நான் உன்னை மறவேன் ...
கருவின்றி என்னை சுமக்கிறாய்....
கர்வமின்றி அழகாய் சிரிக்கிறாய்...
கபடமின்றி அள்ளிக் கொடுக்கிறாய்...
தாகம் தீர்க்க மழையாய் வந்தாய்...
தேகம் கூச தென்றலாய் மிதந்தாய்...
கண்கள் குளிர நிலவாய் வெளிச்சம் தந்தாய்...
பறவைகளையும் சொந்தமாக்கினாய்...
எண்ணிப்பார்தேன் விந்தையாகினாய்...
எத்தனை அதிசயங்கள் உன்னில் நெளிந்தாய் நதியாக உயர்ந்தாய் மலையாக...
படர்ந்தாய் புல்வெளியாக...
விரிந்தாய் கடலாக...
அத்தனைக்கும் உயிர் தந்தவள் நீயே...
மறவேன் என்றும் உனை இயற்கை தாயே...
by P. Nathiya
140

Comments
Post a Comment