கல்வி > வறுமை > போசணை மட்டம் இம்மூன்றும் பிரியா தொடர்புடையன...
எம்மோடு உடன்பிறந்த வறுமையினால்
எம்மில் உதித்தெழுந்த போசணைமட்ட பிரச்சினையில்
எம்மை மீட்டெடுக்கும் சக்தி கொண்டது கல்வி...
இத்தொடர்பை அறியாதோர் அறியும் வரை காத்திருப்பதில்லை...
இதனால் மேலோர் > கீழோர் என்ற பாகுபாடு...
சம உரிமையின்மை > தொழிலின்மை...
இறுதியில் அவமானங்கள்... வேதனைகள்...
இதில் எங்கே எவ்வாறு அபிவிருத்தி?
எமக்கு கீழே இருந்த நாடுகள் இன்று விண்னைத் தொட...
நாம் மட்டும் அதே இடத்தில்...
இனி கல்வியின் துணையோடு நிலைபேண்தகு அபிவிருத்தியே எம் நோக்கு...
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமாம்...
எமது அறிவு வளர்ந்தால் எமது தரம் உயரும்...
மேல் > கீழ் வர்க்கம் என்ற அநாவசிய பிளவு ஒழியும்...
ஆணோ > பெண்ணோ சமமான உரிமை கிட்டும்...
புலமைபரிசில்கள் குவிய தொழில் வாய்ப்புகள் வந்து சேரும்...
தொழிநுற்ப உலகில் எம்மை முன்னேற்றும் பிரம்மாஸ்திரமே கல்வி...
கல்வி கற்று எமது நாடாகிய இலங்கையை
நிலைபேண்தகு அபிவிருத்தியை நோக்கி முன்னேற்றி வெற்றி காண்போம்...
by P. Chithusshaa
Comments
Post a Comment