Skip to main content

Posts

Showing posts with the label Goal 2

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

64 | CS | விழித்துக் கொண்ட அனுபவம்

 துளிகூட வறுமையை  காணாத தேசம்  கண்ணீர் துளியுடன்  வாழ்வை கடந்த சோகம்  கரையில்லா    மனங்களிலும்   வறுமையின் கலங்கம் பிஞ்சுப் பிள்ளைகளின்  விழிகளிலும்   பசியின் ஏக்கம்  அண்ணியனின் படையெடுப்பில்  அழியாத தேகம்  கொரோனா என்ற கோரனின்  காலடியில் எங்கள் உயிர் தாகம்  ஒளியிலும் இருளை கடந்த   எமக்கு விடியல் கல்வியெனும் இலக்கணம்.  By. Y.Sanjaya

58 | CS | பசியை ஒழிதல்

விவசாயின் உழைப்பு வீணாகுமா ! மக்களின் கனவு நினைவாகுமா !  பசியின் மருந்து உணவாகுமோ ! உணவின் பாதுகாப்பு மேம்படுமோ ! தாயின் கருவறை காப்பு  செடியின் கருவறை வித்து  மனிதனின் முதிர்ச்சி முதுமை  தாவரத்தின் முதிர்ச்சி போசணை  அன்பின் விதையை விதைப்போம்  விவசாயத்தின் அருமையை வெளிப்படுத்துவோம்  பசியின் கொடுமையை அழிப்போம்  உணவின் தரத்தை உயர்த்துவோம் by  N. Kavilakshika

48 | YJ | தொற்றுடன் வாழ்வை மீட்டுதல் பயனே

தொற்றுடன் வாழ்வை வென்றிட துடித்தேன்  என்னையும் காத்து வின்னையும் வெல்வேன் //  வீரத் தமிழன் என்றே உறைப்பேன்  விலைபோகா மனித இனத்தை காப்பேன் //  இணையத்தின் வழியே கற்றதன் பயனை  இணைகிறேன்  நானும் புதிய பாதையில் //  சமூக இடைவெளி தானூம் தொடர்வேன்  சுகாதார விதிமுறை ஏற்றே வாழ்வேன் //  காலத்தின் சோதனை என்பதை மாற்றி காலத்தால் அழியாத சாதனை படைப்பேன் //  ஏழையின் வாழ்வை மாற்றிடச் செய்வேன்  வறுமை இல்லாத உலகம் அமைக்க //  உழைப்பை மட்டும் மூலதனமாக கொண்டு  உயர்வே மனித எண்ணங்கள் தொடர //   நாட்டை காக்க நானும் இணைவேன்  மாற்றம் நமக்குள் தொடரும் வரைக்கும்//  by V. Vijayarani 109

27 | YS | கொரோனாவின் கொள்ளை

பெருமைக்காக தேடாத ஒன்று! பெற்றதால் பெருமை தேடித் தந்த ஒன்று!.. சுமை என்று நினைத்தவர்க்கு வாழ்வே சுமையாக.. சுகமென்று நினைத்தார்கு வாழ்வெங்கும் சுகமானதே! கல் உடைக்க கையுண்டே.. தடை தகர்க்க கல்வியுண்டே! உணர்ந்தால் வாழ்வே மாறும், உணர மறுத்தால் சமூகம் வீழும். கெட்டிக்காரனுக்கு எதுவும் பாரமில்லை பயின்றவனுக்கு எந்த இடமும் வெளிநாடு இல்லை. தொட்டதெல்லாம் தொல்பொருளாகும் தொன்று பாட தொகை உண்டாகும் கற்ற கல்வியினாலே by C. Sathyapriya F023

26 | YJ | தழைக்க ஏங்கும் செந்நெல்

உணவின் அருமை அறியாது உன்னதமான என்னை அன்று உதாசீனமாய் வீசி எறிந்தாயே சேற்றோடு போராடுபவனின் உழைக்கும் கரங்களால் பிரசவிக்கப்பட்ட செந்நெல் நான்- இன்று என் ஏளனப்பார்வைக்கு முன் நீ விழிகளும் உற்று நோக்கிட போராடும் சிறுமையை விஞ்சிய சிறுமை கொரோனா என்னும் பெயரால் காணாமல் போனது உன் தலைக்கனப் பெருமை அன்று நீ என்னை வீசினாய் இன்று எனக்காக ஏங்குகின்றாய் இத்தனை யுகங்களாக என்னை இரைத்து எறிந்தது போதும் நாளைய உலகை நீ காண இக்கனமே என்னை பூமித்தாயோடு இணையச்செய்வாய் நாளை உன் பசிப்பிணிக்கு நானே மருந்தாக உதிப்பேன். by S. Shakthi

21 | YS | புதிய உலகம்

பகுத்தறிவு கொண்ட நாங்கள் அந்த அண்டவெளிக்கே சென்றவர்கள் நாங்கள் இந்த கொரோனாவை கண்டு அஞ்சுவதா நோயிற்கு பயந்து நின்றால் உலகம் கடுவெளியில் நெருக்கிவிடும் நிலையான இலக்குகள் எல்லாம் கடுவளியில் அழிந்து விடும் நம் நிலைபேண்தகு அபிவிருத்தியை நோக்கிச்சென்றால் பட்டினி இல்லா உலகம் ஒன்றை அடுத்த தலைமுறைக்கு கொடுத்து விடும் களிமண் ரொட்டி திண்ண இனிமேலும் முடியாது இவ் இலக்கை அடையாவிட்டால் இவ்வுலகம் விடியாது பட்டினி இல்லா நாடுகளை பார் எங்கும் விதைக்க வேண்டும் போஷாக்கின்மை என்ற சொல்லை உலக அகராதியிலேயே எடுக்க வேண்டும் இருப்பவன் மனம் இறங்கி பசிப்பவனுக்கு ஒருவேளை உணவாவது கொடுக்க வேண்டும் நிலைபேண்தகு இமயம் அடைய கண்டங்கள் தாண்டியும் உதவ வேண்டும் போஷாக்கு உணவு பற்றி பூலோகம் எங்கும் விளக்க வேண்டும் பசியில்லா உலகம் காண தேசமெல்லாம் ஒன்றினைந்து விவசாயம் செய்ய வேண்டும் இலக்கு என்ற வாகை சூட வருடங்கள் ஒன்றும் தூரமில்லை தேசங்கள் எங்கும் கைக்கோர்த்து நின்றால் கொரோனாவெல்லாம் ஒன்றுமேயில்லை…. பட்டினி பஞ்சங்கள் எல்லாம் நம் தலைமுறையோடு போகட்டும்  நிலைபேண்தகு அபிவிருத்தியை நோக்கி நம் கனவுகள் கூடட்டும் அதை இவ் உலகமே பாடட்ட...

03 | CS | வேதனையின் முற்று

இதோ, என் நிழலோடு யான் பேசும் தருணம் இது! யாசகன் நான்,யாசிக்க யாருமிலை பசியை படைத்தவன் எவனோ?... நேற்று எரிந்த அடுப்பு சோற்று பானையுள்,ஒரு பருக்கை இன்று.. ஐவர் குடும்பம் யாம் " யார் உண்பதந்த ஒரு பருக்கை?" எம் வயிற்றுக் கேள்விக்கு நான் தந்தேன் பதிலை வெளி செல்ல இயலாத அடக்கம் குடில் அருகில் விளைந்த, காயிரண்டு என் உழைப்பு,அன்றுணவு இது தொடர,பசியவள் இல்லை வீட்டு விளைச்சல்!... நாட்டின் தழைச்சல்!... by  K. Dhanushika