Skip to main content

Posts

Showing posts with the label Nuwara Eliya District

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

64 | CS | விழித்துக் கொண்ட அனுபவம்

 துளிகூட வறுமையை  காணாத தேசம்  கண்ணீர் துளியுடன்  வாழ்வை கடந்த சோகம்  கரையில்லா    மனங்களிலும்   வறுமையின் கலங்கம் பிஞ்சுப் பிள்ளைகளின்  விழிகளிலும்   பசியின் ஏக்கம்  அண்ணியனின் படையெடுப்பில்  அழியாத தேகம்  கொரோனா என்ற கோரனின்  காலடியில் எங்கள் உயிர் தாகம்  ஒளியிலும் இருளை கடந்த   எமக்கு விடியல் கல்வியெனும் இலக்கணம்.  By. Y.Sanjaya

63 | YJ | மறுபக்கத்தில் இணையம்

அறியாத முகங்களை   எதிர்கால சாதனைக்காக இணைத்த சரித்திரம்  ஊர்க்குருவிகளாய் சுற்றாது கரங்களில் கண்டெடுத்த  அற்புதம்  முடக்கத்தில் முடங்கி  கிடந்தவனையும் மீட்டெடுத்த  நயம்  தெரியவில்லை  புரியவில்லை  மாயமா அல்லது  கொரோனாவின் சூழ்ச்சியா வறுமையின் வரலாறுகளும்  கைக்குள் அடக்கியது  காட்சிகளை  எத்தனை சவால் எவ்வளவு கண்ணீர்  இயங்கும் மீண்டு எழும்  இணையமென்ற வட்டத்தில்  எம் வாழ்வு by J. Dhinusha

61 | YS | நேசி உன் சூழலை

ஓயாத ஓசையெழுப்பும் நதிகளின் கீதத்திற்கு  அழகாய் அசைந்தாடும் மரங்களும் தேனீ தன் கை கோர்த்து விளையாடிய களைப்பில்  உறங்கும் மலர்களை கண் கூச செய்து எழுப்பிடும்  கதிரவனும் - அற்புதம் நிறைந்த இப்பூமியின் மாயாஜாலக்காரர்கள் அறுசுவை உணவுக்காய் அரைகுறை வாழ்க்கை வாழும் மனிதன் - நாசம் செய்திட ஏதுமில்லை பருவம் மறந்து பெய்யும் மழை - அணலாய் எரிக்கும்  வெயில் - மாறிப்போன பருவம் பழையன மீட்க செய்திடுவோமே மீள் சுழற்சி வரையறையின்றிய பாவனையின் பயனாய்  பல தலைமுறையின் தாகம் தீர்த்திட இனி இல்லை  தண்ணீர் மரங்களற்ற பூமிதனை காண இச்சையில்லா  மேகம் பொழிந்ததுவே - பொருந்தாத மாதத்தில் போதும் விண்ணிற்கு ஏணியான கட்டிடஙகளும்  கண்மூடி ஆடிய ஆட்டத்தின் முடிவு விண்மூடி போனதே கடைக்கண் பார்வை வேண்டாம் - நெற்றிக்கண் கொண்டு செய்திடுவோமே  பச்சிளம் குழந்தையின் உள்ளம் போலே தூய்மை நிறைந்த உலகினை By R. Rushanthi

59 | CS | ஏழை

ஆடம்பரமாக வாழ ஆசையில்லை     இறுதி வரை இறைவனை தவிர  வேறு எவரிடமும் கையேந்தாமல்    வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான்      குடிசைக்கும்  அஸ்திவாரம் நிலம் தான்  எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன்     என்ற பாகுபாடு இல்லை ...!  கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி      தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...!  ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய்         நீ சொர்க்க வாசல் திறப்பாய்  உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை     வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று       எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு  மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு       பஞ்சம் இல்லா இடமாகும் ...!        

26 | YJ | தழைக்க ஏங்கும் செந்நெல்

உணவின் அருமை அறியாது உன்னதமான என்னை அன்று உதாசீனமாய் வீசி எறிந்தாயே சேற்றோடு போராடுபவனின் உழைக்கும் கரங்களால் பிரசவிக்கப்பட்ட செந்நெல் நான்- இன்று என் ஏளனப்பார்வைக்கு முன் நீ விழிகளும் உற்று நோக்கிட போராடும் சிறுமையை விஞ்சிய சிறுமை கொரோனா என்னும் பெயரால் காணாமல் போனது உன் தலைக்கனப் பெருமை அன்று நீ என்னை வீசினாய் இன்று எனக்காக ஏங்குகின்றாய் இத்தனை யுகங்களாக என்னை இரைத்து எறிந்தது போதும் நாளைய உலகை நீ காண இக்கனமே என்னை பூமித்தாயோடு இணையச்செய்வாய் நாளை உன் பசிப்பிணிக்கு நானே மருந்தாக உதிப்பேன். by S. Shakthi

19 | YS | கல்வி

அள்ள அள்ளக் குறையாத போக்கிஷக் கல்வியோ கொரோனா அரக்கனின் கோர தாண்டவத்தால் உருமாறி விட்டது அலைபேசிக் கல்வியாக காசு உள்ளவனும் தொலைபேசி உள்ளவனும் மட்டுமே படிக்க ஏழை மாணவனின்  கதி என்ன?  அந்தோ பரிதாபம் தோட்டத் தொழிலாளியின் மகன் படிக்க அலைபேசியின்றி தவித்து கைவிடுகின்றான் கல்வியை  இன மத மொழி பாராது  வரட்சியின்றி வழிந்தோடும் கங்கையான கல்வி ஏழை - பணக்கார பேதம் பார்ப்பது தகுமா ? சமத்துவ கல்வியை நாடி  சரித்திரம் படைக்க முன்வருவோம். P. Vinushayini  

18 | YS | முருக்கு மீசைகவி

வையகம் போற்றும் கவிஞருக்கே என் நெஞ்சகம் போற்றி கவி வடித்தேன். வையகம்  போற்றும்   கவிஞருக்கே என் நெஞ்சகம் போற்றி கவி வடித்தேன். காலங்களுக்கு ஏற்ப கவி வடித்தோர்பல வடித்தகவி காலங் காலமாய் நிலைப்பதோ சில பல அடிகளில் கவி வடித்தாலும் பாரத கவி பாரதியின் கவிக்கு ஈடாகுமோ அவர்கவியின் சித்தமோ என்னவோ நடப்பதெல்லாம் கவியடி தொட்டுநடக்கிறது. கொடுமைகள் கண்டறிந்த நாதருக்கு நடந்தது கொடுமையோ இல்லை காலங்கள் செய்தகோலமோ என்நாயகன் காலமானநேரத்தில் இருபது பேர் இருந்தது. என் நாயகன் காலமானநேரத்தில் இருபது பேர் இருந்தது. அய்யன் பாடையில் சென்றபின்பு தான் பதான் பாடினர் பார்வை பாரதியை காண்கிறது. நினைவில் நீங்காத கனவில் களையாத முருக்கு மீசை கவிஞரின் வரிகள் முடங்கி கிடக்கும் மானிடரை மீட்டிடாதோ. நினைவில் நீங்காத கனவில் களையாத முருக்கு மீசை கவிஞரின் வரிகள் முடங்கி கிடக்கும் மானிடரை மீட்டிடாதோ. by T.Yuvanshankar

16 | YS | மாற்றத்தை நோக்கி....

அரும் பெரும் வரலாறு கொண்டு ஆசியாவின் அமிர்தமாய் மின்னிக்கொண்டிருந்த தீவொன்று இயற்கை அன்னையின் இருப்பிடமாக ஈழம் எனும் பெயர் கொண்டு தன்னிறைவாய் தாளமிட்ட தீவொன்று மேற்குலக நாடுகள் மெய்சிலிர்த்துப் போகும் மேன்மை வளம் பூத்துக் குலுங்கிய தீவொன்று இப்பார் எனும் பெரும் புள்ளியை கொரானா எனும் சிறு புள்ளி அடக்கியாளும் காலம் தனில் வல்லரசு நாடுகள் வலுவிழந்து நிற்க உலகப் பொருளாதாரம் படுப்பாதாளம் நோக்கி செல்ல எம் ஈழமும் வறுமையின் வாசம் நுகர்ந்து கொண்டிருக்கிறது காலனின் பாசக்கயிறு கணத்து கொண்டு இருக்கிறது எம் தாய் ஈழத்தை கரம் தூக்கி நிமிர்ந்தெழ செய்ய சேயாய் நாம் கரம் நீட்ட வேண்டிய காலமிது விவசாயம் எனும் முதுகெலும்புக்கு போசாக்கு எனும் எழுச்சியூட்டுவோம் சமநிறைவு சமுதாயத்தை சாஸ்திரமாக்குவோம் வருங்கால தலைமுறையை வசந்தமாக்குவோம் தரமான வைத்தியத்தை நாடு முழுவதும் விஸ்தரிப்போம் கல்வி எனும் பேராயுதத்தை இளைய தலைமுறைக்கு இனபேதமின்றி ஒளிரச்செய்வோம் நியாயம் எனும் சொல்லுக்கு வலுவூட்டுவோம் எம் ஈழத்தாய் எழுந்து புன்னகையை உதிரவிட புதல்வர்களாய் எம் கடமையை கண்ணியத்துடன் செய்ய களம் காண்போம். by D. Devapragathi