Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

54 | YS | கொரோனாவும் எம் நாடும்

வானரம் சூழ்ந்த வையகம் எங்கும் 

பரவி வரும் கொடூரமான கொரோனா

வாழ வேண்டிய மனிதரை வைகுண்டம் சென்றிட 

வழியமைத்த கொரோனா   

கூடுமா இன்னும் இல்லையேல்

கூலியின் வயிற்றில் அடிக்குமா ...!


அலை அலையாய் மனிதர் கூட்டத்தை

கொன்று குவித்ததென்ன...

அநாதை பினமாய் அள்ளி அள்ளி குவிப்பதென்ன ...

கல கல வென கலகலப்பு ஒலித்து கொண்டிருந்த ஓராயிரம் வீடுகளில்  - இன்று

கண்ணீரும் கம்பளையும் நிறைந்த காவியத் 

தோற்றத்தை கண்டீரோ.....

காடு மேடெல்லாம் ஓடித்திரிந்தவரின் கால்கள் 

தரையில் பதித்து நின்றதென்ன...

காணல் நீராய் போன எம் நாட்டு ஜனங்களின்

கம்பீரமும் , கானகத்தையே சுற்றி வளைக்கும் 

கனாக்களும் கடை தெருவிலே நின்ற 

காட்சிகளை கண்குளிர கண்டீரோ


கொலை கொலையாய் கொண்று தீர்த்து 

கொடுங்கோலனாக மாறியதென்ன 

கொரொனா என்ற கொடிய உயிரினம் 


கூட்டம் கூட்டமாய் கூடி ஆடித் திரிந்த 

குமரன் குமரியினம் இன்று 

கூட்டுக்குள் முடங்கிக் கிடப்பதென்ன...

கூலியாட்களின் குமுறல்களையும் 

கூலிவீட்டு குழந்தைகளின் பசி அலறல்களையும் 

கேட்கிறது அந்த காதின் வழி 


கொடுங்கோலான கொரோனா என்னவோ 

கோடி கோடி மக்களுக்கும் ஒரு பொது கொடுமையே ...

ஆயினும் தினகூலியாளனின் அது 

தினம் தினம் கொடுமையே...


தினம் ஒரு படி சோற்றுக்கு திண்டாடும் நிலையே 

எடுத்துரைப்பதா ? இல்லை 

சிறு தீனி தின்னும் சிறு கிளி பிள்ளையின் கதறலை

 எடுத்துரைப்பதா ?

சிறு தடி தன்துணைக் கொண்டு தள்ளாடி நடந்திடும் 

தாத்தாவின் கதையை கூறுவதா ? 

உலையில் என்னவைப்பது என தினறும்

குடும்பத் தலைவியின் நிலையை கூறவா ? 

கும்மிருட்டிலும் குமுறி கொண்டிருக்கும் 

குடும்பத்தலைவனின் நிலையை கூறுவதா ? 

தினம் தினம் நடந்திடும் போராட்டம் இது .


இப்படி எத்தனை எத்தனை கொடுமைகள் 

நீண்டு கொண்டே செல்கின்றன .....

நீங்காத தனிமையும் தனிமையின் கொடுமையும்.....


ஊரடங்கு என்ற பேரில் நாட்டை முடக்கப்பட்டது 

என்னவோ நாட்டைக் காக்கத்தான் 

ஆயினும் முடகியது சந்தோசமான 

நிம்மதியான மானிட வாழ்கைதான் 

என்பதில் என் கருத்தில் 

எவ்வித ஐயமும் இல்லை

இதன் பெயர் தான் ஊரடங்கா ?

பல இன்னல்களை தந்திருந்தாலும் 

உறவுகளின் உன்னதம் உணர்திட்ட காலம் அது

உறவுகளிடையே விட்டு கொடுப்பு - புரிந்துணர்வு

என்பன வெளிப்பட்ட காலம்

பெற்றோரை புரிந்துக்கொள்ளாத பிள்ளைகளும் 

பிள்ளைகளை புரிந்துக்கொள்ளாத பெற்றோர்களும்

புரிந்து நடந்திட்ட காலம் இது

 

நாணயத்தின் பக்கம் இரண்டு என்பது போல

ஒவ்வொரு விளைவின் வினைகளும்

இரண்டே.


அன்றிருந்த ஆரோக்கியம் இன்று 

மாயமாய் மறந்து போனமைக்கு காரணம் தான் என்ன ?

மீண்டும் பெற்றிட மருந்துதான் என்ன ?

பழங்காலந் தொட்டு வந்த பாரம்பரியத்தை

பாதுகாக்காமல் போனதற்கு 

தண்டனையா இது என தோன்ற வைக்கிறது 

இக் கலியுக பயன்பாடு.


தடைப்பட்ட மனித இயக்கம் 

தடம் மாறிட வேண்டும் 

தொடர்ந்திடும் நோய் இயக்கம் 

தொலைதூரம் சென்றிட வேண்டும் 

முடங்கிய எம் நாடு மீண்டும் 

கையூன்றி எழுந்திட வேண்டும் 

கை நீட்டி கடன் பெற்ற எம் நாட்டை

நாம் கைகோர்த்த தன்

மண் காத்திட வேண்டும்.

by S. Prashanthini




Comments

  1. எழுத்தாசிரியரின் சிந்தனை துளிகள் கடல் போல் பரந்து விரிந்து உள்ளது... கோரோனா கூறும் அனைத்து கதைகளையும் செவி வழி கேட்டு படைப்புப் படைத்துள்ளார்... மேலும் இவரின் இது போன்று படைப்புகள் வரவேற்கப்படுகின்றது..

    படைப்பை பிரசுரித்தவர்களின் தவறுகள் (எழுத்துப்பிழைகள்) மீண்டும் இருத்தியமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது..

    ReplyDelete
  2. மிகவும் அருமையான படைப்பு தற்கால நடைமுறையைச் சிறப்பாக எடுத்துரைக்கின்றது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. கொரோனா வின் சூழ்நிலை மானிட சமுதாயத்தின் கட்டுக்கோப்பில் ஒரு பக்கம் ஏற்படுத்தியுள்ள பின்னிப் பிணைப்புகளின் தாண்டியதான உணர்வுப் பாங்கு தந்துவிடலில் கவி ஆசிரியர்தன் வல்லமையை நிலைக்கச் செய்துவிட்டார்.

    ஒரு உணர்வுப் பாங்குங்கும்மேலான எல்லாவிதமான யதார்த்தம் அதன் அச்சொட்டு தன்மை
    இதன் வடிவமைப்பு
    கட்டுக்கோப்பாக அமைந்திருக்கும்
    கவியின் ஒழுங்கமைப்பு திரும்ப திரும்ப வாசிக்கும் போதெல்லாமான ஒரு உணர்வையும்...

    மேலதிகமான சிந்தனைக்குள்ளும் இழுத்து செல்வதில் வரிகள் அதன் கானத்தை கொண்டிருக்கின்றன.

    உண்மையில் இந்த கவியின் இறுதி்முடிப்பு ஆட்பறிக்கவள்ளது.அதற்கும் மேலாக
    " கும்மிறுட்டில் குமுறி அழும் தந்தை
    உழைக்கு செய்வதறியாத தாய் " இந்த வரிகள்.

    யதார்த்த நிலையில் கொரோனாவின் அதிஉயர்ந்த மறுதலையை காண்பிப்பதில் ஆசிரியர் வெற்றிக்கொண்டுள்ளார்...

    கவியின் ஆழம் அதன் ஈர்ப்பு இதனை விடவும் எழுதிதீரக்க இயலும்

    பேரன்பும் நன்றியும்
    அஜித்

    ReplyDelete
  4. மிக அருமையான படைப்பு
    வாழ்த்துகளும் பாராட்டுகளும் ❤️

    ReplyDelete
  5. கவித்துவம் அதன் அழகு வசீகரமானது...
    வாழ்த்துகள் மா...

    பேரன்பு ❤
    சுமித்ரா

    ReplyDelete
  6. உன்னை என் நண்பன் என கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் எதிர்காலத்தில் இந்த உலகத்தை தன் படைப்புகளால் புரட்டிப்போட ஒரு படைப்பாளி இப்போது தன்னை தானே செதுக்கி சிற்பமாக மாற்றி வருகிறான் அவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா உன் படைப்புகள் வளர மலர வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  7. மிக அருமையான படைப்பு தோழி❤
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. Congratulations my dear friend, best effort, all the best.

    From- Dhanushaa

    ReplyDelete
  9. எழுத்து அதன் கட்டமைப்பு
    வசீகரமாய் இருக்கிறது
    யதார்த்மான படைப்பு

    அழகான எழுத்து
    வாழ்த்துகள்✨👍

    ReplyDelete
  10. சிறந்த மொழிநடயில் ... எல்லோரையும் கவரக்கூடிய வகையில் கொரோனாவின் வீரியத்தையும் , ஏற்பட்ட அழிவுகளையும் மிக சிறப்பாக அழகிய கவிதை வடிவில் எழுதிய தங்கைக்கு எனது பாராட்டுக்கள்

    ReplyDelete
  11. மிகவும் இயல்பான மொழிநடை வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
  12. யதார்த்த வாழ்க்கை
    கவி வரிகளில்
    அழகாக
    செதுக்கியுள்ளீர்கள்.
    அருமை👌....

    வாழ்த்துக்கள்...

    யாரா!

    ReplyDelete
  13. கவிதை என்பது காலத்துடன் பொருந்தும் வகையிலும் அக்காலத்தில் எழும் பிரச்சனைகளை பிரதிபலிக்கவும் வேண்டும் அந்த வகையில் தற்காலத்தில் காணப்படும் பிரச்சினைகளை தன் கவிமொழி மூலம் வெளிக்கொணர்ந்த பிரசாந்தி அவர்களை மனமார வாழ்த்துகின்றேன்

    ReplyDelete
  14. Congrats sister, well said, keep going

    ReplyDelete
  15. காலத்தின் ஜாலத்தை சரியாக காட்டியுள்ள கண்ணாடி போன்ற கவிதை படைப்பு...
    மாற்றத்தை சிரசில் ஏற்று சரீரத்தால் செய்யாவிடினும் சிந்தையில் விதைத்து மொழியில் முதலில் தோற்றுவித்த சகோதரிக்கு பாராட்டுக்கள்.....
    வாழ்க வளமுடன் ... ❤️

    ReplyDelete
  16. அருமையான வரிகள்... ஆழமான சிந்தனைகள்... நிதர் கால உலகின் சித்தரிப்புகள்.. ❤️🤗 வாழ்த்துக்கள் எனது நண்பியே..!! ❤️ வாழ்க வளமுடன்..!!

    ReplyDelete
  17. Woooow.....vera level kavidhai... superb❤🥰

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. The words are splashing the emotions right from the start to end. It ia perfectly penned by a perfect enthusiastic poet. Congratulations.

    ReplyDelete
  20. சிறந்த படைப்பு ❤️
    வாழ்த்துக்கள் 👍🌹

    ReplyDelete
  21. அருமையான வரிகள்
    வாழ்த்துகள் சகோதரி
    உங்கள் திரமைக்கு

    ReplyDelete
  22. சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள் அக்கா😍

    ReplyDelete
  23. மிக அருமையான படைப்பு
    வாழ்த்துகளும் பாராட்டுகளும்
    ✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

    ReplyDelete
  24. அருமையான கவிதை.ஆழமான வரிகள் வாழ்த்துக்கள் தோழி.🤍🤍🤍

    ReplyDelete
  25. கண்ணெதிரே காட்சி படுத்தும் அருமையான கவிதை வரிகள். வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
  26. சிறப்பான வரிகள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. அருமையான படைப்பு...வாழ்த்துக்கள்❤️

    ReplyDelete
  28. திறம்பட அருமையான சொற்செட்டுக்களால் நிகழ்கால இலங்கையின் போக்கினை வர்ணித்தவிதம் பாராட்டத்தக்கது.....அருமையான வரிகள் கூறுகிறது ஆயிரம் அர்த்தங்கள்

    ReplyDelete
  29. Your creation very amazing and greate.

    ReplyDelete
  30. Your creation very amazing and greate

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. அருமை சகோதரி👍👌

    ReplyDelete
  33. Amazing poem... lyrics are very nicely... congrats sister keep it up.👍👍👍

    ReplyDelete
  34. Yatharthamana unmai💯
    Superb😍

    ReplyDelete
  35. அகிலத்தின் யதார்த்தத்தை அழகான வரிகளால் சிந்தைக்கு எட்டச்செய்தமைக்கு நன்றிகள் சகோதரி👍👍👍👍👍

    ReplyDelete
  36. அழகான கவிதை ஆழமான கருத்துக்கள்

    ReplyDelete
  37. Congratulations my dear student. Wish you all the best. Nice poem. Keep it up.

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள் ✍️✍️✍️✍️✍️✍️♥️♥️ நிதர்சனமான உண்மை நிறைந்த கவி வரிகள்.

    ReplyDelete
  39. Very nice my dr 😔விடிவிற்காய் விழித்திருப்போம் ...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

02 | SS | பேரலைத்தொற்றும் பெரு வளர்ச்சியும்

தீ நுண்மியே பரிவட்ட நச்சு உயிரியே! தீயினால் சுட்ட புண்ணும் ஓர் நாள் ஆறிவிடுமே! தீர்க்கமுடியாதே என்னை என்று திமிராய் நீ ஆணவம் கொள்ளாதே! திட்டம் தீட்டி நாளை அழித்து விடுவோமே! திடம் கொண்டு இனி உன்னோடு பயணிப்போமே! நேர்மையாய் முகக்கவசத்தோடும் திரவகைசுத்திகரிப்போடும் நேர் உற்பத்தியை நேரில் உற்பத்தியாக்க ஊக்கமளிப்போமே! நேரில் உற்பத்தியால் தேசிய உற்பத்தியை அதிகரிப்போமே! நேசத்தோடு புதிய தொழில் வாய்ப்புகளை வழங்கிவிடுவோமே! நேரான வழியில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிவிடுவோமே! நேரத்தை வீணடிக்காது நிகழ்நிலை பயன்பாட்டுடன் வெற்றி பெறுவோமே! வினைத்திறனான வளங்களைக் கொண்டு உட்கட்டமைப்பு வசதிகளை விளைத்திறனான வகையில் உருவாக்கி விருட்சம் போல் நிகழ்நிலை வர்த்தக கைத்தொழில் தாபனங்களை விண்ணுயரம் வரை செயற்படுத்தி விடுவோமே! விழிப்புணர்வோடு வீதிச்சாலைகளை அமைத்து விசித்திரமான உன்னை விரட்டிடுவோமே! சமத்துவமாய் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்புகளோடு சட்டங்களையும் கொள்கைகளையும் சமமாய் வலுப்படுத்தி சமூகச் சூழல் பிரச்சினைகளை தீர்த்து விட சரியான முறையில் உற்பத்தியையும் நுகர்வையும் சன்மானத்தோடு முகாமைத்துவம் செய்திடுவோமே! ச

16 | YS | மாற்றத்தை நோக்கி....

அரும் பெரும் வரலாறு கொண்டு ஆசியாவின் அமிர்தமாய் மின்னிக்கொண்டிருந்த தீவொன்று இயற்கை அன்னையின் இருப்பிடமாக ஈழம் எனும் பெயர் கொண்டு தன்னிறைவாய் தாளமிட்ட தீவொன்று மேற்குலக நாடுகள் மெய்சிலிர்த்துப் போகும் மேன்மை வளம் பூத்துக் குலுங்கிய தீவொன்று இப்பார் எனும் பெரும் புள்ளியை கொரானா எனும் சிறு புள்ளி அடக்கியாளும் காலம் தனில் வல்லரசு நாடுகள் வலுவிழந்து நிற்க உலகப் பொருளாதாரம் படுப்பாதாளம் நோக்கி செல்ல எம் ஈழமும் வறுமையின் வாசம் நுகர்ந்து கொண்டிருக்கிறது காலனின் பாசக்கயிறு கணத்து கொண்டு இருக்கிறது எம் தாய் ஈழத்தை கரம் தூக்கி நிமிர்ந்தெழ செய்ய சேயாய் நாம் கரம் நீட்ட வேண்டிய காலமிது விவசாயம் எனும் முதுகெலும்புக்கு போசாக்கு எனும் எழுச்சியூட்டுவோம் சமநிறைவு சமுதாயத்தை சாஸ்திரமாக்குவோம் வருங்கால தலைமுறையை வசந்தமாக்குவோம் தரமான வைத்தியத்தை நாடு முழுவதும் விஸ்தரிப்போம் கல்வி எனும் பேராயுதத்தை இளைய தலைமுறைக்கு இனபேதமின்றி ஒளிரச்செய்வோம் நியாயம் எனும் சொல்லுக்கு வலுவூட்டுவோம் எம் ஈழத்தாய் எழுந்து புன்னகையை உதிரவிட புதல்வர்களாய் எம் கடமையை கண்ணியத்துடன் செய்ய களம் காண்போம். by D. Devapragathi