Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

55 | YJ | கல்வியின் அவசியம்

வாழ்வில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்

ஒரு நுண்ணாய்வு கல்வி !


கல்வி என்பது மூன்றெழுத்தில் தொடரும் - சொல் அல்ல 

வாழ்வின் முடிவு வரை வாழும் செல்வம் கல்வி !


எமது எதிர்காலம் சிறந்த வழிகாட்டலில் அமைய - நாம்

பயணிக்கும் முதல் பள்ளி - கல்வியே !


பள்ளி பருவம் அழிவில்லா இன்பம் பிரியும் 

வழி பள்ளி மட்டுமே கல்வி - அல்ல 


பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனி - ஆற்றல்

உண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்


கடல் கடந்த உத்தியோகம் செய்தாலும் கல்வி

அறிவு இன்றி எதுவும் இல்லை. 


கடலின் ஆழம் எதுவரை இருக்கின்றதோ அவ் 

ஆழத்தை விட கடல் கடந்த நூல் கல்வி தான் !


கண்களில் வண்ண மீன்கள் வரி வரி கோலம் - இட

சின்னஞ் சிறு மழலையின் - இன்ப வாழ்வு

இன்று புரியா புதிர் அன்று புகழைத் தரும்


கல்வியே என்றும் பெரும் செல்வம்

கண்ணின் நிலையான விம்பம் !


ஒவ்வொரு மனிதநேய ஆற்றலிலும் - ஒரு திறனாய்வு 

கல்வி - கல்வியே சிறந்த வழிகாட்டல் ! 


நல்ல புத்தகத்தை திரட்டி பார்க்கும் - திறனாய்வு

கடல் போன்று அறிவை வளரச் செய்யும் புத்தகம் 

தோல்வி வெற்றி இவற்றை கடந்து - எதிர்கால 

சந்ததி வர்ண பூக்களாய் - மலர !


கல்வி என்ற சிறந்த வழியில் மிதக்கும் கப்பலை 

போல் இன்றி - தாங்கும் கருவியாய் கல்வி வளரட்டும் !


ஆற்றில் சலசலவென ஓடும் நீர் இல்லையெனில்

எவ்வாறு வரட்சி நிலவுமோ - அதுபோல கல்வி

அறிவு இன்றி இவ் புவனம் ஈடேறாது !


பள்ளி படிப்போடு இருக்கும் ஒவ்வொரு தருணமும் 

இன்பமான - பொழுதுபோக்கு 


ஒரு செடியில் பூக்கும் மலரை - விட 

ஒரு நொடியில் பூக்கும் சிரிப்பு மிக உன்னதமானது 

இவற்றை கடந்து கல்வியின் அவசியம் பற்றி அறிவூட்டும் 


இந்த புவனத்தில் உதித்த ஒவ்வொரு - பூவையும் 

பல கோடி பூக்களாய் மலரச் செய்வோம் !


ஜாதி , மதம் , அன்பு இவற்றை கடந்து 

கல்வியை நேசிப்போம் 


சிறந்த பிரஜையாய் இவ்வுலகம் போற்ற 

வாழ்வோம் - கல்வியே கண்ணின்மணி !

by R. Amsawahini






Comments

Popular posts from this blog

02 | SS | பேரலைத்தொற்றும் பெரு வளர்ச்சியும்

தீ நுண்மியே பரிவட்ட நச்சு உயிரியே! தீயினால் சுட்ட புண்ணும் ஓர் நாள் ஆறிவிடுமே! தீர்க்கமுடியாதே என்னை என்று திமிராய் நீ ஆணவம் கொள்ளாதே! திட்டம் தீட்டி நாளை அழித்து விடுவோமே! திடம் கொண்டு இனி உன்னோடு பயணிப்போமே! நேர்மையாய் முகக்கவசத்தோடும் திரவகைசுத்திகரிப்போடும் நேர் உற்பத்தியை நேரில் உற்பத்தியாக்க ஊக்கமளிப்போமே! நேரில் உற்பத்தியால் தேசிய உற்பத்தியை அதிகரிப்போமே! நேசத்தோடு புதிய தொழில் வாய்ப்புகளை வழங்கிவிடுவோமே! நேரான வழியில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிவிடுவோமே! நேரத்தை வீணடிக்காது நிகழ்நிலை பயன்பாட்டுடன் வெற்றி பெறுவோமே! வினைத்திறனான வளங்களைக் கொண்டு உட்கட்டமைப்பு வசதிகளை விளைத்திறனான வகையில் உருவாக்கி விருட்சம் போல் நிகழ்நிலை வர்த்தக கைத்தொழில் தாபனங்களை விண்ணுயரம் வரை செயற்படுத்தி விடுவோமே! விழிப்புணர்வோடு வீதிச்சாலைகளை அமைத்து விசித்திரமான உன்னை விரட்டிடுவோமே! சமத்துவமாய் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்புகளோடு சட்டங்களையும் கொள்கைகளையும் சமமாய் வலுப்படுத்தி சமூகச் சூழல் பிரச்சினைகளை தீர்த்து விட சரியான முறையில் உற்பத்தியையும் நுகர்வையும் சன்மானத்தோடு முகாமைத்துவம் செய்திடுவோமே! ச...

16 | YS | மாற்றத்தை நோக்கி....

அரும் பெரும் வரலாறு கொண்டு ஆசியாவின் அமிர்தமாய் மின்னிக்கொண்டிருந்த தீவொன்று இயற்கை அன்னையின் இருப்பிடமாக ஈழம் எனும் பெயர் கொண்டு தன்னிறைவாய் தாளமிட்ட தீவொன்று மேற்குலக நாடுகள் மெய்சிலிர்த்துப் போகும் மேன்மை வளம் பூத்துக் குலுங்கிய தீவொன்று இப்பார் எனும் பெரும் புள்ளியை கொரானா எனும் சிறு புள்ளி அடக்கியாளும் காலம் தனில் வல்லரசு நாடுகள் வலுவிழந்து நிற்க உலகப் பொருளாதாரம் படுப்பாதாளம் நோக்கி செல்ல எம் ஈழமும் வறுமையின் வாசம் நுகர்ந்து கொண்டிருக்கிறது காலனின் பாசக்கயிறு கணத்து கொண்டு இருக்கிறது எம் தாய் ஈழத்தை கரம் தூக்கி நிமிர்ந்தெழ செய்ய சேயாய் நாம் கரம் நீட்ட வேண்டிய காலமிது விவசாயம் எனும் முதுகெலும்புக்கு போசாக்கு எனும் எழுச்சியூட்டுவோம் சமநிறைவு சமுதாயத்தை சாஸ்திரமாக்குவோம் வருங்கால தலைமுறையை வசந்தமாக்குவோம் தரமான வைத்தியத்தை நாடு முழுவதும் விஸ்தரிப்போம் கல்வி எனும் பேராயுதத்தை இளைய தலைமுறைக்கு இனபேதமின்றி ஒளிரச்செய்வோம் நியாயம் எனும் சொல்லுக்கு வலுவூட்டுவோம் எம் ஈழத்தாய் எழுந்து புன்னகையை உதிரவிட புதல்வர்களாய் எம் கடமையை கண்ணியத்துடன் செய்ய களம் காண்போம். by D. Devapragathi

59 | CS | ஏழை

ஆடம்பரமாக வாழ ஆசையில்லை     இறுதி வரை இறைவனை தவிர  வேறு எவரிடமும் கையேந்தாமல்    வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான்      குடிசைக்கும்  அஸ்திவாரம் நிலம் தான்  எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன்     என்ற பாகுபாடு இல்லை ...!  கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி      தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...!  ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய்         நீ சொர்க்க வாசல் திறப்பாய்  உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை     வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று       எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு  மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு       பஞ்சம் இல்லா இடமாகும் ...!