Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

11 | SS | விடியலின் விளிம்பில்

விஞ்ஞான விதையில் விழுதான வைரஸே! கொஞ்சம் எம் விழி பார்த்திடு....

இருண்ட வரைகளுக்குள் மருண்ட மரைகளாய் சுருண்டு கிடக்கின்றோம் அருண்டு உன்னாலே! புத்தகம் ஏந்திட புத்தாடை அணிந்திட பிஞ்சுகள் முகங்களில் ஏக்கங்கள் பாராயோ? புத்தாக்கம் படைத்திட புதுமைகள் பார்த்திட பிள்ளைகள் கண்களின் கனாக்களை காணாயோ? முகாந்திரமிட்ட உன் முள்வேலி தாண்டி வறுமை இல்லா வாழ்வை தேட விடு மூளைச்சாவு காணும் முன்னம்- எம் மூச்சுக்காற்றை முகக்கவசம் தாண்ட விடு பண்டம்பாடி விற்று பிண்டம் வளர்த்திட்டோம் பணவீக்கம் குறைத்து பொருளாதாரம் வளர்த்திடுவோம் ஏழ்மை விலக்கி செழுமை அடைந்திட வாழ்வு காக்கும் விவசாயம் வளர்த்திடுவோம். வளமிழந்தோம் எம்மை நலமும் இழக்க விடாதே! வறுமைகோட்டினை அழித்திட வழி விடு உலகின் அமைப்பை உருக்குழைக்க உனக்கும் எனக்கும் உரிமை இல்லை! இத்தனை நாள் அத்தனையும் உனதாக்கிய இருமாப்பிலே இருப்பிடம் நீங்கி போ.... விடியலின் விளிம்பில் நிற்கின்றோம் விழித்தெழுவோம் எம் வாழ்வு தழைத்தெழவே! துயர்க்கும் ஏழ்மை துவண்டு மடிய நாம் துணிந்தெழும் புகழுரைத்திடுவோம்!

by S. Nandhini Devi


Comments

  1. அருமையான கவி தேடல்
    யதார்த்தம் பேசும் யாழிசை போல
    வாழ்த்துக்கள் சகோதரி 🥰

    ReplyDelete
  2. அருமையான வரிகள் ...வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  3. அருமை அக்கா👌👌👌👌
    உலகின் தற்போதைய நிலையை அழகிய தமிழில் கூறிய உங்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்......👍👍👍👍Keep it Up

    ReplyDelete
  4. அருமை சகோதரி

    ReplyDelete
  5. அருமையான கவிதை...👌👌
    வாழ்த்துக்கள் அக்கா.❣️❣️❣️

    ReplyDelete
  6. அருமையான சொல்லாடல் பா மிகவும் சிறப்பு வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

59 | CS | ஏழை

ஆடம்பரமாக வாழ ஆசையில்லை     இறுதி வரை இறைவனை தவிர  வேறு எவரிடமும் கையேந்தாமல்    வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான்      குடிசைக்கும்  அஸ்திவாரம் நிலம் தான்  எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன்     என்ற பாகுபாடு இல்லை ...!  கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி      தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...!  ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய்         நீ சொர்க்க வாசல் திறப்பாய்  உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை     வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று       எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு  மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு       பஞ்சம் இல்லா இடமாகும் ...!        

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana

25 | YS | சீரழிக்கும் கொரோனாவும் … கல்வி நிலையும்…

வகுப்பறை மறந்ததே ! கனவுகள் சிதைந்ததே ! எங்கள் கல்வி நம்பிக்கை கத்தி முனையில் தொக்கி நிக்கின்றதே ! கற்கும் மணம் தளர்வடைந்தது.  விடா முயற்சி உன் வருகையினால் சிறகடித்து ஓரிடம் ஒடிங்கிவிட்டது கோரோனாவே ! கற்பவரின் வாழ்வுக்கு கேள்விக்குறி சமமாக  பரவலடைந்த பாடசாலை கல்விக்கு முற்றுப்புள்ளி   பாலகரோ அரிச்சுவடி மறந்தனர் ! சுதந்திரக் கல்வி மணித்தியாலங்களாக சிறைப்பட்டு நிகல்நிலை கல்வி வாழ்வு கோலமாக வடித்தெடுக்கப்படுகின்றது. “கொடிய கால மாற்றம்  கல்விக்கு பாரிய ஏமாற்றம் “! தற்போதைய கல்வி மாணவரிடையே தொட்டிலில் உறங்கி சொப்பணம் காண்கின்றது .  நாம் ஒடுக்கப்பட்டுள்ளோம் ! அடியோடு மாற்றம் ! பண்புதரமான பயிற்சியில்  தொழிநுட்ப வசதியில் ஆளுமைகள் மேம்பட கல்வி இன்று எம் மத்தியில் அரசாங்கத்தின் முழு வகிபாகத்திற்குள் இலவச கல்வியை தொழிநுட்ப மாற்றதிற்குள் உற்புகுத்தியது சூழ்நிலை மாற்றக்களாக  வசதி வாய்ப்புக்கள் சம பங்கெடுப்பாக  மாணவர்களுக்கு கிடைத்த்தாள் நிகழ் நிலை கல்வியும் வெற்றிகரம்  குவிக்கும் ! எழுத்தறிவு வீத மகத்துவம் பாதிக்கப்பட்டது இளைஞர் > யுவதிகள் பாடசாலை ...