வறுமையை ஒழிக்கவென வரம்பில்லா திட்டங்கள் பல ஒழிந்ததென்னவோ வறுமையில் வாடியவர் தான் வறுமை அல்ல .
உழைப்பவன் உயர்கிறான் என்றோர் பழமொழி கேட்டேன் அன்று - அல்லஉழைப்பினை சுரண்டுபவனே உயர்கிறான் இன்று .
ஒரு புறம் குப்பை கூடை நிறைய நிறைய உணவு
மறு புறம்
வயிறு நிறைய கூட ஒரு வேளை உணவில்லை இவற்றை அறியாமை என உதரித்தள்ளிட முடியாது
சற்றும் அறிய விரும்பாத மனித மணங்களே காரணம் .
உணவை வீணடிக்கும் ஒவ்வொரு கணமும் நினைவில் வரட்டும்
உண்ண உணவின்றி தவிக்கும் எம்மவர் குமுறல் .
புதியதொரு பூமி செய்வோம் அதிலாவது வறுமை எனும் சொல் அகராதியில் இருந்து அழியட்டும்
கொரொனா நிலையுடன் இந்த கொடிய வறுமையும் ஒழியட்டும் மருந்தால் அல்ல நீங்கள் மனம் திறந்தால்......
by R Logini
Nice ♥
ReplyDelete