வகுப்பறை மறந்ததே !
கனவுகள் சிதைந்ததே !
எங்கள் கல்வி நம்பிக்கை கத்தி முனையில் தொக்கி நிக்கின்றதே !
கற்கும் மணம் தளர்வடைந்தது.
விடா முயற்சி உன் வருகையினால்
சிறகடித்து ஓரிடம் ஒடிங்கிவிட்டது கோரோனாவே !
கற்பவரின் வாழ்வுக்கு கேள்விக்குறி சமமாக
பரவலடைந்த பாடசாலை கல்விக்கு முற்றுப்புள்ளி
பாலகரோ அரிச்சுவடி மறந்தனர் !
சுதந்திரக் கல்வி மணித்தியாலங்களாக சிறைப்பட்டு நிகல்நிலை கல்வி வாழ்வு கோலமாக வடித்தெடுக்கப்படுகின்றது.
“கொடிய கால மாற்றம் கல்விக்கு பாரிய ஏமாற்றம் “!
தற்போதைய கல்வி மாணவரிடையே
தொட்டிலில் உறங்கி சொப்பணம் காண்கின்றது .
நாம் ஒடுக்கப்பட்டுள்ளோம் !
அடியோடு மாற்றம் !
பண்புதரமான பயிற்சியில்
தொழிநுட்ப வசதியில் ஆளுமைகள்
மேம்பட கல்வி இன்று எம் மத்தியில் அரசாங்கத்தின்
முழு வகிபாகத்திற்குள் இலவச கல்வியை தொழிநுட்ப மாற்றதிற்குள் உற்புகுத்தியது சூழ்நிலை மாற்றக்களாக
வசதி வாய்ப்புக்கள் சம பங்கெடுப்பாக மாணவர்களுக்கு கிடைத்த்தாள்
நிகழ் நிலை கல்வியும் வெற்றிகரம் குவிக்கும் !
எழுத்தறிவு வீத மகத்துவம் பாதிக்கப்பட்டது இளைஞர் >
யுவதிகள் பாடசாலை கல்வியை வறுமை>
பல்தரப்பட்ட சவாலினால் இடை நிறுத்தியதன் விளைவுகள் தான் !
யாம் அறிந்த நிலையும் இவைதான் !
தொழிநுட்ப வளர்ச்சிக்கேட்ப ஈடுபாட்டுடன்
எந்நிலையிலும் விடியலை காணத்தகும் வழியில் நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சியடைய இளைஞர் சமுதாயம் தொழில் துறை சார் கல்வி முறைமைகளில் ஈடுப்பட அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகள் >
புலமை பரிசில் திட்டங்கள் தொழிநுட்ப பிரயோக விழிப்புணர்வு ஊடாக ஏட்டுக்கல்வியின் சிறப்பு திறம்பட நவீன தொழிநுட்பம் மூலம் உலகில் வித்திட்ட வாய்ப்பான கல்வி திட்டங்களில் ‘விரக்தி ‘ இல்லாமல் விருத்தியடைய முன்நகர்வோம் !
நிலை பேண்தகு அபிவிருத்தியை காலத்திற்கு ஏற்ப திட்டமிடவும் >
நடைமுறை படுத்தவும் சவால்கள் எதிர்கொள்வதோடு சாதகமான கல்வி துறையை பல்வேறு முறைகளில் கட்டியெழுப்ப முயன்றிடுவோம் !
எம் கனவுகள் சவ பெட்டிகளில் உறங்காமல் நிஜங்களாக மாற்றமுற எதிர்கால தலைவர்களாக முன்நகருவோம் !
by K. Madushan
Comments
Post a Comment