பகுத்தறிவு கொண்ட நாங்கள் அந்த அண்டவெளிக்கே சென்றவர்கள் நாங்கள் இந்த கொரோனாவை கண்டு அஞ்சுவதா
நோயிற்கு பயந்து நின்றால் உலகம் கடுவெளியில் நெருக்கிவிடும்
நிலையான இலக்குகள் எல்லாம் கடுவளியில் அழிந்து விடும்
நம் நிலைபேண்தகு அபிவிருத்தியை நோக்கிச்சென்றால் பட்டினி இல்லா உலகம் ஒன்றை அடுத்த தலைமுறைக்கு கொடுத்து விடும்
களிமண் ரொட்டி திண்ண இனிமேலும் முடியாது இவ் இலக்கை அடையாவிட்டால் இவ்வுலகம் விடியாது
பட்டினி இல்லா நாடுகளை பார் எங்கும் விதைக்க வேண்டும் போஷாக்கின்மை என்ற சொல்லை உலக அகராதியிலேயே எடுக்க வேண்டும்
இருப்பவன் மனம் இறங்கி பசிப்பவனுக்கு ஒருவேளை உணவாவது கொடுக்க வேண்டும்
நிலைபேண்தகு இமயம் அடைய கண்டங்கள் தாண்டியும் உதவ வேண்டும்
போஷாக்கு உணவு பற்றி பூலோகம் எங்கும் விளக்க வேண்டும் பசியில்லா உலகம் காண தேசமெல்லாம் ஒன்றினைந்து விவசாயம் செய்ய வேண்டும்
இலக்கு என்ற வாகை சூட வருடங்கள் ஒன்றும் தூரமில்லை
தேசங்கள் எங்கும் கைக்கோர்த்து நின்றால் கொரோனாவெல்லாம் ஒன்றுமேயில்லை….
பட்டினி பஞ்சங்கள் எல்லாம் நம் தலைமுறையோடு போகட்டும்
நிலைபேண்தகு அபிவிருத்தியை நோக்கி நம் கனவுகள் கூடட்டும் அதை இவ் உலகமே பாடட்டும் ….
by N. Roshan
Comments
Post a Comment