உயிர்களின் உதிரம் குடிக்கும் - பெரும் இரத்த காட்டேரி கொரோனாவே ! வான் கடல் கடந்து வந்து புதிய வரலாற்றை வடித்தெடுத்த சிப்பியே! வாழ்வை கிழித்து ஓரிடம் ஒடுக்கிய மூன்றாம் உலகப்போரே !
ஏற்றுமதி > இறக்குமதி மாற்றம் கண்டதே ! பொருளாதாரம் வீழ்ச்சி கண்டதே ! நாடோ முடக்க நிலையில் > பாட்டாளி வர்க்கம் வறுமை கோசத்தில் !
அன்னையின் உதிரமும் > போசாக்கு உண்டியும் ஒரு சாராருக்கு உயிர் யாசகம் தந்ததே ! ஆரோக்கியம் அற்ற இரசாயன உணவுகளிள் மாறுபாடான வாழ்கை முறைகளில் அமிழ்ந்த மானுடருக்கு நுரையீரல் கசிந்து தாங்கவொன்னா வெதனையும் > சுடுகாடும் வழிகளானதே !
பண்டைய பசுமை புரட்சி > சனத்தொகை அதிகரிப்பினால் முடங்கியது தரம் குன்றிய இரசாயன புரட்சி தோழமையாக வெற்றி கண்டது முறை கேடான உணவு வழக்கம் வாழ்வோடு ஒப்பந்தம் சித்தரிதத்து. "உயர் இரசாயன விளைச்சல் உடலுக்கு கேடு"
செயற்கை வளர்ச்சி ஊக்கியே அதிக புரதம் கொடுத்து புற்று நோய் உண்டு பண்ணினாய் > உயிர் சத்து > நுண் ஊட்ட குறைபாடு தோற்றுவித்து இரத்த கொதிப்பும் > நீரிழிவும் சொந்தமாக்கினாய் இன் நிலைகளில் தான் எதிர்ப்பு சக்தி குறைவடைந்து கொரோனாவே உன் தாக்கம் வட்டமிட்டு உலாவுகிறது !
ஆனால் நீ வித்திட்டது எமக்கான மாற்றமும் > விழிப்புணர்வும்; அன்றோ !
போசாக்கான உணவு சங்கிலியை உண்டு பண்ணினாய் உலகத்தவரிடையே ! உயிர் உரங்களின் தொழிற்பாடு > சிறப்பு நீர் பாசணம் > பல்லுயிர் பெருக்கம் > விலங்கு வேளாண்மை மூலம் நஞ்சற்ற விளைச்சல் உணவு > மாடி குடியிருப்புக்கும் மண்வாசனை > விதை தட்டுகளும் கழிவு முகாமைதுவமான பச்சை வீட்டு நோய் உற்பத்தியும் > வினைதிறன் இயற்கை வித்து களஞ்சியம் தொடரத்தான் போகின்றன…
கொரோனா உன் வீழ்சிக்கு எங்கள் நிலை பேண்தகு உயிரோட்டமான தன்னிறைவு கரிம வேளாண்மை அரசாங்கத்தின் பங்கீட்டினால் உயர்ச்சி பெற போகின்றது . வறுமை மட்டமும் > நாட்டின் பொருளாதாரமும் கரிம பசுமை புரட்சியாய் மீளௌப் போகின்றது .......
விழிப்பணர்வுகளாக !......
by A. Junohapes
Comments
Post a Comment