திடமானக் கொள்கைகளை வகுத்துக் காட்டியே
தீராத தொல்லைகளை தொலைத்துக் கட்டிடு
சுயத்தொழில் பொருளாதாரம்
வறுமை ஒழிப்புக்கு இதுதானே மூலாதாரம்
திட்டமிடு உற்பத்தித் திறனைத் தீட்டியெடு
மதிநுட்பத்தையும் மனதில் கொண்டால்
இறக்குமதியையும் குறைத்துக் கொள்ளலாமே
அன்னிய உறவில் கண்ணியம் காத்திடின்
எண்ணியச் செயலில் ஏற்றம் கண்டிடலாம்
பின்னிய இராஜதந்திர முடிச்சுகளை பிணைமுறியிலிடாதே
மாற்றுத்திறனாளிகளும் உழைப்பிற்கான போராளிகள் தானே
உழைப்புக்கு ஏது வயது
பால்நிலை சமத்துவத்தையும் சரியாகப் பேணு
இலாபத்தையும் முழுமையாகத் தேடு
அநீதியான செயல்களை அடியோடு ஒழித்திடல் நன்றே
ஒன்றான சமூகமொன்றை உருவகித்துக் காட்டு
சரியானச் சம்பளத்தை முறையாகக் கூட்டு
கூட்டுறவு முறைகளைக் கொண்டு பணத்தை
சிறுகச் சிறுக சேமித்து வை
சிந்தனைக்குள் அதையென்றுமே பூட்டி வை
சரித்திரத்திலும் இடம் ஒதுக்கி வை
சந்ததிக்கும் அதைச் சொல்லி வை
செங்கோல் ஆட்சியும்;
நல் சிந்தனையில்; மாற்றம் வரும்
பொறுப்புடன் செயலாற்றிடின்
எதிர்பார்ப்பு ஆண்டுகளில்
ஏற்றத்தாழ்வுகளையும் குறைத்திடலாமே
by S.VINOTHAN
Comments
Post a Comment