இதோ,
என் நிழலோடு யான்
பேசும் தருணம் இது!
யாசகன் நான்,யாசிக்க யாருமிலை
பசியை படைத்தவன் எவனோ?...
சோற்று பானையுள்,ஒரு பருக்கை இன்று..
ஐவர் குடும்பம் யாம்
" யார் உண்பதந்த ஒரு பருக்கை?"
எம் வயிற்றுக் கேள்விக்கு
நான் தந்தேன் பதிலை
வெளி செல்ல இயலாத அடக்கம்
குடில் அருகில் விளைந்த,
காயிரண்டு
என் உழைப்பு,அன்றுணவு
இது தொடர,பசியவள் இல்லை
வீட்டு விளைச்சல்!...
நாட்டின் தழைச்சல்!...
Comments
Post a Comment