எதிர் பார்ப்பு
அறிவு கொண்டு தான்
அகிலம் ஆள முடியுமென்று
அகரம் படிக்க நாங்கள்
ஆசையாய் பள்ளி சென்றோம்
அடுக்கு மாடி கட்டிடமும்
ஆடம்பர வருப்பறையும் - இல்லை
அன்பு ஒன்றே அறனென்று ஓதும்
ஆசிரியர் மட்டுமே எமக்குண்டு
போட்டிப் போட்டு படித்து ஒரு நாள்
பேட்டி கொடுப்போம் பத்திரிக்கைக்கு
பட்டம் பல பெற்று மாற்றி
படைப்போம் புது மலையகத்தை
இப்படி எத்தனை ஆசைகளை சுமந்து
எதிர் கொண்டோம் இறண்டாயிரத்து இருபதை
இருளாய் போகும் எதிர்காலம் என்று
எள்ளளவும் எண்ணியதில்லை
இன்று இருந்த இடத்திலேயே
இணைய கல்வி நடக்கிறது
இருக்கின்ற பிரச்சினைகளில் -நாங்கள்
இணையம் தேடுவது எப்படி
உலை கொதித்தும் அரிசியில்லை
உயர் ரக கைப்பேசிக்கு எங்கே போக
ஆன்லைன் கல்வி கற்க ஆசைதான்- எங்களுக்கும்
ஆயிரம் ரூபா சம்பளத்தில்
ஆடிப் போகும் விலைவாசியில்
அரை வயிறு நிறைந்தால் போதும்
ஆன்லைன் கல்வி அப்பறமே
Comments
Post a Comment