Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

02 | SS | பேரலைத்தொற்றும் பெரு வளர்ச்சியும்



தீ நுண்மியே பரிவட்ட நச்சு உயிரியே!
தீயினால் சுட்ட புண்ணும் ஓர் நாள்
ஆறிவிடுமே!
தீர்க்கமுடியாதே என்னை என்று
திமிராய் நீ ஆணவம் கொள்ளாதே!
திட்டம் தீட்டி நாளை அழித்து
விடுவோமே!
திடம் கொண்டு இனி உன்னோடு
பயணிப்போமே!

நேர்மையாய் முகக்கவசத்தோடும்
திரவகைசுத்திகரிப்போடும்
நேர் உற்பத்தியை நேரில்
உற்பத்தியாக்க ஊக்கமளிப்போமே!
நேரில் உற்பத்தியால் தேசிய
உற்பத்தியை அதிகரிப்போமே!
நேசத்தோடு புதிய தொழில்
வாய்ப்புகளை வழங்கிவிடுவோமே!
நேரான வழியில் புதிய
கண்டுபிடிப்புகளை
உருவாக்கிவிடுவோமே!
நேரத்தை வீணடிக்காது நிகழ்நிலை
பயன்பாட்டுடன் வெற்றி
பெறுவோமே!


வினைத்திறனான வளங்களைக்
கொண்டு உட்கட்டமைப்பு வசதிகளை
விளைத்திறனான வகையில்
உருவாக்கி
விருட்சம் போல் நிகழ்நிலை வர்த்தக
கைத்தொழில் தாபனங்களை
விண்ணுயரம் வரை செயற்படுத்தி
விடுவோமே!
விழிப்புணர்வோடு
வீதிச்சாலைகளை அமைத்து
விசித்திரமான உன்னை
விரட்டிடுவோமே!

சமத்துவமாய் மக்கள்
அனைவருக்கும் சமவாய்ப்புகளோடு
சட்டங்களையும் கொள்கைகளையும்
சமமாய் வலுப்படுத்தி
சமூகச் சூழல் பிரச்சினைகளை
தீர்த்து விட
சரியான முறையில் உற்பத்தியையும்
நுகர்வையும்
சன்மானத்தோடு முகாமைத்துவம்
செய்திடுவோமே!
சாதி பால் வயது
வேறுபாடுகளின்றிய சமூகமாய்
சாதனை விருதுகளை
பெருவளர்ச்சியில் பெற்றிடுவோமே!

by R. Dhanushalini

Comments

  1. அருமையான, அர்த்தமுள்ள கவிதை வாழ்த்துக்கள் தனு 🥰🥰

    ReplyDelete
  2. சிறப்பான கவிதை

    ReplyDelete
  3. சிறந்த கவிதை👍👍🥰

    ReplyDelete
  4. நுண்மையான கருத்துக்கள்
    சிறந்த வரிகள் மற்றும் சிறந்த படைப்பு

    ReplyDelete
  5. Nalla kavithi varigal. Vaalthukkal.✨👍🏻

    ReplyDelete
  6. அருமையானகவிதை

    ReplyDelete
  7. 🏆👍🏻சிறந்த கவிதை salu 👍🏻🏆

    ReplyDelete
  8. சிறப்பான கவிதை வாழ்துக்கள் தனு👍👍

    ReplyDelete
  9. Beautiful kavithi💖💖💖💗💗💗💗💓💓💓💛💓💓💞💞💞💕💕💕💕💕💕💕💟💟💟💟💟❣❣❣❣💟💛🧡💖💗💓💞💕💟💜💜💜🤎❣💟💚💚💙💌💘💝💝💘💌💟💕💞💓💛💛🧡❤🤍🤍🤍🤍🤍🤍❤❤🧡🧡🧡💛💛💚💚💙💜💜👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👌👌👌👌👌👈👌

    ReplyDelete
  10. சிறந்த சிந்தனை
    ஆழமான வரிகள்...
    அழகான மொழிநடை..
    வாழ்க...
    வளர்க....

    ReplyDelete
  11. சிந்திக்க தூண்டும்
    சிறப்பான வரிகளை
    சிந்திய உங்கள் கவிதைக்கு
    சிரம் தாழ்த்துகின்றேன்.
    வாழ்த்துக்கள் 👍🤝

    ReplyDelete
  12. சிறப்பாயுள்ளது.உம்மால் தமிழுக்கு ஒரு தொண்டு.நடக்கட்டும்,வளரட்டும்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. Wow arumaiyana varigal nanbi அருமையான நடை புரியும் சொல்லாடல். உன் பேனைக்கு இன்னும் உரமிடு வாழ்த்துக்கள் தனுமா

    ReplyDelete
  15. அர்த்தமுள்ள வரிகள்

    ReplyDelete
  16. அருமையான கவிதை.Keep it up Dhanu

    ReplyDelete
  17. I like very much akka 😘😘😘😘☺☺😘☺☺☺😘☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺😚😚😚😚😚😚😚🤩🤩🤩😍😍🥰🥰😍😍🤩🤩💖💖❤🧡🧡💗💓💛💛💚💞💞💕💙💜💟❣🤎🤎🤎🤎🖤🖤🖤🖤💝💝💝💝💝💝💝💘💘💘💘💘💌💌💟💌💟💟💕💕💕💕💚💚💛💛🧡🤍🤍🤍❤🧡💛💚💙💙

    ReplyDelete
  18. Wow Dhanuma iam so happy to see your grow. Iam wish your best of luck for your future. கவி நடை கவித்துவம். சிறந்த சொல்லாக்கம். வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

16 | YS | மாற்றத்தை நோக்கி....

அரும் பெரும் வரலாறு கொண்டு ஆசியாவின் அமிர்தமாய் மின்னிக்கொண்டிருந்த தீவொன்று இயற்கை அன்னையின் இருப்பிடமாக ஈழம் எனும் பெயர் கொண்டு தன்னிறைவாய் தாளமிட்ட தீவொன்று மேற்குலக நாடுகள் மெய்சிலிர்த்துப் போகும் மேன்மை வளம் பூத்துக் குலுங்கிய தீவொன்று இப்பார் எனும் பெரும் புள்ளியை கொரானா எனும் சிறு புள்ளி அடக்கியாளும் காலம் தனில் வல்லரசு நாடுகள் வலுவிழந்து நிற்க உலகப் பொருளாதாரம் படுப்பாதாளம் நோக்கி செல்ல எம் ஈழமும் வறுமையின் வாசம் நுகர்ந்து கொண்டிருக்கிறது காலனின் பாசக்கயிறு கணத்து கொண்டு இருக்கிறது எம் தாய் ஈழத்தை கரம் தூக்கி நிமிர்ந்தெழ செய்ய சேயாய் நாம் கரம் நீட்ட வேண்டிய காலமிது விவசாயம் எனும் முதுகெலும்புக்கு போசாக்கு எனும் எழுச்சியூட்டுவோம் சமநிறைவு சமுதாயத்தை சாஸ்திரமாக்குவோம் வருங்கால தலைமுறையை வசந்தமாக்குவோம் தரமான வைத்தியத்தை நாடு முழுவதும் விஸ்தரிப்போம் கல்வி எனும் பேராயுதத்தை இளைய தலைமுறைக்கு இனபேதமின்றி ஒளிரச்செய்வோம் நியாயம் எனும் சொல்லுக்கு வலுவூட்டுவோம் எம் ஈழத்தாய் எழுந்து புன்னகையை உதிரவிட புதல்வர்களாய் எம் கடமையை கண்ணியத்துடன் செய்ய களம் காண்போம். by D. Devapragathi

54 | YS | கொரோனாவும் எம் நாடும்

வானரம் சூழ்ந்த வையகம் எங்கும்  பரவி வரும் கொடூரமான கொரோனா வாழ வேண்டிய மனிதரை வைகுண்டம் சென்றிட  வழியமைத்த கொரோனா    கூடுமா இன்னும் இல்லையேல் கூலியின் வயிற்றில் அடிக்குமா ...! அலை அலையாய் மனிதர் கூட்டத்தை கொன்று குவித்ததென்ன... அநாதை பினமாய் அள்ளி அள்ளி குவிப்பதென்ன ... கல கல வென கலகலப்பு ஒலித்து கொண்டிருந்த ஓராயிரம் வீடுகளில்  - இன்று கண்ணீரும் கம்பளையும் நிறைந்த காவியத்  தோற்றத்தை கண்டீரோ..... காடு மேடெல்லாம் ஓடித்திரிந்தவரின் கால்கள்  தரையில் பதித்து நின்றதென்ன... காணல் நீராய் போன எம் நாட்டு ஜனங்களின் கம்பீரமும் , கானகத்தையே சுற்றி வளைக்கும்  கனாக்களும் கடை தெருவிலே நின்ற  காட்சிகளை கண்குளிர கண்டீரோ கொலை கொலையாய் கொண்று தீர்த்து  கொடுங்கோலனாக மாறியதென்ன  கொரொனா என்ற கொடிய உயிரினம்  கூட்டம் கூட்டமாய் கூடி ஆடித் திரிந்த  குமரன் குமரியினம் இன்று  கூட்டுக்குள் முடங்கிக் கிடப்பதென்ன... கூலியாட்களின் குமுறல்களையும்  கூலிவீட்டு குழந்தைகளின் பசி அலறல்களையும்  கேட்கிறது அந்த காதின் வழி  கொடுங்கோலான கொரோனா என்னவோ  கோடி கோடி மக்களுக்கும் ஒரு பொது கொடுமையே ... ஆயினும் தினகூலியாளனின் அது  தினம் த