நிலை மாறும் உலகம்
நாவின் தேனூற்று நற்றமிழில்
வைரம் பொதித்த வரிகளில்
வாசகம் கேளீர் !
கல்வி கரையில என
வேள்விகள் பல புனைந்தோம் - இனி
புதிய நாட்களை வடிவாய் வனைந்து
நோய்தனில் வீழ்ந்திடாமல்
வீறுகொண்டெழுவோம்.
வீதியை எண்ணி வீட்டினுள்ளே
புதைந்திடாமல் புரண்டெழுவோம்
இணையவழி தடையதனை
இணைந்து நாம் நீக்கிடுவோம்
சமகல்வி வாய்ப்பதனை
சகலருக்கும் கொடுத்திடவே
இணையம் மூலம் இலவசமாய்
இயன்றோர் பாடம் புகட்டுவோம்.
அரசு கூறும் அறிவுரையும்
அகமுவந்து ஏற்றிடுவோம்
பரீட்சை பாடம் இரண்டையுமே
பதமாய் கற்க செய்திடுவோம்
வசதியற்ற வறியவர்
புன்மைநிலையுற்றிடாமல்
வசதியுள்ளோர் வழிய சென்று
உதவிகரம் நீட்டிடுவோம்.
புலனம் > செயலி > நிகழ்நிலையில்
புதுமை படைக்க முடியுமென
புரிய வைக்க களமமைத்து
கரைகாண செய்திடுவோம்.
வாட வைக்கும் கொவிட்டுக்கும் (19)
பாடம் புகட்டி அழித்திடுவோம்
நிலையை எண்ணி உரைந்திடாமல்
நிமிர்ந்து வெல்ல முயன்றிடுவோம்
நிலைமாறும் உலகம் இது
நிரந்தரமாய் ஆகிடாது.
by
R.SINDHUJA
Super
ReplyDeleteநிலைமாறும் உலகம் இது
ReplyDeleteநிரந்தரமாய் ஆகிடாது நிதர்சனமான வரிகள்.
வாழ்த்துக்கள் தோழி.