ஊரடங்கு சட்டம் போட்டார்கள்பல ஏழை ஜனங்களின் பசி அடங்க எந்த சட்டதிட்டமோ போடவில்லை.உலையில் தண்ணீர் கொதிக்க வயிறு பற்றி எரியும்.கட்டுப்படியாகாத விலை இருந்தும்வயிற்றை கட்டுப்படுத்த வழியில்லை.விளைந்த நெல்லில் ஒரு நெல்லில் கூட ஏழையின் பெயர் எழுதப்படவில்லை.யார் குற்றம் ?இருக்கின்றவன் சேகரித்தால் சேமிப்பு.இல்லாதவனுக்கு ஏற்படும் பாதிப்பு.எவன் பணக்காரன் ? எவன் ஏழை ?அவனும் பதுக்குகின்றான் இவனும் பதுக்குகின்றான்.அவன் சேமிக்க என்கிறான் இவன் பசிக்கு என்கிறான்.நிவாரணம் என்பது வறுமை குடும்பத்திற்கு அல்ல.அது கூட்டுக் குடும்பத்திற்கு உரியதானது.மனித வர்க்கத்தை போலவேஅடிக்கின்ற காற்று > மழைக்கு கூட ஏழையின்வயிற்றில் அடித்து தான் பழக்கம் போல.நிவாரண பணி எல்லாம்எவன் எவன் வீட்டு நிர்மாணபணிக்கோ போய்விட்டது.ஏழை வைத்த வாழை இருபுறமும் குலை தள்ளும்அதில்; ஒரு பழம் கூட அவனுக்கு சொந்தமில்லை.பல பேரின் ஏழ்மை வாழ்க்கையில் கண்ணத்தில்வறுமை வரைந்த கோலமாய் கண்ணீர் உண்டு.பதுக்கப்படுகின்ற எதுவும் சமமாக கொடுக்கப்படுமானால்ஏழையின் வறுமை பகைவான் ஒழிவான்.byA. lakshika
ஆடம்பரமாக வாழ ஆசையில்லை இறுதி வரை இறைவனை தவிர வேறு எவரிடமும் கையேந்தாமல் வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான் குடிசைக்கும் அஸ்திவாரம் நிலம் தான் எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை ...! கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...! ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய் நீ சொர்க்க வாசல் திறப்பாய் உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு பஞ்சம் இல்லா இடமாகும் ...!
Comments
Post a Comment