அன்னையின்றி அமையாத அவனியிலே...
யாம் பெற்ற அருட்கொடையாம்
இயற்கையே.....
முகிலினங்கள் ஒன்றோடொன்று முட்டிமோத
முத்துத்துளியாய் மழை பொழிய
வானை முத்தமிடும் மலையைத் தொட்டு;......
நிலத்துடன் காதல் கொண்டு
சிறு அருவியாய் பொழிய
மழைச்சாரல் மண்ணை முத்தமிட்;டதுவே......
சலசலவென புனல் பெருக்கெடுக்க
சிலுசிலுவென பூங்காற்று மேனியை சிலிர்க்கவைக்க
பட்சி இனங்கள் ஆனந்த கீதம் இசைக்க
பூக்கள் பூத்து குளுங்கி மணம் வீச
பசுமையின் உறைவிடமாகிய வண்ண சோலையிலே
தேனீக்கள் ரீங்காரம் செய்ததுவே......
மண் வாசனையோடு ஓர் பனித்துளி
என் கையை நனைத்திட
கடலலைகள் தாலாட்டி
ஆதவனை உறங்கவைக்க சுடரொளிக்கும் வெண்மதி
பால் வெண்ணிறமாய் வானிலே பவனிவந்து
விண்ணை ஒழிர்வித்ததுவே
ஈசன் அருளிய அவனியிலே
இரு கண் கொண்டு காண இயலா
இயற்கையின் அற்புத காட்சியிது
உள்ளம் உடைந்து மனம் நொந்து
வருத்திடும் மானிடா..... !
இயற்கை கொடையை .....
ஒரே ஒரு தடவை எட்டி பார்த்தாலே போதும்
உன் உள்ளம் தெளிவடைந்து
உத்வேகம் பெற்றிடலாம்
புது ஜனனமும் அடைந்திடலாம் .
அதனுடன் நீ ஒன்றித்து விட்டால்
பிறப்பதும் உன்னில் இறப்பதும் உன்னில்
நிலையாய் வாழ்வதும் உன்னில்
நிரந்தரமற்;ற அவனியிலே...
நிரந்தரமானது உன்
மாற்றங்களும் நீயும் மட்டுமே
இனிய இயற்கையே..
கல்லுக்குள் ஈரம் அருவியாய் கசிய
கல்லுக்குள் மரமும் தென்றல் பேச
இயற்கையும் காதல் கடிதம் எழுதியது
பச்சை நிறத்தில் மலையின் புரட்சி
இது இயற்கையின் ஆட்சி
இன்னும் ஒரு ஜனனம் பெற்று
உன்னுடன் வாழ்ந்திட வரம் தருவாயா ?
இன்பந்தரும் இயற்கையே.....
by J. Selviya
அருமை
ReplyDelete