்தால் மானுட வலிமைக்கு கிடைத்த  வரங்களோ ஏராளம் பேச்சில் மட்டுமல்ல  எமது மூச்சிலும் வேண்டும்  ஒற்றுமை துப்பாக்கி ரவைகளுக்கும்  குண்டுகளுக்கும் பலிகொடுத்தது  போதும் !!!! எமது வாழ்வுக்காய் எமது கைகளைக்கோர்த்து  தலை நிமிர்ந்திட ஓங்கும் வையகம்..... சாக்கடையில் புரளும் பன்றியாய் வாழ்ந்தது போதும் இனியும் தாமதம் வேண்டும் என்று  எண்ணாதே இனம் , மதம் , சாதி என  துண்டு பட்டது போதும்  ஒன்று பட்டு எழுந்திடுவோம் எமது சமூகத்தின் ஒற்றுமைக்கு !!! by S. Nishanthi

56 | YS | மதிப்பு மிக்கதோர் சூழல்

அழகே ! பேரழகே.. ! - இயற்கை  அன்னையின்அரும்பெரும் கொடையே ! இறைவனே இயற்கை - இவ்வியற்கையே  இறைவன் ! நாமெல்லாம் இவர்களின் குழந்தைகள் ! பச்சை வண்ண சூழலே ஓவியம் ..! - இருளில்  மூழ்கிய இரவை வழியனுப்பி  வெளிச்சத்தை பரப்பி... - சாந்தமான  பல்வியல் தொடங்கி.... சங்கீதமாய் மலரும் காலைப் பொழுதினை  என்னவென்று வர்ணிப்பது  நதி என்னும் பெண் மகளின் சந்தோஷ புன்னகையை ! - இயற்கையின் கானம் ரீங்காரமிடும் வண்டுகளும்  பூக்களை தழுவும் தேனீ கூட்டமும்  இயற்கையின் வர்ணஜாலம்.. ! மண் வாசனை வீசும் அத்தருணம் - தென்றல் பூமி தாயை தழுவும் - அந்த  நொடிகளை வர்ணிக்க கவிதைகள்  போதவில்லை !  பறவைகளின் கீச்சொலியே - சங்கீத  ஸ்வரங்களாக மாறும் ! பூமி தாயின் சுற்றுகையே - நம்  பிறவியின் தத்ததுவம்  சூழலை பிரகாசிக்க வைக்கும் மின்னல் - மனதை  சிறை பிடிக்கும் இடி முழக்கம் ! மேகம் மழையாகப் பொழியும் பூமி தாய் மனம் குளிர்வாள்... இக்காட்சியே இயற்கையின் செய்யுள்  இவையெல்லாம் காணும் வரம் - மானிடனாய்  பிறந்து ஆறறிவு கொண்ட எமக்கு கிடைத்துள்ளது  நம் உணர்வுகளால் - ஐம்புலன்களை உணர்ந்து இயற்கையின் மதிப்பை  அறியும் அத்தருணம் - நம்  ஆன்மாக்கள் முத்தி இ

55 | YJ | கல்வியின் அவசியம்

வாழ்வில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு நுண்ணாய்வு கல்வி ! கல்வி என்பது மூன்றெழுத்தில் தொடரும் - சொல் அல்ல  வாழ்வின் முடிவு வரை வாழும் செல்வம் கல்வி ! எமது எதிர்காலம் சிறந்த வழிகாட்டலில் அமைய - நாம் பயணிக்கும் முதல் பள்ளி - கல்வியே ! பள்ளி பருவம் அழிவில்லா இன்பம் பிரியும்  வழி பள்ளி மட்டுமே கல்வி - அல்ல  பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனி - ஆற்றல் உண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் கடல் கடந்த உத்தியோகம் செய்தாலும் கல்வி அறிவு இன்றி எதுவும் இல்லை.  கடலின் ஆழம் எதுவரை இருக்கின்றதோ அவ்  ஆழத்தை விட கடல் கடந்த நூல் கல்வி தான் ! கண்களில் வண்ண மீன்கள் வரி வரி கோலம் - இட சின்னஞ் சிறு மழலையின் - இன்ப வாழ்வு இன்று புரியா புதிர் அன்று புகழைத் தரும் கல்வியே என்றும் பெரும் செல்வம் கண்ணின் நிலையான விம்பம் ! ஒவ்வொரு மனிதநேய ஆற்றலிலும் - ஒரு திறனாய்வு  கல்வி - கல்வியே சிறந்த வழிகாட்டல் !  நல்ல புத்தகத்தை திரட்டி பார்க்கும் - திறனாய்வு கடல் போன்று அறிவை வளரச் செய்யும் புத்தகம்  தோல்வி வெற்றி இவற்றை கடந்து - எதிர்கால  சந்ததி வர்ண பூக்களாய் - மலர ! கல்வி என்ற சிறந்த வழியில் மிதக்கும் கப்பலை  போல

54 | YS | கொரோனாவும் எம் நாடும்

வானரம் சூழ்ந்த வையகம் எங்கும்  பரவி வரும் கொடூரமான கொரோனா வாழ வேண்டிய மனிதரை வைகுண்டம் சென்றிட  வழியமைத்த கொரோனா    கூடுமா இன்னும் இல்லையேல் கூலியின் வயிற்றில் அடிக்குமா ...! அலை அலையாய் மனிதர் கூட்டத்தை கொன்று குவித்ததென்ன... அநாதை பினமாய் அள்ளி அள்ளி குவிப்பதென்ன ... கல கல வென கலகலப்பு ஒலித்து கொண்டிருந்த ஓராயிரம் வீடுகளில்  - இன்று கண்ணீரும் கம்பளையும் நிறைந்த காவியத்  தோற்றத்தை கண்டீரோ..... காடு மேடெல்லாம் ஓடித்திரிந்தவரின் கால்கள்  தரையில் பதித்து நின்றதென்ன... காணல் நீராய் போன எம் நாட்டு ஜனங்களின் கம்பீரமும் , கானகத்தையே சுற்றி வளைக்கும்  கனாக்களும் கடை தெருவிலே நின்ற  காட்சிகளை கண்குளிர கண்டீரோ கொலை கொலையாய் கொண்று தீர்த்து  கொடுங்கோலனாக மாறியதென்ன  கொரொனா என்ற கொடிய உயிரினம்  கூட்டம் கூட்டமாய் கூடி ஆடித் திரிந்த  குமரன் குமரியினம் இன்று  கூட்டுக்குள் முடங்கிக் கிடப்பதென்ன... கூலியாட்களின் குமுறல்களையும்  கூலிவீட்டு குழந்தைகளின் பசி அலறல்களையும்  கேட்கிறது அந்த காதின் வழி  கொடுங்கோலான கொரோனா என்னவோ  கோடி கோடி மக்களுக்கும் ஒரு பொது கொடுமையே ... ஆயினும் தினகூலியாளனின் அது  தினம் த

53 | SS | இயற்கையின் குமுறல்

இயற்கை அன்னை கருவிலே இன்புற்று வாழ்கின்ற நாம் இயற்கையின் இனிது மறந்து  இயமனாய் மாறியதேனோ! இயற்கை தந்த வளங்கள் பலவும்  இந்நிலம் முழுதும் பரவிக் கிடக்க  இங்கு மனிதனின் தேவை கூடவே இயற்கையை சீர்க்குழைப்பதேனோ! இருப்பதை கொண்டே சிறப்புடன் வாழும் காலம் மறந்து இயற்கையை அழித்து இன்னலடையும்  இவனோ மதி உள்ள மாமனிதன்? இவன் மரம் செடி கொடி மண்ணில் இருப்பதாலே இயற்கையை அழிக்க துடித்தானோ! இவள் கொண்ட வளத்தினையும் வீண் கொள்ள வைத்து நாளுக்கு நாளாய் நீ நாகரிகம் வளர்த்து இருக்கும் கனிம வளங்களையே  கண் அசைவில் சிதைத்து கண்ட வாயுவையே  காற்றினிலே விதைத்து இன்னினி கண் கண்ட நீரினையும் கானல் நீராக்கி இவன் புண் கொள்ள செய்தானோ! நல்மண் கொண்ட நிலத்தினையே இழைத்த கொடுமைதனில் ஈன்றெடுத்தேன் கொரோனாவை கொன்று போக துடிக்கின்றன – இக்கொடுமை இழைத்த பூச்சிகளை மாண்டு போகுமோ மனித இனம் இனியேனும் மனம் திரும்புமோ  இயற்கையிடம்.. இதம் தரும் குளிர் காற்று இருக்க  இம்சை தரும் ஏசி எதற்கு? இறைவனின் படைப்பு இருக்க  இக்கணம் மறையும் செயற்கை எதற்கு? இமைகள் திறந்து வைத்தாலே இதயத்தை நிறைக்கும் இயற்கை பரமசுகம் இளமையின் இங்கிதம் அறிந்த மனிதா இறக்கும்

52 | YS | நான் உன்னை மறவேன்

நான் உன்னை மறவேன் ... கருவின்றி என்னை சுமக்கிறாய்.... கர்வமின்றி அழகாய் சிரிக்கிறாய்... கபடமின்றி அள்ளிக் கொடுக்கிறாய்... தாகம் தீர்க்க மழையாய் வந்தாய்... தேகம் கூச தென்றலாய் மிதந்தாய்... கண்கள் குளிர நிலவாய் வெளிச்சம் தந்தாய்... பறவைகளையும் சொந்தமாக்கினாய்... எண்ணிப்பார்தேன் விந்தையாகினாய்... எத்தனை அதிசயங்கள் உன்னில் நெளிந்தாய் நதியாக உயர்ந்தாய் மலையாக... படர்ந்தாய் புல்வெளியாக... விரிந்தாய் கடலாக... அத்தனைக்கும் உயிர் தந்தவள் நீயே... மறவேன் என்றும் உனை இயற்கை தாயே... by P. Nathiya 140