அள்ள அள்ளக் குறையாத
போக்கிஷக் கல்வியோ
கொரோனா அரக்கனின்
கோர தாண்டவத்தால்
உருமாறி விட்டது
அலைபேசிக் கல்வியாக
காசு உள்ளவனும்
தொலைபேசி உள்ளவனும்
மட்டுமே படிக்க
ஏழை மாணவனின்
கதி என்ன?
அந்தோ பரிதாபம்
தோட்டத் தொழிலாளியின் மகன்
படிக்க அலைபேசியின்றி தவித்து
கைவிடுகின்றான் கல்வியை
இன மத மொழி பாராது
வரட்சியின்றி வழிந்தோடும்
கங்கையான கல்வி
ஏழை - பணக்கார
பேதம் பார்ப்பது தகுமா ?
சமத்துவ கல்வியை நாடி
சரித்திரம் படைக்க முன்வருவோம்.
P. Vinushayini
Comments
Post a Comment