மருத்துவருக்கு ஒரு கோரிக்கைஐந்து முதல் ஐம்பது வரை ஆரோக்கியம் என்பது கேள்விக்குறிஇது அறியாமை என்பதா ?இல்லை அலட்சியம் என்பதா ?அறியாமை என்றால் கற்றுக் கொடுங்கள்.நோயாளி - மருத்துவர் > மாணவன் - ஆசிரியர்உணவை மருந்தாக்கு என்றும் மருந்து உணவாகாது என்றும்.பச்சை உணவுகள் என்றும் அமிர்தம்சுவாசக்காற்றுக்கு நுரையீரல்தரை வரை தொட சுதந்திரம் உண்டு என்று கூறுங்கள்.வைரசின் அவதாரக் கோட்பாடுஅனைவரையும் சென்றடைய வழி செய்யுங்கள்.பாவம் பாமர மக்கள்.படித்தவன் கற்றுக்கொடுத்தால் தான்பாமரனும் பண்டிதன் ஆகிறான்கற்றுக் கொடுங்கள்.வதந்திகளை நம்பி நம்பியே வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள்.என்று உணர்த்துங்கள்.தொற்றுநோய்களும் > தொற்றாநோய்களும்தொட்டில் குழந்தை முதல் கொண்டு அனைவரையும்சுடுகாடு வரை கொண்டு செல்லும்.மாத்திரையை பழக்கமாக்கி விட்டால் மற்றவை எல்லாம்உள்ளே செல்ல மறுத்துவிடும் என்று உணர்த்துங்கள்.அலட்சியம் என்றால் அதிக பிரசங்கிகள் எனஅப்படியே விட்டுவிடுங்கள்.
by
A. Yogeshwary


Comments
Post a Comment