Skip to main content

Posts

Showing posts from September 20, 2021

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

13 | YS | நிலைமாறும் உலகம்

நிலை மாறும் உலகம் நாவின் தேனூற்று நற்றமிழில் வைரம் பொதித்த வரிகளில் வாசகம் கேளீர் ! கல்வி கரையில என  வேள்விகள் பல புனைந்தோம் - இனி புதிய நாட்களை வடிவாய் வனைந்து  நோய்தனில் வீழ்ந்திடாமல்  வீறுகொண்டெழுவோம். வீதியை எண்ணி வீட்டினுள்ளே  புதைந்திடாமல் புரண்டெழுவோம்  இணையவழி தடையதனை  இணைந்து நாம் நீக்கிடுவோம் சமகல்வி  வாய்ப்பதனை சகலருக்கும் கொடுத்திடவே  இணையம் மூலம் இலவசமாய் இயன்றோர் பாடம் புகட்டுவோம். அரசு கூறும் அறிவுரையும் அகமுவந்து ஏற்றிடுவோம் பரீட்சை பாடம் இரண்டையுமே பதமாய் கற்க செய்திடுவோம் வசதியற்ற வறியவர் புன்மைநிலையுற்றிடாமல் வசதியுள்ளோர் வழிய சென்று உதவிகரம் நீட்டிடுவோம். புலனம் > செயலி > நிகழ்நிலையில் புதுமை படைக்க முடியுமென புரிய வைக்க களமமைத்து கரைகாண செய்திடுவோம். வாட வைக்கும் கொவிட்டுக்கும் (19) பாடம் புகட்டி அழித்திடுவோம் நிலையை எண்ணி உரைந்திடாமல்  நிமிர்ந்து வெல்ல முயன்றிடுவோம்  நிலைமாறும் உலகம் இது  நிரந்தரமாய் ஆகிடாது. by R.SINDHUJA

12 | YS | சமுதாயமே எழுந்திரு!!!

சமுதாயமே எழுந்திரு!!! சமுதாயமே எழுந்திரு! அநீதியை எதிர்திடு! ஒவ்வொரு மனிதனையும் உயர்ந்த மனிதனாக திருத்திடு! தரமான சமுதாய மாற்றத்தை கட்டியெழுப்பிடு! நாளைய தலைமுறைக்கு நல்வழி காட்டிடு! மண்ணகத்தில் படிப்பு என்னும் படியை தாண்டிடு! மனதில் அறிவு என்னும் விதையை விதைத்திடு! அறியாமை இருளை மதி கொண்டு விலக்கிடு! முயற்சி கொண்டு தோல்வி எனும் தடையை கடந்திடு! வறுமை போக்கிட துணிந்து போராடு ! வறியோர்க்கு உதவிட வழித்தேடு! ஈயவருக்கு கரம் கொடு! பசித்தொருக்கு வயிறார உணவழித்திடு! பட்டினியை இருக்க இடமின்றி ஒழித்திடு! மரம் நடு! மனிதனாய் மாறு! உணவே மருந்து என்ற பழக்கம் கொள்! - நோய் என்னும் குழப்பம் விட்டொழியும். செயற்கையை தூர விடு! இயற்கையை கையில் எடு! உள்ளத்தில் நல்லதை விதைத்திடு!! தவறுகளை சுட்டிக் காட்டிடு! சண்டைகளை அழித்திடு! குற்றங்களுக்கு தண்டனை வாங்கிகொடு! தலைமுறைகளை தரமாக்கிடு! தடைகளை உடைத்திடு! சீரிய சமூகமாய் வளர்ந்திடு! சிறப்பான மனிதனாய் மலர்ந்திடு! மாற்றங்கள் ஒன்றே மாறாதது உன்னால் முடியும் என்னால் முடியும் நம்மால் முடியும், வெல்வோம் உயர்வோம் மாற்றம் காண்போம். இன்று முதல் புத்தம் புதிய பொலிவுடன்! by M

11 | SS | விடியலின் விளிம்பில்

விஞ்ஞான விதையில் விழுதான வைரஸே! கொஞ்சம் எம் விழி பார்த்திடு.... இருண்ட வரைகளுக்குள் மருண்ட மரைகளாய் சுருண்டு கிடக்கின்றோம் அருண்டு உன்னாலே! புத்தகம் ஏந்திட புத்தாடை அணிந்திட பிஞ்சுகள் முகங்களில் ஏக்கங்கள் பாராயோ? புத்தாக்கம் படைத்திட புதுமைகள் பார்த்திட பிள்ளைகள் கண்களின் கனாக்களை காணாயோ? முகாந்திரமிட்ட உன் முள்வேலி தாண்டி வறுமை இல்லா வாழ்வை தேட விடு மூளைச்சாவு காணும் முன்னம்- எம் மூச்சுக்காற்றை முகக்கவசம் தாண்ட விடு பண்டம்பாடி விற்று பிண்டம் வளர்த்திட்டோம் பணவீக்கம் குறைத்து பொருளாதாரம் வளர்த்திடுவோம் ஏழ்மை விலக்கி செழுமை அடைந்திட வாழ்வு காக்கும் விவசாயம் வளர்த்திடுவோம். வளமிழந்தோம் எம்மை நலமும் இழக்க விடாதே! வறுமைகோட்டினை அழித்திட வழி விடு உலகின் அமைப்பை உருக்குழைக்க உனக்கும் எனக்கும் உரிமை இல்லை! இத்தனை நாள் அத்தனையும் உனதாக்கிய இருமாப்பிலே இருப்பிடம் நீங்கி போ.... விடியலின் விளிம்பில் நிற்கின்றோம் விழித்தெழுவோம் எம் வாழ்வு தழைத்தெழவே! துயர்க்கும் ஏழ்மை துவண்டு மடிய நாம் துணிந்தெழும் புகழுரைத்திடுவோம்! by S. Nandhini Devi

07 | SS | திறந்த சிறை

  கதவுகள் இல்லை  நான்கு பக்கங்களிலும் சுவர்கள் தான் (பெண்களுக்கு) - அவை  ஆண்களால் நிர்மாணிக்கப்பட்டதாலா ? வாசலில் அவர்கள் இடும்  கோலத்திற்கான புள்ளி -அதுவரை தான்  அவர்கள் படித்தாண்டி செல்ல வேண்டும் என்பதற்காக இடப்பட்ட முற்றுப்புள்ளியாம். கண்ணீரால் சிறகு நனைந்த  அந்தப் பறவைகள் வெயில் காய  வீதிக்கு வந்தார்கள். அது சுவர்கள் இல்லாத திறந்த சிறை.  உடல் அரிப்பில் கல்லில் உரசும் ஆடுகளை போல  சில ஆண் ஆடுகள்  சதைக்கு ஆசைப்படுபவனுக்கு   சீதையானாலும் விபச்சாரிதானே.  இன்னுமொன்று இப்போதெல்லாம் பெண்கள்  வரதட்சணை கொடுப்பதில்லை. வாக்கப்பட்டு போகிறவர்கள்  ஆண்கள் தானே அதனால் தான் பெண்களுக்கு மாத பத்திரிகை சம்பளச்சீட்டு ஆனது.  காலை சூரிய உதயமும் மாலை அஸ்தமனமும்  அறியாத அளவிற்கு அதிகாரி எனும் ஆண்மாமியார்களின்  கொடுமைகள் அதிகரிக்கின்றன. சிரிப்பு என்பது உதட்டில் அல்ல  உள்ளத்தில் ஒரு ஞாபகமாய் உள்ளது. by A. Prathap  

06 | SS | மருத்துவருக்கு ஒரு கோரிக்கை

  மருத்துவருக்கு ஒரு கோரிக்கை ஐந்து முதல் ஐம்பது வரை ஆரோக்கியம் என்பது கேள்விக்குறி இது அறியாமை என்பதா ? இல்லை அலட்சியம் என்பதா ? அறியாமை என்றால் கற்றுக் கொடுங்கள். நோயாளி - மருத்துவர் > மாணவன் - ஆசிரியர் உணவை மருந்தாக்கு என்றும் மருந்து உணவாகாது என்றும். பச்சை உணவுகள் என்றும் அமிர்தம்  சுவாசக்காற்றுக்கு நுரையீரல் தரை வரை தொட சுதந்திரம் உண்டு என்று கூறுங்கள். வைரசின் அவதாரக் கோட்பாடு அனைவரையும் சென்றடைய வழி செய்யுங்கள். பாவம் பாமர மக்கள். படித்தவன் கற்றுக்கொடுத்தால் தான் பாமரனும் பண்டிதன் ஆகிறான் கற்றுக் கொடுங்கள்.  வதந்திகளை நம்பி நம்பியே வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள். என்று உணர்த்துங்கள். தொற்றுநோய்களும் > தொற்றாநோய்களும் தொட்டில் குழந்தை முதல் கொண்டு அனைவரையும்  சுடுகாடு வரை கொண்டு செல்லும். மாத்திரையை பழக்கமாக்கி விட்டால் மற்றவை எல்லாம் உள்ளே செல்ல மறுத்துவிடும் என்று உணர்த்துங்கள். அலட்சியம் என்றால் அதிக பிரசங்கிகள் என  அப்படியே விட்டுவிடுங்கள். by A. Yogeshwary 

09 | YS | வறுமை

ஊரடங்கு சட்டம் போட்டார்கள்  பல ஏழை ஜனங்களின் பசி அடங்க எந்த சட்டதிட்டமோ போடவில்லை.  உலையில் தண்ணீர் கொதிக்க வயிறு பற்றி எரியும். கட்டுப்படியாகாத விலை இருந்தும்  வயிற்றை கட்டுப்படுத்த வழியில்லை. விளைந்த நெல்லில் ஒரு நெல்லில் கூட ஏழையின் பெயர் எழுதப்படவில்லை.  யார் குற்றம் ? இருக்கின்றவன் சேகரித்தால் சேமிப்பு. இல்லாதவனுக்கு ஏற்படும் பாதிப்பு. எவன் பணக்காரன் ? எவன் ஏழை ? அவனும் பதுக்குகின்றான் இவனும் பதுக்குகின்றான்.  அவன் சேமிக்க என்கிறான் இவன் பசிக்கு  என்கிறான். நிவாரணம் என்பது வறுமை குடும்பத்திற்கு அல்ல. அது கூட்டுக் குடும்பத்திற்கு உரியதானது. மனித வர்க்கத்தை போலவே  அடிக்கின்ற காற்று > மழைக்கு கூட ஏழையின்  வயிற்றில் அடித்து தான் பழக்கம் போல. நிவாரண பணி எல்லாம்  எவன் எவன் வீட்டு நிர்மாணபணிக்கோ போய்விட்டது. ஏழை வைத்த வாழை இருபுறமும் குலை தள்ளும் அதில்; ஒரு பழம் கூட அவனுக்கு சொந்தமில்லை. பல பேரின் ஏழ்மை வாழ்க்கையில் கண்ணத்தில் வறுமை வரைந்த கோலமாய் கண்ணீர் உண்டு. பதுக்கப்படுகின்ற எதுவும் சமமாக கொடுக்கப்படுமானால்  ஏழையின் வறுமை பகைவான் ஒழிவான். by A. lakshika  

03 | CS | வேதனையின் முற்று

இதோ, என் நிழலோடு யான் பேசும் தருணம் இது! யாசகன் நான்,யாசிக்க யாருமிலை பசியை படைத்தவன் எவனோ?... நேற்று எரிந்த அடுப்பு சோற்று பானையுள்,ஒரு பருக்கை இன்று.. ஐவர் குடும்பம் யாம் " யார் உண்பதந்த ஒரு பருக்கை?" எம் வயிற்றுக் கேள்விக்கு நான் தந்தேன் பதிலை வெளி செல்ல இயலாத அடக்கம் குடில் அருகில் விளைந்த, காயிரண்டு என் உழைப்பு,அன்றுணவு இது தொடர,பசியவள் இல்லை வீட்டு விளைச்சல்!... நாட்டின் தழைச்சல்!... by  K. Dhanushika