சுற்றித் திரிந்த இடமெல்லாம்
சுடுகாடாய் மாற்றிவிட்டாய் !
அண்ணன் தம்பி போல பழகியவரையெல்லாம்
எதிரியாக பார்க்க வைத்தாய் !
பசிக்கு உணவு தேடிய உடல்களையெல்லாம்
உனக்கு இறையாக்கி கொண்டாய் !
இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது என்று
சுற்;றித் திரிந்து கொண்டிருக்கிறாய் இங்கு !
உருவத்தில் நீ சிறியவனாக இருந்தாலும்
நீ மிகக் கொடியவன் என உணர்த்திவிட்டாய்
எம் மக்களை சாய்த்து....
உனை கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும்
நீ யார் என் காட்டிவிட்டாய்....
உன் முகத்திரையை...
நீ சென்ற இடமெல்லாம் அழுகுரல் கேட்கிறதே !
நீ அடைக்களம் கேட்ட இடமெல்லாம்
நிரம்பிப்போய் கிடக்கிறதே உன் தொற்றால் !..
எத்திசையிலும் உனை காண முடிகிறதே..!
உனக்கு என்னதான் வேண்டும் எங்களிடம்...!
முன்னோர்கள் சொல்லி வைத்த தர்மங்களை
மதித்து நடந்திருந்தால் எங்களுக்கு ஏன் இந்த நிலைமை..
உனை சொல்லிக் குற்றமில்லை
எங்களைதான் சொல்ல வேண்டும் ...!
விஞ்ஞானம் என்று சொல்லி கொண்டு
மெய்ஞானத்தை மறந்து ஆடிநோம்...
அதற்கு பலனாகத்தான் அனுபவிக்கிறோம்
உனை வாங்கிக் கொண்டு...!
என் நாடு > என் வீடு என்று எல்ல போட்டு
வாழ்ந்த எங்களுக்கு ....
எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என
உணர்த்திவிட்டாய் இந்த நிமிடத்தில்...!
இது தான் எங்களுக்கு அலாரம். இதில்
நாங்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால்
உனை போல எத்தனை நோய்களிடம் மாட்டிக்கொள்ளுமோ
எங்கள் பூமி..!
சத்தம் இல்லாத உன் போர்
எங்களை அடக்கிவிட்டது !
யுத்தம் இல்லாத உன் போர்
எங்களை பலவீனத்தை புரிய வைத்து விட்டது !
உனைத் திட்டுவதற்கோ உனை சாபமிடுவதற்கோ
எங்களுக்கு உரிமையில்லை என நினைக்கிறோம் !
ஏன் என்றால் ? உன்னை நாங்கள் தான் உருவாக்கினோம்
நாங்களே முதள் குற்றவாளி என ஒப்புக்கொள்கிறோம் !
உனை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம் !
நீ வந்த வழி யாருக்கும் தெரியாது !
நீ செல்லும் வழி யாருக்கும் தெரியாமல் சென்றுவிடு !
எங்களை நிம்மதியாக வாழவிடு.
கொரோனாவே .....!!
by A. Saradha
Comments
Post a Comment