கதவுகள் இல்லை
நான்கு பக்கங்களிலும் சுவர்கள் தான் (பெண்களுக்கு) - அவை
ஆண்களால் நிர்மாணிக்கப்பட்டதாலா ?
வாசலில் அவர்கள் இடும்
கோலத்திற்கான புள்ளி -அதுவரை தான்
அவர்கள் படித்தாண்டி செல்ல வேண்டும்
என்பதற்காக இடப்பட்ட முற்றுப்புள்ளியாம்.
கண்ணீரால் சிறகு நனைந்த
அந்தப் பறவைகள் வெயில் காய
வீதிக்கு வந்தார்கள்.
அது சுவர்கள் இல்லாத திறந்த சிறை.
உடல் அரிப்பில் கல்லில் உரசும் ஆடுகளை போல
சில ஆண் ஆடுகள்
சதைக்கு ஆசைப்படுபவனுக்கு
சீதையானாலும் விபச்சாரிதானே.
இன்னுமொன்று
இப்போதெல்லாம் பெண்கள்
வரதட்சணை கொடுப்பதில்லை.
வாக்கப்பட்டு போகிறவர்கள்
ஆண்கள் தானே அதனால் தான்
பெண்களுக்கு மாத பத்திரிகை சம்பளச்சீட்டு ஆனது.
காலை சூரிய உதயமும் மாலை அஸ்தமனமும்
அறியாத அளவிற்கு
அதிகாரி எனும் ஆண்மாமியார்களின்
கொடுமைகள் அதிகரிக்கின்றன.
சிரிப்பு என்பது உதட்டில் அல்ல
உள்ளத்தில் ஒரு ஞாபகமாய் உள்ளது.
by A. Prathap


Comments
Post a Comment