விஞ்ஞான விதையில் விழுதான வைரஸே! கொஞ்சம் எம் விழி பார்த்திடு....
இருண்ட வரைகளுக்குள் மருண்ட மரைகளாய் சுருண்டு கிடக்கின்றோம் அருண்டு உன்னாலே! புத்தகம் ஏந்திட புத்தாடை அணிந்திட பிஞ்சுகள் முகங்களில் ஏக்கங்கள் பாராயோ? புத்தாக்கம் படைத்திட புதுமைகள் பார்த்திட பிள்ளைகள் கண்களின் கனாக்களை காணாயோ? முகாந்திரமிட்ட உன் முள்வேலி தாண்டி வறுமை இல்லா வாழ்வை தேட விடு மூளைச்சாவு காணும் முன்னம்- எம் மூச்சுக்காற்றை முகக்கவசம் தாண்ட விடு பண்டம்பாடி விற்று பிண்டம் வளர்த்திட்டோம் பணவீக்கம் குறைத்து பொருளாதாரம் வளர்த்திடுவோம் ஏழ்மை விலக்கி செழுமை அடைந்திட வாழ்வு காக்கும் விவசாயம் வளர்த்திடுவோம். வளமிழந்தோம் எம்மை நலமும் இழக்க விடாதே! வறுமைகோட்டினை அழித்திட வழி விடு உலகின் அமைப்பை உருக்குழைக்க உனக்கும் எனக்கும் உரிமை இல்லை! இத்தனை நாள் அத்தனையும் உனதாக்கிய இருமாப்பிலே இருப்பிடம் நீங்கி போ.... விடியலின் விளிம்பில் நிற்கின்றோம் விழித்தெழுவோம் எம் வாழ்வு தழைத்தெழவே! துயர்க்கும் ஏழ்மை துவண்டு மடிய நாம் துணிந்தெழும் புகழுரைத்திடுவோம்!by
S. Nandhini Devi
அருமையான கவி தேடல்
ReplyDeleteயதார்த்தம் பேசும் யாழிசை போல
வாழ்த்துக்கள் சகோதரி 🥰
அருமையான வரிகள் ...வாழ்த்துக்கள் ...
ReplyDeleteஅருமை அக்கா👌👌👌👌
ReplyDeleteஉலகின் தற்போதைய நிலையை அழகிய தமிழில் கூறிய உங்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்......👍👍👍👍Keep it Up
Nice
ReplyDeleteSupper nandhini
ReplyDeleteஅருமை சகோதரி
ReplyDeleteஅருமையான கவிதை...👌👌
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா.❣️❣️❣️
அருமையான சொல்லாடல் பா மிகவும் சிறப்பு வாழ்த்துகள்
ReplyDelete