காலை எழும்புனது கால் வயிறு கஞ்சுக்காக - உனக்கு கல்லு முள்ளு குத்தினது கால் நடையாய் நடந்ததுமே என் கண் முன்னே நிற்குதய்யா! வறுமையின் பிடிக்குள்ளயும் - உன் பெத்த புள்ள வயிறாற - உன் வயிற காய வச்ச வருத்தமெல்லாம் வெறும் - வார்த்தைக்குள்ள அடங்கிடுமா? பச்ச புள்ள உடம்புகாரி பசி தீர்க்க மலையேறி பத்தாந் தேதி வந்து விட்டா பாவி மக படும் பாட சொல்ல பத்தாது இந்த வெறும் காகிதமே! வட்ட மேசை மாநாடாம் வறுமையே பிணிக்கோடாம் வறுமையே ஒழிக்கணுனு வாய் கிழிய பேசினாலு அடுப்பங்கரை அறிஞ்சிருக்கு அவ பட்ட அவலமெல்லாம்! தலைச்ச புள்ள தலைநிமிர்ந்தா தாங்க முடியாத துயரமெல்லாம் தலைத்தெறிக்க ஓடும்னு தவியா தவிச்சிடுவா...! வாசற்படி தாண்டி வந்தா வயிறு நிறைய உணவுக்காக வறியவனின் வறுமை நீங்க கோரப்பசி தீர்ந்திடுமா? உலகம் கை கோர்த்திடுமா??? by P. Dharshani