Skip to main content

Posts

Showing posts from October 4, 2021

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

60 | CJ | வாழ்க்கையில் ஆசைப் பட்டதெல்லாம்

வாழ்க்கையில் ஆசைப்  பட்டதெல்லாம் கிடைக்கவில்லையே என்று  கவலை கொள்ளாதே...  ஆனால்  உனக்கு  தேவையானது எல்லாம்  அப்போதே கிடைத்துக் கொண்டேதான் இருக்கிறது….!!! தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக இருப்பதை விட…. தவறை சுட்டிக்காட்டி விட்டு  எதிரியாக வாழ்ந்து விடலாம்….. by P.Ojasvini 

59 | CS | ஏழை

ஆடம்பரமாக வாழ ஆசையில்லை     இறுதி வரை இறைவனை தவிர  வேறு எவரிடமும் கையேந்தாமல்    வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான்      குடிசைக்கும்  அஸ்திவாரம் நிலம் தான்  எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன்     என்ற பாகுபாடு இல்லை ...!  கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி      தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...!  ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய்         நீ சொர்க்க வாசல் திறப்பாய்  உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை     வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று       எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு  மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு       பஞ்சம் இல்லா இடமாகும் ...!        

58 | CS | பசியை ஒழிதல்

விவசாயின் உழைப்பு வீணாகுமா ! மக்களின் கனவு நினைவாகுமா !  பசியின் மருந்து உணவாகுமோ ! உணவின் பாதுகாப்பு மேம்படுமோ ! தாயின் கருவறை காப்பு  செடியின் கருவறை வித்து  மனிதனின் முதிர்ச்சி முதுமை  தாவரத்தின் முதிர்ச்சி போசணை  அன்பின் விதையை விதைப்போம்  விவசாயத்தின் அருமையை வெளிப்படுத்துவோம்  பசியின் கொடுமையை அழிப்போம்  உணவின் தரத்தை உயர்த்துவோம் by  N. Kavilakshika