நாம் வெற்றியடைவதை நம்மைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது என நம்ப வேண்டும். இதயம் இல்லா இணைய இயந்திரத்தில் நாம் கண்டெடுக்கும் நல்ல இதயம் கொண்டது நட்பாக இருக்க வேண்டும் என நினைத்திட வேண்டும்.
வாழ்க்கையில் ஜெயிக்கவேண்டும் என்றால் முதலில் நம்மை இழிவாக நினைப்பவர்களை நம்மிடம் என்றுமே குறை மட்டும் காண்பவர்களை நம் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கிட வேண்டும்.
நம் வேலைகளில் வேகத்தடைகள் இருக்கலாம் ஆனாலும் அதன் மேல் நாம் கொண்ட நம்பிக்கையில் சிறிதும் மனத்தடை வரக்கூடாதென நினைத்திட வேண்டும். இவை அனைத்தையும் நாம் மறவாவிட்டால் நம் வாழ்க்கை நன்று மலரும்.
நாம் எப்படி நடக்கிறோம் என்பது முக்கியம் இல்லை. மெதுவாக மிதந்தாலும் சரி. வேகமாக விரைந்தாலும் சரி. ஆனால் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தன்னம்பிக்கை என்ற ஒன்றின் மீது முன்னோக்கி இருந்தால் எமது நாட்டின் பொருளாதாரமும் வானோங்கி வளர்ச்சிப்பெறும்.
by V. Pramila
Comments
Post a Comment