அறியாத முகங்களை
எதிர்கால சாதனைக்காக
இணைத்த
சரித்திரம்
ஊர்க்குருவிகளாய் சுற்றாது
கரங்களில் கண்டெடுத்த
அற்புதம்
முடக்கத்தில் முடங்கி
கிடந்தவனையும் மீட்டெடுத்த
நயம்
தெரியவில்லை
புரியவில்லை
மாயமா அல்லது
கொரோனாவின் சூழ்ச்சியா
வறுமையின் வரலாறுகளும்
கைக்குள் அடக்கியது
காட்சிகளை
எத்தனை சவால் எவ்வளவு கண்ணீர்
இயங்கும் மீண்டு எழும்
இணையமென்ற
வட்டத்தில்
எம் வாழ்வு
by J. Dhinusha

Comments
Post a Comment