Skip to main content

Posts

Showing posts from September 24, 2021

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

23 | SS | சக வாழ்வே சமத்துவம்

திடமானக் கொள்கைகளை வகுத்துக் காட்டியே தீராத தொல்லைகளை தொலைத்துக் கட்டிடு  சுயத்தொழில் பொருளாதாரம் வறுமை ஒழிப்புக்கு இதுதானே மூலாதாரம்  திட்டமிடு உற்பத்தித் திறனைத் தீட்டியெடு  மதிநுட்பத்தையும் மனதில் கொண்டால் இறக்குமதியையும் குறைத்துக் கொள்ளலாமே  அன்னிய உறவில் கண்ணியம் காத்திடின்  எண்ணியச் செயலில் ஏற்றம் கண்டிடலாம்  பின்னிய இராஜதந்திர முடிச்சுகளை பிணைமுறியிலிடாதே  மாற்றுத்திறனாளிகளும் உழைப்பிற்கான போராளிகள் தானே  உழைப்புக்கு ஏது வயது  பால்நிலை சமத்துவத்தையும் சரியாகப் பேணு இலாபத்தையும் முழுமையாகத் தேடு  அநீதியான செயல்களை அடியோடு ஒழித்திடல் நன்றே ஒன்றான சமூகமொன்றை உருவகித்துக் காட்டு  சரியானச் சம்பளத்தை முறையாகக் கூட்டு  கூட்டுறவு முறைகளைக் கொண்டு பணத்தை  சிறுகச் சிறுக சேமித்து வை  சிந்தனைக்குள் அதையென்றுமே பூட்டி வை சரித்திரத்திலும் இடம் ஒதுக்கி வை  சந்ததிக்கும் அதைச் சொல்லி வை  செங்கோல் ஆட்சியும்;  நல் சிந்தனையில்; மாற்றம் வரும்  பொறுப்புடன் செயலாற்றிடின்  எதிர்பார்ப்பு ஆண்டுகளில்  ஏற்றத்தாழ்வுகளையும் குறைத்திடலாமே by S.VINOTHAN

22 | YS | வன்ம கொரோனா… தன்னிறைவு இயற்கை வேளாண்மை

உயிர்களின் உதிரம் குடிக்கும் - பெரும் இரத்த காட்டேரி கொரோனாவே ! வான் கடல் கடந்து வந்து புதிய வரலாற்றை வடித்தெடுத்த சிப்பியே! வாழ்வை கிழித்து ஓரிடம் ஒடுக்கிய மூன்றாம் உலகப்போரே ! ஏற்றுமதி > இறக்குமதி மாற்றம் கண்டதே ! பொருளாதாரம் வீழ்ச்சி கண்டதே ! நாடோ முடக்க  நிலையில் > பாட்டாளி வர்க்கம் வறுமை கோசத்தில் !  அன்னையின் உதிரமும் > போசாக்கு உண்டியும் ஒரு சாராருக்கு உயிர் யாசகம் தந்ததே ! ஆரோக்கியம் அற்ற இரசாயன உணவுகளிள்  மாறுபாடான வாழ்கை முறைகளில் அமிழ்ந்த மானுடருக்கு நுரையீரல் கசிந்து தாங்கவொன்னா வெதனையும் > சுடுகாடும் வழிகளானதே !  பண்டைய பசுமை புரட்சி > சனத்தொகை அதிகரிப்பினால் முடங்கியது  தரம் குன்றிய இரசாயன புரட்சி தோழமையாக வெற்றி கண்டது முறை கேடான உணவு வழக்கம் வாழ்வோடு ஒப்பந்தம் சித்தரிதத்து. "உயர் இரசாயன விளைச்சல் உடலுக்கு கேடு"  செயற்கை வளர்ச்சி ஊக்கியே அதிக புரதம் கொடுத்து புற்று நோய் உண்டு பண்ணினாய் > உயிர் சத்து > நுண் ஊட்ட குறைபாடு தோற்றுவித்து இரத்த கொதிப்பும் > நீரிழிவும் சொந்தமாக்கினாய் இன் நிலைகளில் தான் எதிர்ப்பு சக்தி குறைவடைந்து கொரோனாவே உன்

21 | YS | புதிய உலகம்

பகுத்தறிவு கொண்ட நாங்கள் அந்த அண்டவெளிக்கே சென்றவர்கள் நாங்கள் இந்த கொரோனாவை கண்டு அஞ்சுவதா நோயிற்கு பயந்து நின்றால் உலகம் கடுவெளியில் நெருக்கிவிடும் நிலையான இலக்குகள் எல்லாம் கடுவளியில் அழிந்து விடும் நம் நிலைபேண்தகு அபிவிருத்தியை நோக்கிச்சென்றால் பட்டினி இல்லா உலகம் ஒன்றை அடுத்த தலைமுறைக்கு கொடுத்து விடும் களிமண் ரொட்டி திண்ண இனிமேலும் முடியாது இவ் இலக்கை அடையாவிட்டால் இவ்வுலகம் விடியாது பட்டினி இல்லா நாடுகளை பார் எங்கும் விதைக்க வேண்டும் போஷாக்கின்மை என்ற சொல்லை உலக அகராதியிலேயே எடுக்க வேண்டும் இருப்பவன் மனம் இறங்கி பசிப்பவனுக்கு ஒருவேளை உணவாவது கொடுக்க வேண்டும் நிலைபேண்தகு இமயம் அடைய கண்டங்கள் தாண்டியும் உதவ வேண்டும் போஷாக்கு உணவு பற்றி பூலோகம் எங்கும் விளக்க வேண்டும் பசியில்லா உலகம் காண தேசமெல்லாம் ஒன்றினைந்து விவசாயம் செய்ய வேண்டும் இலக்கு என்ற வாகை சூட வருடங்கள் ஒன்றும் தூரமில்லை தேசங்கள் எங்கும் கைக்கோர்த்து நின்றால் கொரோனாவெல்லாம் ஒன்றுமேயில்லை…. பட்டினி பஞ்சங்கள் எல்லாம் நம் தலைமுறையோடு போகட்டும்  நிலைபேண்தகு அபிவிருத்தியை நோக்கி நம் கனவுகள் கூடட்டும் அதை இவ் உலகமே பாடட்டும்

20 | YS | கல்வியும், அபிவிருத்தி கரமும்.

கொரோனாவுடன் தொலைந்த கல்வியை - இன்று இணைய வழி புகுந்து தொடர்கிறேன்... அழியாத செல்வம் அதை - இன்று அனுதினமும் பயில்கின்றேன்... ஊதியமில்லா உரம் அதனை சாத்தியமாக தொடர்கின்றேன்... மதி கொண்டு வளரும் திறன் அதை நானும் கலை கொண்டு வளர்கின்றேன்... இருள் சூழ்ந்து நிற்கும் நிலையது மாறி வெளிச்சம் படர தொடர்கின்றேன்... விதியதை மாற்றிட விதையாக அபிவிருத்தி இருக்க விளைநிலம் கல்வியை விதவிதமாய் தொடர்கின்றேன்.. இடைப்பட்ட காலத்திலும் இலவசமாக தரம் பெறுகின்றேன்... அபிவிருத்தி தாய் தந்த கருணையால் தரமான கல்வி அதை தொடர்கின்றேன்... by R. Sushanthani

19 | YS | கல்வி

அள்ள அள்ளக் குறையாத போக்கிஷக் கல்வியோ கொரோனா அரக்கனின் கோர தாண்டவத்தால் உருமாறி விட்டது அலைபேசிக் கல்வியாக காசு உள்ளவனும் தொலைபேசி உள்ளவனும் மட்டுமே படிக்க ஏழை மாணவனின்  கதி என்ன?  அந்தோ பரிதாபம் தோட்டத் தொழிலாளியின் மகன் படிக்க அலைபேசியின்றி தவித்து கைவிடுகின்றான் கல்வியை  இன மத மொழி பாராது  வரட்சியின்றி வழிந்தோடும் கங்கையான கல்வி ஏழை - பணக்கார பேதம் பார்ப்பது தகுமா ? சமத்துவ கல்வியை நாடி  சரித்திரம் படைக்க முன்வருவோம். P. Vinushayini  

18 | YS | முருக்கு மீசைகவி

வையகம் போற்றும் கவிஞருக்கே என் நெஞ்சகம் போற்றி கவி வடித்தேன். வையகம்  போற்றும்   கவிஞருக்கே என் நெஞ்சகம் போற்றி கவி வடித்தேன். காலங்களுக்கு ஏற்ப கவி வடித்தோர்பல வடித்தகவி காலங் காலமாய் நிலைப்பதோ சில பல அடிகளில் கவி வடித்தாலும் பாரத கவி பாரதியின் கவிக்கு ஈடாகுமோ அவர்கவியின் சித்தமோ என்னவோ நடப்பதெல்லாம் கவியடி தொட்டுநடக்கிறது. கொடுமைகள் கண்டறிந்த நாதருக்கு நடந்தது கொடுமையோ இல்லை காலங்கள் செய்தகோலமோ என்நாயகன் காலமானநேரத்தில் இருபது பேர் இருந்தது. என் நாயகன் காலமானநேரத்தில் இருபது பேர் இருந்தது. அய்யன் பாடையில் சென்றபின்பு தான் பதான் பாடினர் பார்வை பாரதியை காண்கிறது. நினைவில் நீங்காத கனவில் களையாத முருக்கு மீசை கவிஞரின் வரிகள் முடங்கி கிடக்கும் மானிடரை மீட்டிடாதோ. நினைவில் நீங்காத கனவில் களையாத முருக்கு மீசை கவிஞரின் வரிகள் முடங்கி கிடக்கும் மானிடரை மீட்டிடாதோ. by T.Yuvanshankar

17 | SS | கொஞ்சம் கேளும் கோர அனுபவம்

முகங்களை உயர்த்தி முன்னுரிமை அளித்தவன் - அகங்களை ஆன்மாவிற்கு சொந்தமானது என அறியாதவனாய் சொந்தங்களை விட சொத்துக்களை உரிமையாக்க முனைந்தான்.... கொத்துக் கொத்தாய் உணவுக்கு ஊசலாடும் உறவுகள் தன் உறவுகளிடத்தே ஊமையாக, நிவாரணப் பொதியினிடத்தே ஊணமாக அகத்தின் அழகு முகத்தில் என இருமாப்புடன் இருந்தோர், தனித்து விழித்து வாழ எத்தனிக்கிறான் தனி மனிதன்.... காணாத அளவில் கரைக்கொண்ட கடல் - சுனாமியாய் உயிர்களை தாண்டவமாடி கரையில் மடிய இது சீற்றமல்ல.... தனித்திரு விழித்திரு காணாத கிருமி என்றீர்..... மக்கள் வயிற்றை நிரப்ப மணுவோடு மகேஷனை தரிசிக்க மக்கள் முகம் பாராது மகேஷன் முகத்தை மூடிக்கொண்டு எத்திசை சென்றானோ????? மதங்கள் மனிதனை மனங்களாக்க எத்தனித்த போது - மனங்களால் மதங்களை பணத்தால் காவு கொண்டான் மனிதன்.... பாமரனோ பண்டைய வைத்தியத்தை கையிலெடுக்க, பகுத்தறிவாளனே பரவுதலை தடுக்கின்றான்.... பணத்தால் ஓடிய கால்கள் மனத்தால் ஐம்புலன்களை அடக்கி அவதரித்த குழந்தையின் பாணியில் படுக்கையில் பொழுதைக் கழித்திட பங்குகளின் வளர்ச்சியில் நிருவகித்த திட்டங்கள் நிதர்சனமாக நிர்வாணமான முதல் தருணம்.... மைதானங்கள் மந்தமாக மதுசாலைகள் தந்தம