முகங்களை உயர்த்தி முன்னுரிமை அளித்தவன் - அகங்களை
ஆன்மாவிற்கு சொந்தமானது என அறியாதவனாய்
சொந்தங்களை விட சொத்துக்களை உரிமையாக்க முனைந்தான்....
தன் உறவுகளிடத்தே ஊமையாக, நிவாரணப் பொதியினிடத்தே ஊணமாக
அகத்தின் அழகு முகத்தில் என இருமாப்புடன் இருந்தோர்,
தனித்து விழித்து வாழ எத்தனிக்கிறான் தனி மனிதன்....
காணாத அளவில் கரைக்கொண்ட கடல் - சுனாமியாய்
உயிர்களை தாண்டவமாடி கரையில் மடிய இது சீற்றமல்ல....
தனித்திரு விழித்திரு காணாத கிருமி என்றீர்.....
மக்கள் வயிற்றை நிரப்ப மணுவோடு மகேஷனை தரிசிக்க
மக்கள் முகம் பாராது மகேஷன் முகத்தை மூடிக்கொண்டு எத்திசை சென்றானோ?????
மதங்கள் மனிதனை மனங்களாக்க எத்தனித்த போது - மனங்களால்
மதங்களை பணத்தால் காவு கொண்டான் மனிதன்....
பாமரனோ பண்டைய வைத்தியத்தை கையிலெடுக்க,
பகுத்தறிவாளனே பரவுதலை தடுக்கின்றான்....
பணத்தால் ஓடிய கால்கள் மனத்தால் ஐம்புலன்களை அடக்கி
அவதரித்த குழந்தையின் பாணியில் படுக்கையில் பொழுதைக் கழித்திட
பங்குகளின் வளர்ச்சியில் நிருவகித்த திட்டங்கள் நிதர்சனமாக நிர்வாணமான முதல் தருணம்....
மைதானங்கள் மந்தமாக மதுசாலைகள் தந்தமாக
பலசரக்கு கடைகள் பாதாள உலகிற்கு செல்லவே...
வியர்வையில் கொந்தளித்த நீர் - கண்ணீரால் வரம்பின்றி வளம் வருமோ????
வேதனையில் ஊரெல்லாம் அடக்க உத்தரவிடும் அரசு...
புலன்களை அடக்கி புனிதத்தை பேணி - சமரசமாய்
சங்கமிக்கும் ஐவலயங்கள் பாரினில் - உலக கோப்பையுடன் உருண்டோடியது.....
உள்ளத்தின் உணர்வுதனை உளமாற இதழ்தனிலே என இருமாப்புடன் இருப்போரே அறிவீர் - ஊகான் என் பிறப்பிடம், அகிலமே என் இருப்பிடம்...... பத்து மாதச்சுமை தட்டுத் தடுமாறி
தள்ளிப்போக, (தூய்மை கொண்ட) திரையரங்குகளே (சூழல்) மாசுகளை தடுத்தோட செய்யும் ஆறுகள்...
by
Super kavithai
ReplyDelete