Skip to main content

Posts

Showing posts with the label Goal 4

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

55 | YJ | கல்வியின் அவசியம்

வாழ்வில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு நுண்ணாய்வு கல்வி ! கல்வி என்பது மூன்றெழுத்தில் தொடரும் - சொல் அல்ல  வாழ்வின் முடிவு வரை வாழும் செல்வம் கல்வி ! எமது எதிர்காலம் சிறந்த வழிகாட்டலில் அமைய - நாம் பயணிக்கும் முதல் பள்ளி - கல்வியே ! பள்ளி பருவம் அழிவில்லா இன்பம் பிரியும்  வழி பள்ளி மட்டுமே கல்வி - அல்ல  பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனி - ஆற்றல் உண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் கடல் கடந்த உத்தியோகம் செய்தாலும் கல்வி அறிவு இன்றி எதுவும் இல்லை.  கடலின் ஆழம் எதுவரை இருக்கின்றதோ அவ்  ஆழத்தை விட கடல் கடந்த நூல் கல்வி தான் ! கண்களில் வண்ண மீன்கள் வரி வரி கோலம் - இட சின்னஞ் சிறு மழலையின் - இன்ப வாழ்வு இன்று புரியா புதிர் அன்று புகழைத் தரும் கல்வியே என்றும் பெரும் செல்வம் கண்ணின் நிலையான விம்பம் ! ஒவ்வொரு மனிதநேய ஆற்றலிலும் - ஒரு திறனாய்வு  கல்வி - கல்வியே சிறந்த வழிகாட்டல் !  நல்ல புத்தகத்தை திரட்டி பார்க்கும் - திறனாய்வு கடல் போன்று அறிவை வளரச் செய்யும் புத்தகம்  தோல்வி வெற்றி இவற்றை கடந்து - எதிர்கால  சந்ததி வர்ண பூக்களாய் - மலர ! கல்...

38 | SS | எதிர்பார்ப்பு

  எதிர் பார்ப்பு அறிவு கொண்டு தான் அகிலம் ஆள முடியுமென்று அகரம் படிக்க நாங்கள் ஆசையாய் பள்ளி சென்றோம் அடுக்கு மாடி கட்டிடமும் ஆடம்பர வருப்பறையும் - இல்லை அன்பு ஒன்றே அறனென்று ஓதும் ஆசிரியர் மட்டுமே எமக்குண்டு போட்டிப் போட்டு படித்து ஒரு நாள் பேட்டி கொடுப்போம் பத்திரிக்கைக்கு பட்டம் பல பெற்று மாற்றி படைப்போம் புது மலையகத்தை இப்படி எத்தனை ஆசைகளை சுமந்து எதிர் கொண்டோம் இறண்டாயிரத்து இருபதை இருளாய் போகும் எதிர்காலம் என்று எள்ளளவும் எண்ணியதில்லை இன்று இருந்த இடத்திலேயே இணைய கல்வி நடக்கிறது இருக்கின்ற பிரச்சினைகளில் -நாங்கள் இணையம் தேடுவது எப்படி உலை கொதித்தும் அரிசியில்லை உயர் ரக கைப்பேசிக்கு எங்கே போக ஆன்லைன் கல்வி கற்க ஆசைதான்- எங்களுக்கும் ஆயிரம் ரூபா சம்பளத்தில் ஆடிப் போகும் விலைவாசியில் அரை வயிறு நிறைந்தால் போதும் ஆன்லைன் கல்வி அப்பறமே பள்ளி திறந்தால் படிப்போம் பட்டம் பலவும் பெறுவோம் தரமான கல்வி கிடைத்தால் தரணியை நாங்கள் ஆள்வோ ம் by Sridevi F12

33 | YJ | நிலைபேண்தகு அபிவிருத்தியில் கல்வியே துணைகோள்...

கல்வி > வறுமை > போசணை மட்டம் இம்மூன்றும் பிரியா தொடர்புடையன... எம்மோடு உடன்பிறந்த வறுமையினால்  எம்மில் உதித்தெழுந்த போசணைமட்ட பிரச்சினையில்  எம்மை மீட்டெடுக்கும் சக்தி கொண்டது கல்வி... இத்தொடர்பை அறியாதோர் அறியும் வரை காத்திருப்பதில்லை... இதனால் மேலோர் > கீழோர் என்ற பாகுபாடு... சம உரிமையின்மை > தொழிலின்மை... இறுதியில் அவமானங்கள்... வேதனைகள்...  இதில் எங்கே எவ்வாறு அபிவிருத்தி?  எமக்கு கீழே இருந்த நாடுகள் இன்று விண்னைத் தொட... நாம் மட்டும் அதே இடத்தில்... இனி கல்வியின் துணையோடு நிலைபேண்தகு அபிவிருத்தியே எம் நோக்கு... எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமாம்... எமது அறிவு வளர்ந்தால் எமது தரம் உயரும்...  மேல் > கீழ் வர்க்கம் என்ற அநாவசிய பிளவு ஒழியும்... ஆணோ > பெண்ணோ சமமான உரிமை கிட்டும்... புலமைபரிசில்கள் குவிய தொழில் வாய்ப்புகள் வந்து சேரும்... தொழிநுற்ப உலகில் எம்மை முன்னேற்றும் பிரம்மாஸ்திரமே கல்வி... கல்வி கற்று எமது நாடாகிய இலங்கையை  நிலைபேண்தகு அபிவிருத்தியை நோக்கி முன்னேற்றி வெற்றி காண்போம்... by  P. Chithusshaa F090

25 | YS | சீரழிக்கும் கொரோனாவும் … கல்வி நிலையும்…

வகுப்பறை மறந்ததே ! கனவுகள் சிதைந்ததே ! எங்கள் கல்வி நம்பிக்கை கத்தி முனையில் தொக்கி நிக்கின்றதே ! கற்கும் மணம் தளர்வடைந்தது.  விடா முயற்சி உன் வருகையினால் சிறகடித்து ஓரிடம் ஒடிங்கிவிட்டது கோரோனாவே ! கற்பவரின் வாழ்வுக்கு கேள்விக்குறி சமமாக  பரவலடைந்த பாடசாலை கல்விக்கு முற்றுப்புள்ளி   பாலகரோ அரிச்சுவடி மறந்தனர் ! சுதந்திரக் கல்வி மணித்தியாலங்களாக சிறைப்பட்டு நிகல்நிலை கல்வி வாழ்வு கோலமாக வடித்தெடுக்கப்படுகின்றது. “கொடிய கால மாற்றம்  கல்விக்கு பாரிய ஏமாற்றம் “! தற்போதைய கல்வி மாணவரிடையே தொட்டிலில் உறங்கி சொப்பணம் காண்கின்றது .  நாம் ஒடுக்கப்பட்டுள்ளோம் ! அடியோடு மாற்றம் ! பண்புதரமான பயிற்சியில்  தொழிநுட்ப வசதியில் ஆளுமைகள் மேம்பட கல்வி இன்று எம் மத்தியில் அரசாங்கத்தின் முழு வகிபாகத்திற்குள் இலவச கல்வியை தொழிநுட்ப மாற்றதிற்குள் உற்புகுத்தியது சூழ்நிலை மாற்றக்களாக  வசதி வாய்ப்புக்கள் சம பங்கெடுப்பாக  மாணவர்களுக்கு கிடைத்த்தாள் நிகழ் நிலை கல்வியும் வெற்றிகரம்  குவிக்கும் ! எழுத்தறிவு வீத மகத்துவம் பாதிக்கப்பட்டது இளைஞர் > யுவதிகள் பாடசாலை ...

24 | YJ | கொரோனாவால் சீர் குழைந்த கல்வி

நாளைய   சிட்டுக்களாய் பறக்க இருத்த  எம்மை சிறகுடைந்த  பறவைகளாய்  மாற்றி விட்டாய்  நீ உயர்  தரம்  படி  ஏரி  எம்  முதட்  கனவை தொட்டேனே ஆசையாய்  பூத்த எம்மை  வாடி  விட செய்தாயே வளர்த்து  வந்த இலட்சியத்தை அனு  அனுவாய் அளித்தாயே  ஆசானின்  முகம் மறந்து  அறிவின்  நிலை மறந்திருக்கும் நம்மவருக்கு   விடியலை  நீ கொடுக்க  மாட்டாயா நம் நாடு  செழிப்புரவே நாமும் பயின்றிடுவோம் கை  கூப்பி  கேட்க்கிறேன் எம்மவரை  விட்டு விடு By S. Pasmina

20 | YS | கல்வியும், அபிவிருத்தி கரமும்.

கொரோனாவுடன் தொலைந்த கல்வியை - இன்று இணைய வழி புகுந்து தொடர்கிறேன்... அழியாத செல்வம் அதை - இன்று அனுதினமும் பயில்கின்றேன்... ஊதியமில்லா உரம் அதனை சாத்தியமாக தொடர்கின்றேன்... மதி கொண்டு வளரும் திறன் அதை நானும் கலை கொண்டு வளர்கின்றேன்... இருள் சூழ்ந்து நிற்கும் நிலையது மாறி வெளிச்சம் படர தொடர்கின்றேன்... விதியதை மாற்றிட விதையாக அபிவிருத்தி இருக்க விளைநிலம் கல்வியை விதவிதமாய் தொடர்கின்றேன்.. இடைப்பட்ட காலத்திலும் இலவசமாக தரம் பெறுகின்றேன்... அபிவிருத்தி தாய் தந்த கருணையால் தரமான கல்வி அதை தொடர்கின்றேன்... by R. Sushanthani

19 | YS | கல்வி

அள்ள அள்ளக் குறையாத போக்கிஷக் கல்வியோ கொரோனா அரக்கனின் கோர தாண்டவத்தால் உருமாறி விட்டது அலைபேசிக் கல்வியாக காசு உள்ளவனும் தொலைபேசி உள்ளவனும் மட்டுமே படிக்க ஏழை மாணவனின்  கதி என்ன?  அந்தோ பரிதாபம் தோட்டத் தொழிலாளியின் மகன் படிக்க அலைபேசியின்றி தவித்து கைவிடுகின்றான் கல்வியை  இன மத மொழி பாராது  வரட்சியின்றி வழிந்தோடும் கங்கையான கல்வி ஏழை - பணக்கார பேதம் பார்ப்பது தகுமா ? சமத்துவ கல்வியை நாடி  சரித்திரம் படைக்க முன்வருவோம். P. Vinushayini  

13 | YS | நிலைமாறும் உலகம்

நிலை மாறும் உலகம் நாவின் தேனூற்று நற்றமிழில் வைரம் பொதித்த வரிகளில் வாசகம் கேளீர் ! கல்வி கரையில என  வேள்விகள் பல புனைந்தோம் - இனி புதிய நாட்களை வடிவாய் வனைந்து  நோய்தனில் வீழ்ந்திடாமல்  வீறுகொண்டெழுவோம். வீதியை எண்ணி வீட்டினுள்ளே  புதைந்திடாமல் புரண்டெழுவோம்  இணையவழி தடையதனை  இணைந்து நாம் நீக்கிடுவோம் சமகல்வி  வாய்ப்பதனை சகலருக்கும் கொடுத்திடவே  இணையம் மூலம் இலவசமாய் இயன்றோர் பாடம் புகட்டுவோம். அரசு கூறும் அறிவுரையும் அகமுவந்து ஏற்றிடுவோம் பரீட்சை பாடம் இரண்டையுமே பதமாய் கற்க செய்திடுவோம் வசதியற்ற வறியவர் புன்மைநிலையுற்றிடாமல் வசதியுள்ளோர் வழிய சென்று உதவிகரம் நீட்டிடுவோம். புலனம் > செயலி > நிகழ்நிலையில் புதுமை படைக்க முடியுமென புரிய வைக்க களமமைத்து கரைகாண செய்திடுவோம். வாட வைக்கும் கொவிட்டுக்கும் (19) பாடம் புகட்டி அழித்திடுவோம் நிலையை எண்ணி உரைந்திடாமல்  நிமிர்ந்து வெல்ல முயன்றிடுவோம்  நிலைமாறும் உலகம் இது  நிரந்தரமாய் ஆகிடாது. by R.SINDHUJA