இயற்கை அன்னை கருவிலே
இன்புற்று வாழ்கின்ற நாம்
இயற்கையின் இனிது மறந்து
இயமனாய் மாறியதேனோ!
இயற்கை தந்த வளங்கள் பலவும்
இந்நிலம் முழுதும் பரவிக் கிடக்க
இங்கு மனிதனின் தேவை கூடவே
இயற்கையை சீர்க்குழைப்பதேனோ!
இருப்பதை கொண்டே சிறப்புடன் வாழும் காலம் மறந்து
இயற்கையை அழித்து இன்னலடையும்
இவனோ மதி உள்ள மாமனிதன்?
இவன் மரம் செடி கொடி மண்ணில் இருப்பதாலே
இயற்கையை அழிக்க துடித்தானோ!
இவள் கொண்ட வளத்தினையும்
வீண் கொள்ள வைத்து
நாளுக்கு நாளாய் நீ நாகரிகம் வளர்த்து
இருக்கும் கனிம வளங்களையே கண் அசைவில் சிதைத்து
கண்ட வாயுவையே காற்றினிலே விதைத்து
இன்னினி கண் கண்ட நீரினையும் கானல் நீராக்கி
இவன் புண் கொள்ள செய்தானோ!
நல்மண் கொண்ட நிலத்தினையே
இழைத்த கொடுமைதனில்
ஈன்றெடுத்தேன் கொரோனாவை
கொன்று போக துடிக்கின்றன –
இக்கொடுமை இழைத்த பூச்சிகளை
மாண்டு போகுமோ மனித இனம்
இனியேனும் மனம் திரும்புமோ இயற்கையிடம்..
இதம் தரும் குளிர் காற்று இருக்க
இம்சை தரும் ஏசி எதற்கு?
இறைவனின் படைப்பு இருக்க
இக்கணம் மறையும் செயற்கை எதற்கு?
இமைகள் திறந்து வைத்தாலே
இதயத்தை நிறைக்கும் இயற்கை பரமசுகம்
இளமையின் இங்கிதம் அறிந்த மனிதா
இறக்கும் முன்பே உயிர்த்தெழு
இயற்கை நியதியிலே மீண்டும்
இவ்வளவையும் நேசித்து விடு
இப்போது அல்ல இறக்கும் நொடியிலும் கூட
இமைகள் திறந்து வைத்தாலே
இதயத்தை நிறைக்கும் இயற்கை பரமசுகம்
இளமையின் இங்கிதம் அறிந்த மனிதா
இறக்கும் முன்பே உயிர்த்தெழு
இயற்கை நியதியிலே மீண்டும்
இவ்வளவையும் நேசித்து விடு
இப்போது அல்ல இறக்கும் நொடியிலும் கூட
இருக்கின்ற நோய்கள் அனைத்தும் இவ்வுடலை தாக்க
இதயம் வெடித்து நடைப்பிணமாகி
இறக்க நேரிடுவதேனோ
இயற்கை தரும் உணவு நிரம்பிய போதும்
இச்சையூட்டும் இறைச்சிக்கு அடிப்பணிந்து
இலவசமாக பெற்றுக்கொண்ட கொரோனா
இதுவரை தந்துவிட்டது
இயற்கையின் இனிமையை மறந்ததன் விளைவை…….
by K. Mangalesh
38
Comments
Post a Comment