Skip to main content

Posts

Showing posts with the label 05.Haliela

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

42 | SS | சிதைந்த எம் வாழ்வு !

விரல்களால் பேனை தொட்டு விதி வசம் நாம் வாழும் - வாழ்வை எழுத எத்தனிக்கிறேன் - மானிடா  நீயும் கேளீர் ! இயற்கை வளம்தனிலே இயல்பாய்  வாழ்ந்த காலம் போய் எட்டிய தூரமெல்லாம் - ஏழடுக்கு கட்டிடம் காணுகின்ற காலமையா - இங்கு ! வெள்ளைக்காரன் வித்திட்டான்  வெளிநாட்டில் உலாவியது ! உலகமே நடுங்கியது ! உயிரும் போனது !  நாகரீக போர்வைதனில் - இங்கு பொல்லாத பூசல்கள் கடல் தாண்டி வந்ததுவே  கண்ணறியா வைரஸ் !  கொரோனா என்ற பெயரை கொடூரமாய் சூட்டினர் கொஞ்சி பேசாமல் கொஞ்சமாய் வாயை மூடினர் ! சிட்டாய் பறந்த மனிதன்  சிறைப்பட்டான் வீட்டில் உற்றார் , உறவினர்கள் எல்லாம் உற்றுப்பார்க்கும் புள்ளிகளாய் - இங்கு! பசியோடும் பட்டினியோடும்  போராடும் வாழ்வு இங்கு  பகைவர்களாய் பலரையும்  பார்க்கின்ற கணம் இது ! தாய் என்று ஓடவும் முடியவில்லை ! தாரம் என்று பார்க்கவும் இயலவில்லை!  தன்னந்தனியே தனிமையிலே  எரியுதய்யா சில உயிர்கள் ! தொடர்பாடல் சாதனங்களில்  தொடர்ந்து வரும் கல்வி தொகையானோருக்கு இங்கில்லை  தொடர்பு சாதனம் என்ற பள்ளி ! மலிவான பொருட்கள் கூட  மலையேறி போனது வில...

38 | SS | எதிர்பார்ப்பு

  எதிர் பார்ப்பு அறிவு கொண்டு தான் அகிலம் ஆள முடியுமென்று அகரம் படிக்க நாங்கள் ஆசையாய் பள்ளி சென்றோம் அடுக்கு மாடி கட்டிடமும் ஆடம்பர வருப்பறையும் - இல்லை அன்பு ஒன்றே அறனென்று ஓதும் ஆசிரியர் மட்டுமே எமக்குண்டு போட்டிப் போட்டு படித்து ஒரு நாள் பேட்டி கொடுப்போம் பத்திரிக்கைக்கு பட்டம் பல பெற்று மாற்றி படைப்போம் புது மலையகத்தை இப்படி எத்தனை ஆசைகளை சுமந்து எதிர் கொண்டோம் இறண்டாயிரத்து இருபதை இருளாய் போகும் எதிர்காலம் என்று எள்ளளவும் எண்ணியதில்லை இன்று இருந்த இடத்திலேயே இணைய கல்வி நடக்கிறது இருக்கின்ற பிரச்சினைகளில் -நாங்கள் இணையம் தேடுவது எப்படி உலை கொதித்தும் அரிசியில்லை உயர் ரக கைப்பேசிக்கு எங்கே போக ஆன்லைன் கல்வி கற்க ஆசைதான்- எங்களுக்கும் ஆயிரம் ரூபா சம்பளத்தில் ஆடிப் போகும் விலைவாசியில் அரை வயிறு நிறைந்தால் போதும் ஆன்லைன் கல்வி அப்பறமே பள்ளி திறந்தால் படிப்போம் பட்டம் பலவும் பெறுவோம் தரமான கல்வி கிடைத்தால் தரணியை நாங்கள் ஆள்வோ ம் by Sridevi F12

11 | SS | விடியலின் விளிம்பில்

விஞ்ஞான விதையில் விழுதான வைரஸே! கொஞ்சம் எம் விழி பார்த்திடு.... இருண்ட வரைகளுக்குள் மருண்ட மரைகளாய் சுருண்டு கிடக்கின்றோம் அருண்டு உன்னாலே! புத்தகம் ஏந்திட புத்தாடை அணிந்திட பிஞ்சுகள் முகங்களில் ஏக்கங்கள் பாராயோ? புத்தாக்கம் படைத்திட புதுமைகள் பார்த்திட பிள்ளைகள் கண்களின் கனாக்களை காணாயோ? முகாந்திரமிட்ட உன் முள்வேலி தாண்டி வறுமை இல்லா வாழ்வை தேட விடு மூளைச்சாவு காணும் முன்னம்- எம் மூச்சுக்காற்றை முகக்கவசம் தாண்ட விடு பண்டம்பாடி விற்று பிண்டம் வளர்த்திட்டோம் பணவீக்கம் குறைத்து பொருளாதாரம் வளர்த்திடுவோம் ஏழ்மை விலக்கி செழுமை அடைந்திட வாழ்வு காக்கும் விவசாயம் வளர்த்திடுவோம். வளமிழந்தோம் எம்மை நலமும் இழக்க விடாதே! வறுமைகோட்டினை அழித்திட வழி விடு உலகின் அமைப்பை உருக்குழைக்க உனக்கும் எனக்கும் உரிமை இல்லை! இத்தனை நாள் அத்தனையும் உனதாக்கிய இருமாப்பிலே இருப்பிடம் நீங்கி போ.... விடியலின் விளிம்பில் நிற்கின்றோம் விழித்தெழுவோம் எம் வாழ்வு தழைத்தெழவே! துயர்க்கும் ஏழ்மை துவண்டு மடிய நாம் துணிந்தெழும் புகழுரைத்திடுவோம்! by S. Nandhini Devi

02 | SS | பேரலைத்தொற்றும் பெரு வளர்ச்சியும்

தீ நுண்மியே பரிவட்ட நச்சு உயிரியே! தீயினால் சுட்ட புண்ணும் ஓர் நாள் ஆறிவிடுமே! தீர்க்கமுடியாதே என்னை என்று திமிராய் நீ ஆணவம் கொள்ளாதே! திட்டம் தீட்டி நாளை அழித்து விடுவோமே! திடம் கொண்டு இனி உன்னோடு பயணிப்போமே! நேர்மையாய் முகக்கவசத்தோடும் திரவகைசுத்திகரிப்போடும் நேர் உற்பத்தியை நேரில் உற்பத்தியாக்க ஊக்கமளிப்போமே! நேரில் உற்பத்தியால் தேசிய உற்பத்தியை அதிகரிப்போமே! நேசத்தோடு புதிய தொழில் வாய்ப்புகளை வழங்கிவிடுவோமே! நேரான வழியில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிவிடுவோமே! நேரத்தை வீணடிக்காது நிகழ்நிலை பயன்பாட்டுடன் வெற்றி பெறுவோமே! வினைத்திறனான வளங்களைக் கொண்டு உட்கட்டமைப்பு வசதிகளை விளைத்திறனான வகையில் உருவாக்கி விருட்சம் போல் நிகழ்நிலை வர்த்தக கைத்தொழில் தாபனங்களை விண்ணுயரம் வரை செயற்படுத்தி விடுவோமே! விழிப்புணர்வோடு வீதிச்சாலைகளை அமைத்து விசித்திரமான உன்னை விரட்டிடுவோமே! சமத்துவமாய் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்புகளோடு சட்டங்களையும் கொள்கைகளையும் சமமாய் வலுப்படுத்தி சமூகச் சூழல் பிரச்சினைகளை தீர்த்து விட சரியான முறையில் உற்பத்தியையும் நுகர்வையும் சன்மானத்தோடு முகாமைத்துவம் செய்திடுவோமே! ச...