என்னோடு வாழப்பழகும் உமது நாட்டின் அபிவிருத்திக்கு சில வழிகள். போதுமான போசாக்கில் பொல்லாப்பாம் வறுமையை வரம் அளித்தேனாம். அயலான நிலத்திலே ஐந்தாறு பயிரிட்டால் வளம்பெற வழியில்லையோ? வீதி தோறும் விதிகளால் நிரம்பியும், விபத்துகளால் விழுந்து போனீர்கள். என் ஒற்றை ஊரடங்கு விதியால் உதிரத்தை வீதி தானம் பெறலில்லையே... வீட்டில் தூங்கி கிடப்பதால் வீணாய் சண்டை போடும் வீணர்களாக்கினேனாம். நகரை விட்டு நகர்ந்து கிராமத்திலும் உங்கள் காவல்துறை கண்காணிப்பில்லையோ? கல்வியில் தடைசெய்து தொழில் வாய்ப்புகள் பறித்தேனென்றீர்கள். ஏழை மாணவர்களுக்கு எட்டா உம் இணைய கல்வி தீர்வாகிடுமோ? பரீட்சைகள் தள்ளி போயினவாம் பல நாள் படிப்பை பாழாக்கி விட்டேனாம். புத்தக பூச்சிகளாக கிடக்கும் பலரில் புது கண்டுபிடிப்புகள் அறியவில்லையோ? புது மரங்களால் நிரப்ப வேண்டிய சூழலை புகை கொண்டு மறைத்தீர். இயற்கை எனக்கும் அன்னை என அவள் புகார் போக்கினேனே... ஆறாய் > குளமாய் > அருவியாய் > கடலாய் நிரம்பிய நீரில் கொட்டி குவித்தீர் குப்பை கூளங்களை. இந் நடத்தை குறைய உம் நடமாட்டம் குறைத்தேன் என சிந்திக்கவில்லையா? இயற்கை அனர்த்தங்களில் அகப்பட்டோருக்கு...
Comments
Post a Comment