முகங்களை உயர்த்தி முன்னுரிமை அளித்தவன் - அகங்களை ஆன்மாவிற்கு சொந்தமானது என அறியாதவனாய் சொந்தங்களை விட சொத்துக்களை உரிமையாக்க முனைந்தான்.... கொத்துக் கொத்தாய் உணவுக்கு ஊசலாடும் உறவுகள் தன் உறவுகளிடத்தே ஊமையாக, நிவாரணப் பொதியினிடத்தே ஊணமாக அகத்தின் அழகு முகத்தில் என இருமாப்புடன் இருந்தோர், தனித்து விழித்து வாழ எத்தனிக்கிறான் தனி மனிதன்.... காணாத அளவில் கரைக்கொண்ட கடல் - சுனாமியாய் உயிர்களை தாண்டவமாடி கரையில் மடிய இது சீற்றமல்ல.... தனித்திரு விழித்திரு காணாத கிருமி என்றீர்..... மக்கள் வயிற்றை நிரப்ப மணுவோடு மகேஷனை தரிசிக்க மக்கள் முகம் பாராது மகேஷன் முகத்தை மூடிக்கொண்டு எத்திசை சென்றானோ????? மதங்கள் மனிதனை மனங்களாக்க எத்தனித்த போது - மனங்களால் மதங்களை பணத்தால் காவு கொண்டான் மனிதன்.... பாமரனோ பண்டைய வைத்தியத்தை கையிலெடுக்க, பகுத்தறிவாளனே பரவுதலை தடுக்கின்றான்.... பணத்தால் ஓடிய கால்கள் மனத்தால் ஐம்புலன்களை அடக்கி அவதரித்த குழந்தையின் பாணியில் படுக்கையில் பொழுதைக் கழித்திட பங்குகளின் வளர்ச்சியில் நிருவகித்த திட்டங்கள் நிதர்சனமாக நிர்வாணமான முதல் தருணம்.... மைதானங்கள் மந்தமாக மதுசாலைகள் தந்தம...