ஓயாத ஓசையெழுப்பும் நதிகளின் கீதத்திற்கு
அழகாய் அசைந்தாடும் மரங்களும்
தேனீ தன் கை கோர்த்து விளையாடிய களைப்பில்
உறங்கும் மலர்களை கண் கூச செய்து எழுப்பிடும்
கதிரவனும் - அற்புதம் நிறைந்த இப்பூமியின் மாயாஜாலக்காரர்கள்
அறுசுவை உணவுக்காய் அரைகுறை வாழ்க்கை வாழும்
மனிதன் - நாசம் செய்திட ஏதுமில்லை
பருவம் மறந்து பெய்யும் மழை - அணலாய் எரிக்கும்
வெயில் - மாறிப்போன பருவம்
பழையன மீட்க செய்திடுவோமே மீள் சுழற்சி
வரையறையின்றிய பாவனையின் பயனாய்
பல தலைமுறையின் தாகம் தீர்த்திட இனி இல்லை
தண்ணீர் மரங்களற்ற பூமிதனை காண இச்சையில்லா
மேகம் பொழிந்ததுவே - பொருந்தாத மாதத்தில்
போதும் விண்ணிற்கு ஏணியான கட்டிடஙகளும்
கண்மூடி ஆடிய ஆட்டத்தின் முடிவு விண்மூடி போனதே
கடைக்கண் பார்வை வேண்டாம் - நெற்றிக்கண்
கொண்டு செய்திடுவோமே
பச்சிளம் குழந்தையின் உள்ளம் போலே
தூய்மை நிறைந்த உலகினை
By R. Rushanthi
Comments
Post a Comment